1⁽தம் மகனிடம் அன்பு␢ கொண்டிருக்கும் தந்தை அவனை␢ இடைவிடாது கண்டிப்பார்;␢ அப்போது அவர்␢ தம் இறுதி நாள்களில்␢ மகிழ்வோடு இருப்பார்.⁾
2⁽தம் மகனை நன்னெறியில்␢ பயிற்றுவிப்பவர் அவனால்␢ நம்மை அடைவார்; தமக்கு␢ அறிமுகமானவர்களிடையே␢ அவனைப் பற்றிப் பெருமைப்படுவார்.⁾
3⁽தம் மகனுக்குக் கல்வி புகட்டும்␢ தந்தை எதிரியைப் பொறாமை␢ அடையச் செய்கிறார்; தம்␢ நண்பர்கள்முன் அவன்␢ பொருட்டுப் பெரும் மகிழ்ச்சி அடைவார்.⁾
4⁽அவனுடைய தந்தை இறந்தும்␢ இறவாதவோர்போல் ஆவார்;␢ ஏனெனில் தம் போன்றவனைத்␢ தமக்குப்பின் விட்டுச்சென்றுள்ளார்.⁾
5⁽தாம் வாழ்ந்தபோது தந்தை␢ மகனைப் பார்த்தார், மகிழ்ந்தார்;␢ தம் இறப்பிலும் அவர் வருத்தப்படவில்லை.⁾
6⁽தம் எதிரிகளைப் பழிவாங்குபவனை,␢ தம் நண்பர்களுக்குக்␢ கைம்மாறு செய்பவனை␢ அவர் விட்டுச்சென்றுள்ளார்.⁾
7⁽தம் மகனுக்கு மிகுதியாகச்␢ செல்வம் கொடுப்பவர்.␢ அவன் சிணுங்குவதற்கெல்லாம்␢ உள்ளம் உளைவார்;␢ அவன் சிறு கூச்சலிடும்␢ போதெல்லாம் அவர் கலக்கம்␢ அடைவார்.⁾
8⁽பயிற்றுவிக்கப்படாத குதிரை␢ முரட்டுத்தனம் காட்டுகிறது;␢ கட்டுப்பாடில்லாத மகன்␢ அடக்கமற்றவன் ஆகிறான்.⁾
9⁽உன் குழந்தைக்குச்␢ செல்லம் கொடு;␢ அது உன்னை அச்சுறுத்தும்.␢ அதனுடன் விளையாடு;␢ அது உன்னை வருத்தும்.⁾
10⁽அதனுடன் சேர்ந்து சிரிக்காதே;␢ இல்லையேல் நீயும் சேர்ந்து␢ துன்புறுவாய்; இறுதியில்␢ அல்லற்படுவாய்.⁾
11⁽இளைஞனாய் இருக்கும்போதே␢ அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே;␢ [அவனுடைய தவறுகளைக்␢ கண்டு கொள்ளாமல் இராதே.⁾
12⁽இளைஞனாய் இருக்கும்போதே␢ அவனை அடக்கி வளர்.]␢ சிறுவனாய் இருக்கும்போதே␢ அவனை அடித்து வளர்;␢ இல்லையேல் அவன் அடங்காதவனும்␢ கீழ்ப்படியாதவனுமாக␢ மாறுவான். [அவனால்␢ உனக்கு மனவருத்தமே உண்டாகும்.]⁾
13⁽உன் மகனுக்கு நற்பயிற்சி அளி;␢ அவனைப் பயன்படுத்த␢ முயற்சி செய்.␢ அப்போது அவனது␢ வெட்கங்கெட்ட நடத்தையால்␢ நீ வருந்தமாட்டாய்.⁾
14⁽உடல்நலமும் வலிமையும்␢ கொண்ட ஏழையர் நோயுற்ற␢ செல்வரினும் மேலானோர்⁾
15⁽உடல்நலமும் உறுதியும்␢ பொன்னைவிடச் சிறந்தவை;␢ கட்டமைந்த உடல் அளவற்ற␢ செல்வத்தினும் சிறந்தது.⁾
16⁽உடல்நலத்தைவிட உயர்ந்த␢ செல்வமில்லை; உள்ள␢ மகிழ்ச்சியைவிட மேலான␢ இன்பமில்லை.⁾
17⁽கசப்பான வாழ்க்கையை␢ விடச் சாவே சிறந்தது;␢ தீராத நோயைவிட நிலைத்த␢ ஓய்வே உயர்ந்தது.⁾
18⁽மூடிய வாய்மீது பொழிந்த␢ நல்ல பொருள்கள் கல்லறையில்␢ வைத்த உணவுப்படையல்␢ போன்றவை.⁾
19⁽காணிக்கையால் சிலைக்கு␢ வரும் பயன் என்ன?␢ அது உண்பதுமில்லை, நுகர்வதுமில்லை.␢ ஆண்டவரால் தண்டிக்கப்படுவோரும்␢ இதைப் போன்றோரே.⁾
20⁽கன்னிப்பெண்ணை அண்ணகன்␢ அணைத்துப் பெருமூச்சு␢ விடுதல்போல் அவர்கள்␢ கண்ணால் காண்கிறார்கள்;␢ பெருமூச்சு விடுகிறார்கள்.⁾
21⁽உன் உள்ளத்திற்கு␢ வருத்தம் விளைவிக்காதே;␢ உன் திட்டங்களால்␢ உன்னையே துன்பத்துக்கு␢ உட்படுத்தாதே.⁾
22⁽உள்ள மகிழ்ச்சியே மனிதரை␢ வாழ வைக்கிறது;␢ அகமகிழ்வே மானிடரின்␢ வாழ்நாளை வளரச் செய்கிறது.⁾
23⁽உன் உள்ளத்திற்கு உவகையூட்டு;␢ உன்னையே தேற்றிக்கொள்;␢ வருத்தத்தை உன்னிடமிருந்து␢ தொலைவில் விரட்டி விடு.␢ வருத்தம் பலரை அழித்திருக்கிறது;␢ அதனால் எவ்வகைப் பயனுமில்லை.⁾
24⁽பொறாமையும் சீற்றமும்␢ உன் வாழ்நாளைக் குறைக்கும்;␢ கவலை, உரிய காலத்திற்கு முன்பே␢ முதுமையை வருவிக்கும்.⁾
25⁽மகிழ்ச்சியான நல்ல உள்ளம்␢ உணவுப் பொருள்களைச்␢ சுவைத்து இன்புறுகிறது.⁾