சீராக் 19

முந்திய அடுத்த
1⁽என்றும் வாழும் ஆண்டவரே␢ அண்டம் முழுவதையும் படைத்தார்.⁾ 2⁽ஆண்டவர் ஒருவரே␢ நீதியுள்ளவர்.␢ *[அவரைத்தவிர வேறு␢ எவரும் இலர்.⁾ 3⁽அவர் தம் கையின் அசைவினால்␢ உலகை நெறிப்படுத்துகிறார்.␢ எல்லாம் அவருடைய திருவுளத்திற்கு␢ அடிபணிகின்றன. அவர்␢ எல்லாவற்றிற்கும் மன்னர்;␢ தம் ஆற்றலால் தூயவற்றைத்␢ தூய்மை அல்லாதவற்றினின்று␢ பிரித்துவைக்கிறார்.]⁾ 4⁽அவர் தம் செயல்களை அறிவிக்க␢ யாருக்கும் அதிகாரம் கொடுக்கவில்லை;␢ அவருடைய அரும்பெரும்␢ செயல்களைக் கண்டுபிடிப்பவர் யார்?⁾ 5⁽அவரது பேராற்றலை எவரால்␢ அளவிட்டுக் கூற முடியும்?␢ அவரது இரக்கத்தை எவரால்␢ முழுவதும் விரித்துரைக்க இயலும்?⁾ 6⁽ஆண்டவரின் வியத்தகு␢ செயல்களைக் குறைக்கவோ␢ கூட்டவோ எவராலும் முடியாது;␢ அவற்றை ஆழ்ந்தறிய எவராலும்␢ இயலாது.⁾ 7⁽மனிதர் அவற்றைக் கண்டுணர்ந்து␢ விட்டதாக எண்ணும்போதுதான்␢ கண்டுணரவே தொடங்குகின்றனர்;␢ அவற்றைக் கண்டுணர்ந்து␢ முடிக்கும்போது மேலும்␢ குழப்பம் அடைகின்றனர்.⁾ 8⁽மனிதர் என்போர் யார்?␢ அவர்களால் ஏற்படும்␢ நன்மைகள் என்ன?␢ அவர்களிடம் இருக்கும்␢ நன்மைகள் யாவை?தீமைகள் யாவை?⁾ 9⁽மனிதருடைய வாழ்நாள்களின்␢ எண்ணிக்கை கூடிப்போனால்␢ நூறு ஆண்டுகள்.⁾ 10⁽நித்தியத்தோடு ஒப்பிடும்போது␢ அந்தச் சில ஆண்டுகள்␢ கடல்நீரில் ஒருதுளி போன்றவை.␢ கடல் மணலில் ஒரு துகள் போன்றவை.⁾ 11⁽இதனால்தான் ஆண்டவர்␢ அவர்கள்மீது பொறுமையுடன்␢ இருக்கிறார்; தம் இரக்கத்தை␢ அவர்கள்மீது பொழிக்கிறார்.⁾ 12⁽அவர்களின் அழிவு இரங்கத்தக்கது␢ என அவர் கண்டறிகிறார்;␢ அளவுக்கு மிகுதியாகவே␢ அவர்களை மன்னிக்கிறார்.⁾ 13⁽மனிதர் அடுத்திருப்பவருக்கே␢ இரக்கம் காட்டுகின்றனர்;␢ ஆண்டவர் எல்லா உயிருக்கும்␢ இரக்கம் காட்டுகிறார்;␢ அவற்றைக் கண்டிக்கிறார்;␢ பயிற்றுவிக்கிறார்; அவற்றுக்குக்␢ கற்றுக் கொடுக்கிறார்;␢ இடையர்கள் தங்கள்␢ மந்தையைத் தங்களிடம்␢ மீண்டும் அழைத்துக்கொள்வது␢ போல் அவரும் செய்கிறார்.⁾ 14⁽தாம் அளிக்கும் நற்பயிற்சியை␢ ஏற்றுக்கொள்வோர்மீதும்␢ தம் தீர்ப்புகளை ஆர்வத்துடன்␢ தேடுவோர்மீதும் இரக்கம் காட்டுகிறார்.⁾ 15⁽குழந்தாய், நீ நன்மை␢ செய்யும்போது கடிந்துகொள்ளாதே;␢ கொடைகள் வழங்கும்போது␢ புண்படுத்தும் சொற்களைக் கூறாதே.⁾ 16⁽கடும் வெப்பத்தைப் பனி␢ தணிக்கும் அன்றோ?␢ உனது சொல் கொடையைவிடச்␢ சிறந்தது.⁾ 17⁽ஒரு சொல் நல்ல கொடையைவிட␢ மேலானது அன்றோ?␢ கனிவுள்ள மனிதரிடம்␢ இவ்விரண்டுமே காணப்படும்.⁾ 18⁽அறிவிலிகள் கடுஞ்சொல்␢ கூறுவார்கள்.␢ மனம் ஒப்பாது கொடுக்கும் ஈகை␢ அதனைப் பெறுவோருக்கு␢ எரிச்சலையே கொடுக்கும்.⁾ 19⁽கற்றபின் பேசு;␢ நோய் வருமுன்␢ உடல்நலம் பேணு.⁾ 20⁽ஆண்டவரின் தீர்ப்பு␢ வருமுன் உன்னையே␢ ஆராய்ந்து பார்; கடவுள்␢ சந்திக்க வரும் நாளில்␢ நீ மன்னிப்பு பெறுவாய்.⁾ 21⁽நோய்வாய்ப்படுமுன் உன்னையே␢ தாழ்த்திடு; பாவம்␢ செய்தபின் மனந்திரும்பு.⁾ 22⁽நேர்ச்சையைத் தகுந்த நேரத்தில்␢ செலுத்த எதுவும் தடையாய்␢ இருக்க வேண்டாம்;␢ அதை நிறைவேற்ற இறக்கும்␢ வரையில் நீ காத்திருக்கவேண்டாம்.⁾ 23⁽நேர்ச்சை செய்யுமுன்␢ அதைக் கடைப்பிடிக்க␢ ஆயத்தம் செய்துகொள்;␢ இதில் ஆண்டவரைச்␢ சோதிப்பவனாய் இருந்துவிடாதே.⁾ 24⁽இறுதி நாளில் வரவிருக்கும்␢ அவரது சீற்றத்தை␢ நினைவில் கொள்;␢ அவர் தம் முகத்தைத்␢ திருப்பிக்கொண்டு␢ பழிவாங்கும் நேரத்தையும்␢ எண்ணிப்பார்.⁾ 25⁽நீ உண்டு நிறைவுற்றிருக்கும்போது,␢ பட்டினி கிடந்த காலத்தை␢ நினைவில் கொள்;␢ உனது செல்வச் செழிப்பின்␢ காலத்தில், உன் வறுமை,␢ தேவையின் காலத்தை எண்ணிப்பார்.⁾ 26⁽காலை தொடங்கி மாலைக்குள்␢ காலங்கள் மாறுகின்றன;␢ ஆண்டவர் திருமுன் அனைத்தும்␢ விரைகின்றன.⁾ 27⁽ஞானிகள் எல்லாவற்றிலும்␢ எச்சரிக்கையாய் இருக்கின்றார்கள்;␢ பாவம் பெருகும்பொழுது␢ தீச்செயல்களினின்று␢ தம்மைக் காத்துக் கொள்கின்றார்கள்.⁾ 28⁽அறிவுக்கூர்மை படைத்தோர்␢ அனைவரும் ஞானத்தை அறிவர்;␢ அதை அடைந்தோரைப் போற்றுவர்.⁾ 29⁽நாவன்மை படைத்தோர்␢ ஞானியர் ஆகின்றனர்;␢ பொருத்தமான நீதிமொழிகளைப்␢ பொழிகின்றனர்.⁾ 30⁽கீழான உணர்வுகளின்படி␢ நடவாதே; சிற்றின்ப␢ உணர்வுகளைக் கட்டுப்படுத்து.⁾ 31⁽கீழான உணர்வுகளில்␢ இன்பம் காண உன்␢ உள்ளத்தை அனுமதிக்கும்போது␢ உன் பகைவரின் நகைப்புக்கு␢ அவை உன்னை உள்ளாக்கும்.⁾ 32⁽அளவு மீறி உண்டு குடிப்பதில்␢ களிகூராதே;␢ அதனால் ஏற்படும் செலவு␢ உன்னை ஏழையாக மாற்றிவிடும்.⁾ 33⁽உன் பணப்பையில் ஒன்றும்␢ இல்லாதபோது கடன் வாங்கி␢ விருந்துண்டு ஏழையாகாதே.⁾