சீராக் 40

முந்திய அடுத்த
1⁽ஆனால் உன்னத இறைவனின்␢ திருச்சட்டத்தைப் படிப்பதில்␢ மனத்தைச் செலுத்துவோர்␢ தங்கள் முன்னோர் எல்லாருடைய␢ ஞானத்தையும் தேடுவர்;␢ இறைவாக்குகளைப்␢ படிப்பதில் ஈடுபட்டிருப்பர்.⁾ 2⁽பேர்பெற்றவர்களின் உரைகளைக்␢ காப்பாற்றுவர்;␢ உவமைகளின் நுட்பங்களை␢ ஊடுருவிக் காண்பர்.⁾ 3⁽பழமொழிகளின்␢ உட்பொருளைத் தேடுவர்;␢ உவமைகளில் பொதிந்துள்ள␢ புதிர்களை எளிதில்␢ புரிந்துகொள்வர்.⁾ 4⁽பெரியோர்கள் நடுவே␢ பணியில் அமர்வர்;␢ ஆள்வோர் முன்னிலையில்␢ தோன்றுவர்; அயல்நாடுகளில்␢ பயணம் செய்வர்;␢ மனிதரிடம் உள்ள நன்மை␢ தீமைகளை ஆய்ந்தறிவர்.⁾ 5⁽வைகறையில் துயிலெழுவர்;␢ தங்களைப் படைத்த ஆண்டவரிடம்␢ தங்கள் உள்ளத்தைக் கையளிப்பர்;␢ உன்னத இறைவன் திருமுன்␢ மன்றாடுவர்;␢ வாய் திறந்து வேண்டுவர்;␢ தங்கள் பாவங்களுக்காகக்␢ கெஞ்சி மன்றாடுவர்.⁾ 6⁽மாண்புமிகு ஆண்டவர் விரும்பினால்,␢ அவர்கள் அறிவுக்கூர்மையால்␢ நிரப்பப்படுவார்கள்; தங்கள்␢ ஞானத்தின் மொழிகளைப்␢ பொழிவார்கள்; தங்கள்␢ வேண்டுதலில் ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்துவார்கள்.⁾ 7⁽தங்கள் அறிவுரையையும்␢ அறிவாற்றலையும் நேரிய␢ வழியில் செலுத்துவார்கள்;␢ ஆண்டவருடைய␢ மறைபொருள்களைச்␢ சிந்தித்துப் பார்ப்பார்கள்.⁾ 8⁽தாங்கள் கற்றறிந்த நற்பயிற்சியை␢ விளக்கிக் காட்டுவார்கள்;␢ ஆண்டவருடைய␢ உடன்படிக்கையின் திருச்சட்டத்தில்␢ பெருமை கொள்வார்கள்.⁾ 9⁽பலர் அவர்களுடைய␢ அறிவுக் கூர்மையைப்␢ பாராட்டுவர்; அவர்களது␢ புகழ் ஒரு நாளும்␢ நினைவிலிருந்து அகலாது;␢ அவர்களுடைய நினைவு␢ மறையாது; தலைமுறை␢ தலைமுறைக்கும் அவர்களது␢ பெயர் வாழும்.⁾ 10⁽நாடுகள் அவர்களது␢ ஞானத்தை எடுத்துரைக்கும்.␢ மக்கள் சபையும் அவர்களது␢ புகழ்ச்சியை அறிவிக்கும்.⁾ 11⁽அவர்கள் நீண்ட நாள்␢ வாழ்ந்தால், ஓராயிரம்␢ பெயர்களைவிடப் புகழ்மிக்க␢ பெயரை விட்டுச்செல்வார்கள்;␢ இறந்தாலும் அப்பெயரே␢ அவர்களுக்குப் போதுமானது.⁾ 12⁽நான் சிந்தித்தவற்றை␢ இன்னும் எடுத்துரைப்பேன்;␢ முழு மதி போன்று அவற்றால்␢ நிறைந்துள்ளேன்.⁾ 13⁽பற்றுறுதியுள்ள மக்களே,␢ நான் சொல்வதைக் கேளுங்கள்;␢ நீரோடை அருகில் வளரும்␢ ரோசாவைப்போன்று␢ மலர்ந்து விரியுங்கள்.⁾ 14⁽சாம்பிராணி போன்று␢ நறுமணம் பரப்புங்கள்;␢ லீலிபோன்று மலருங்கள்;␢ நறுமணம் வீசுங்கள்;␢ புகழ்ப்பாடல் பாடுங்கள்;␢ ஆண்டவருடைய எல்லாச்␢ செயல்களுக்காகவும்␢ அவரைப் போற்றுங்கள்.⁾ 15⁽அவருடைய பெயரை␢ மாட்சிமைப்படுத்துங்கள்;␢ உதடுகளில் எழும்␢ இன்னிசையாலும் யாழ்களாலும்␢ அவருடைய புகழை அறிவியுங்கள்;␢ அறிவிக்கும்போது␢ இவ்வாறு சொல்லுங்கள்;⁾ 16⁽“ஆண்டவருடைய␢ செயல்களெல்லாமே மிக நல்லவை;␢ அவருடைய கட்டளையெல்லாம்␢ குறித்த நேரத்தில் நிறைவேறும்.”␢ ‘இது என்ன?; அது எதற்கு?’ என␢ யாரும் கூறக் கூடாது;␢ எல்லாவற்றுக்கும் குறித்த நேரத்தில்␢ விளக்கம் கொடுக்கப்படும்.⁾ 17⁽அவருடைய சொல்லால்␢ தண்ணீர் திரண்டு நின்றது;␢ அவருடைய வாய்மொழியால்␢ நீர்த்தேக்கம் உருவாயிற்று.⁾ 18⁽அவருடைய ஆணையால்␢ அவர் விரும்பியதெல்லாம்␢ நிறைவேறிற்று. மீட்பளிக்கும்␢ அவரது ஆற்றலைக்␢ கட்டுப்படுத்துகிறவர் எவருமில்லை.⁾ 19⁽எல்லா மனிதர்களின் செயல்களும்␢ அவர் திருமுன் இருக்கின்றன;␢ அவருடைய கண்களுக்கு␢ மறைவானது ஏதுமில்லை.⁾ 20⁽என்றென்றும் அவர்␢ பார்த்துக் கொண்டிருக்கிறார்;␢ அவருக்கு அரியது ஒன்றுமில்லை.⁾ 21⁽‘இது என்ன? அது எதற்கு?’ என␢ யாரும் கூறக்கூடாது;␢ ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்தோடு␢ படைக்கப்பட்டுள்ளது.⁾ 22⁽ஆண்டவருடைய ஆசி␢ ஆறுபோலப் பெருக்கெடுக்கிறது;␢ காய்ந்த நிலத்தை␢ வெள்ளப் பெருக்குப்போல␢ நனைக்கிறது.⁾ 23⁽நன்னீரை அவர் உப்புநீராக␢ மாற்றியதுபோல␢ நாடுகள் அவருடைய சினத்தை␢ உரிமையாக்கிக்கொள்ளும்.⁾ 24⁽அவருடைய வழிகள்␢ தூயவர்களுக்கு நேரியனவாய்␢ இருக்கின்றன;␢ நெறிகெட்டவர்களுக்கு␢ இடறலாய் இருக்கின்றன.⁾ 25⁽தொடக்கத்திலிருந்தே␢ நல்லவை நல்லவர்களுக்காகப்␢ படைக்கப்பட்டுள்ளன;␢ தீயவை பாவிகளுக்காகப்␢ படைக்கப்பட்டுள்ளன.⁾ 26⁽நீர், தீ, இரும்பு, உப்பு,␢ கோதுமை மாவு, பால்,␢ தேன், திராட்சை இரசம்,␢ எண்ணெய், உடை ஆகியவை␢ மனித வாழ்வின் அடிப்படைத்␢ தேவைகளாகும்.⁾ 27⁽இவையெல்லாம்␢ இறைப்பற்றுள்ளோருக்கு␢ நல்லவையாகும்; பாவிகளுக்குத்␢ தீயவையாக மாற்றப்படும்.⁾ 28⁽தண்டனைக்காக அவர் சில␢ காற்றுகளைப் படைத்தார்;␢ அவருடைய சீற்றத்தால் அவை␢ கொடிய வாதைகளாக மாறின.␢ முடிவு காலத்தில் அவை␢ தம் வலிமையைக் கொட்டி,␢ தம்மைப் படைத்தவருடைய␢ சீற்றத்தைத் தணிக்கும்.⁾ 29⁽தீ, கல்மழை, பஞ்சம், சாவு␢ ஆகியவையெல்லாம்␢ தண்டனைக்காகப் படைக்கப்பட்டவை.⁾ 30⁽காட்டு விலங்குகளின் பற்கள்,␢ தேள்கள், நச்சுப்பாம்புகள்,␢ இறைப்பற்றில்லாதோரை␢ அழித்துத் தண்டிக்கும் வாள்⁾ 31⁽ஆகியவை ஆண்டவருடைய␢ கட்டளைகளில் மகிழ்ச்சி கொள்ளும்;␢ அவருடைய பணிக்காக மண்மீது␢ ஆயத்தமாய் இருக்கும்;␢ தமக்குரிய காலம் வரும்போது␢ அவருடைய சொல்லை மீறா.⁾ 32⁽இதன் பொருட்டே நான்␢ தொடக்கமுதல் உறுதியாய்␢ இருந்துள்ளேன்;␢ இதைப்பற்றிச் சிந்தித்தேன்;␢ எழுத்தில் விட்டுச்செல்கிறேன்.⁾ 33⁽ஆண்டவருடைய␢ செயல்களெல்லாம் நல்லவை.␢ ஒவ்வொரு தேவையையும்␢ குறித்த காலத்தில் அவர்␢ நிறைவு செய்வார்.⁾ 34⁽‘இது அதைவிடக் கெட்டது’ என␢ யாரும் சொல்ல முடியாது.␢ எல்லாம் அதனதன் காலத்தில்␢ நல்லவை என விளங்கும்.⁾ 35⁽இப்போது முழு உள்ளத்தோடும்␢ ஆண்டவருக்கு வாயாரப்␢ புகழ் பாடுங்கள்; அவருடைய␢ பெயரைப் போற்றுங்கள்.⁾