சீராக் 44

முந்திய அடுத்த
1⁽உயர் வானத்தின் சிறப்பு தெளிந்த␢ வான்வெளியே;␢ வானகத்தின் தோற்றம்␢ அதன் மாட்சியின் காட்சியே.⁾ 2⁽கதிரவன் தோன்றி␢ எழும்போதே அறிவிக்கிறது.␢ உன்னத இறைவனின்␢ கைவேலையாகிய அது␢ எத்துணை வியப்புக்கு உரியது!⁾ 3⁽அது நண்பகலில் நிலத்தைச்␢ சுட்டெரிக்கிறது; அதனுடைய␢ கடும் வெப்பத்தைத் தாங்கக்␢ கூடியவர் எவர்?⁾ 4⁽சூளையைக் கவனிப்போர்␢ கடும் வெப்பத்தில் வேலை␢ செய்கின்றனர். கதிரவன்␢ அதைவிட மும்மடங்காய்␢ மலையை எரிக்கிறது; நெருப்புக்␢ கதிர்களை வீசுகிறது; தன்னுடைய␢ ஒளிக் கதிர்களால் கண்களைக்␢ குருடாக்குகிறது.⁾ 5⁽அதனைப் படைத்தவர் மாபெரும்␢ ஆண்டவர்! அவருடைய␢ கட்டளையால் அது தன் வழியே␢ விரைந்து செல்கிறது.⁾ 6⁽நிலவு எப்போதும் குறித்த␢ காலத்தில் நேரத்தையும் காலத்தின்␢ குறியையும் காட்டுகிறது.⁾ 7⁽நிலவைக்கொண்டே␢ திருநாள்கள் குறிக்கப்படுகின்றன.␢ அது வளர்ந்து முழுமை␢ அடைந்தபின் தேய்கிறது.⁾ 8⁽அதனைக்கொண்டே␢ மாதங்கள் பெயரிடப்படுகின்றன.␢ அது வளர்மதியாக மாறும் வகை␢ எத்துணை வியப்புக்கு உரியது!␢ வான்படைகளுக்கு அடையாள␢ ஒளியாக நின்று வான்வெளியில்␢ அது மிளிர்கின்றது.⁾ 9⁽விண்மீன்களின் மாட்சியே␢ வானத்துக்கு அழகு;␢ உயர் வானத்தில்␢ இருக்கும் ஆண்டவருடைய␢ ஒளி மிகுந்த அணிகலன்.⁾ 10⁽தூய இறைவனின் கட்டளைப்படி␢ அவை ஒழுங்காக இயங்குகின்றன;␢ தங்களது விழிப்பில் அவை␢ அயர்வதில்லை.⁾ 11⁽வானவில்லைப் பார்;␢ அதை உண்டாக்கினவரைப் போற்று;␢ அது ஒளிரும்போது எழில்␢ மிகந்ததாய் இருக்கின்றது.⁾ 12⁽தனது மாட்சி மிகுந்த வில்லால்␢ வானத்தை அது சுற்றி வளைக்கிறது;␢ உன்னத இறைவனின் கைகளே␢ அதை விரித்துவைத்தன.⁾ 13⁽ஆண்டவருடைய கட்டளைப்படி␢ பனிபெய்கிறது; அவர்தம்␢ முடிவுகளைச் செயல்படுத்த␢ மின்னல்கள் விரைகின்றன.⁾ 14⁽ஆகையால் கருவூலங்கள்␢ திறக்கப்படுகின்றன;␢ பறவைகளைப்போல␢ முகில்கள் பறக்கின்றன.⁾ 15⁽அவர் தமது வலிமையால்␢ முகில்களுக்கு வலிமையூட்டுகிறார்;␢ ஆலங்கட்டிகள் உடைந்து␢ சிதறுகின்றன.⁾ 16⁽அவர் தோன்றும்போது␢ மலைகள் நடுங்குகின்றன;␢ அவருடைய திருவுளத்தால்␢ தென்றல் வீசுகிறது.⁾ 17⁽அவரது இடியின் ஓசை நிலத்தைத்.␢ துன்பத்தால் நெளியச் செய்கிறது;␢ வடக்கிலிருந்து வரும் புயற்காற்றும்␢ சூறாவளியும் இவ்வாறே செய்கின்றன.⁾ 18⁽கீழே இறங்கும் பறவையைப்போல␢ பனியை அவர் தூவிவிடுகிறார்.␢ உட்கார வரும் வெட்டுக்கிளியைப்␢ போல் அது இறங்குகிறது;␢ அதன் வெண்மையின் அழகைக்␢ கண்டு கண் வியப்படைகிறது;␢ அது பொழிவதைக் கண்டு␢ உள்ளம் திகைக்கிறது.⁾ 19⁽அவர் உப்பைப்போல␢ உறைபனியை நிலத்தின்மீது␢ தெளிக்கிறார்; அது உறைகின்றபோது␢ கூர்மையான முட்களைப்போல்␢ ஆகின்றது.⁾ 20⁽வடக்கிலிருந்து வாடைக்␢ காற்று வீசுகின்றது;␢ தண்ணீர்மேல் பனி உறைகின்றது;␢ அது ஒவ்வொரு நீர்நிலைமீதும்␢ தங்குகின்றது; தண்ணீரும் அதை␢ மார்புக்கவசமாய்␢ அணிந்துகொள்கின்றது.⁾ 21⁽காற்று மலைகளை விழுங்குகிறது;␢ பாலைநிலத்தைச் சுட்டெரிக்கிறது;␢ தீயைப்போலப் பசுந்தளிர்களை␢ எரிக்கிறது.⁾ 22⁽ஆனால் கார்முகில்␢ விரைவில் எல்லாவற்றையும்␢ நலமுறச் செய்கிறது;␢ பனித் திவலைகள் விழும்போது␢ வெப்பம் தணிகின்றது.⁾ 23⁽தமது திட்டத்தால் அவர்␢ ஆழ்கடலை அமைதிப்படுத்தினார்;␢ அதில் தீவுகளை அமைத்தார்.⁾ 24⁽கடலில் பயணம் செய்வோர் அதன்␢ பேரிடர்களைக் கூறுகின்றனர்;␢ நாம் காதால் கேட்டு␢ வியப்படைகிறோம்.⁾ 25⁽அங்கே விந்தையான, வியப்புக்குரிய␢ படைப்புகள் உள்ளன;␢ எல்லாவகை உயிரினங்களும்␢ கடலில் வாழும் மிகப் பெரிய␢ விலங்குகளும் உள்ளன.⁾ 26⁽அவரால் அவருடைய தூதர்␢ வெற்றி காண்பர்; அவருடைய␢ சொல் அனைத்தையும்␢ ஒருங்கிணைக்கும்.⁾ 27⁽நான் இன்னும் பல சொல்லலாம்;␢ ஆயினும் முழுமையாய்ச்␢ சொல்ல முடியாது;␢ சுருங்கக் கூறின்,␢ அனைத்தும் அவரே!⁾ 28⁽ஆண்டவரை மாட்சிமைப்படுத்த␢ எங்கிருந்து வலிமை பெறுவோம்?␢ தம் படைப்புகள் எல்லாவற்றையும்விட␢ அவர் பெரியவர்.⁾ 29⁽அவர் அஞ்சுவதற்கு உரியவர்;␢ மிகப் பெரியவர்; அவருடைய␢ வலிமை வியப்புக்குரியது.⁾ 30⁽ஆண்டவரை மாட்சிப்படுத்துங்கள்;␢ உங்களால் முடியும் அளவிற்கு␢ அவரை உயர்த்துங்கள்.␢ ஏனெனில் அவர் அதனினும்␢ மேலானவர்.␢ உங்கள் வலிமையெல்லாம்␢ கூட்டி அவரை உயர்த்துங்கள்;␢ சோர்ந்துவிடாதீர்கள்.␢ ஏனெனில் போதிய அளவு␢ அவரைப் புகழ முடியாது.⁾ 31⁽ஆண்டவரைக் கண்டவர் யார்?␢ அவரைப்பற்றி␢ எடுத்துரைப்பவர் யார்?␢ அவர் உள்ளவாறே␢ அவரைப் புகழ்ந்தேத்துபவர் யார்?⁾ 32⁽இவற்றினும் பெரியன பல␢ மறைந்திருக்கின்றன;␢ அவருடைய படைப்புகளில்␢ சிலவற்றையே நாம் கண்டுள்ளோம்.⁾ 33⁽ஆண்டவரே அனைத்தையும்␢ படைத்துள்ளார்; இறைப்␢ பற்றுள்ளோருக்கு ஞானத்தை␢ அருளியுள்ளார்.⁾