சீராக் 16

முந்திய அடுத்த
1⁽ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர்கள்␢ இவற்றையெல்லாம் செய்வார்கள்;␢ திருச்சட்டத்தைக் கற்றுத்␢ தேர்ந்தவர்கள் ஞானத்தை␢ அடைவார்கள்.⁾ 2⁽தாய் போன்று ஞானம்␢ அவர்களை எதிர்கொள்ளும்;␢ இளம் மணமகள் போல்␢ அவர்களை வரவேற்கும்.⁾ 3⁽அறிவுக் கூர்மை எனும்␢ உணவை அவர்கள் அருந்தக்␢ கொடுக்கும்; ஞானமாகிய␢ நீரைப் பருக அளிக்கும்.⁾ 4⁽அவர்கள் அதன்மீது␢ சாய்ந்து கொள்வார்கள்;␢ விழமாட்டார்கள்;␢ அதைச் சார்ந்து வாழ்பவர்கள்␢ இகழ்ச்சி அடையமாட்டார்கள்.⁾ 5⁽அடுத்திருப்பவருக்கு மேலாக␢ அது அவர்களை உயர்த்தும்;␢ சபை நடுவில் பேச நாவன்மை நல்கும்.⁾ 6⁽அவர்கள் அக்களிப்பையும்␢ மகிழ்ச்சியின் முடியையும்␢ கண்டடைவார்கள்;␢ நிலையான பெயரை␢ உரிமையாக்கிக் கொள்வார்கள்.⁾ 7⁽அறிவிலிகள் ஞானத்தை␢ அடையமாட்டார்கள்;␢ பாவிகள் அதைக் காணமாட்டார்கள்;⁾ 8⁽இறுமாப்பினின்று அது␢ விலகி நிற்கும்;␢ பொய்யர் ஒரு போதும்␢ அதை நினைத்துப்பாரார்.⁾ 9⁽பாவிகளின் வாயிலிருந்து␢ வரும் இறைப்புகழ்ச்சி தகாதது;␢ அது ஆண்டவரிடமிருந்து␢ அவர்களுக்கு அருளப்படவில்லை.⁾ 10⁽ஞானத்தினின்று இறைப்புகழ்ச்சி␢ வெளிப்படவேண்டும்;␢ ஆண்டவரே அதை␢ வளமுறச் செய்வார்.⁾ 11⁽‘ஆண்டவரே␢ என் வீழ்ச்சிக்குக் காரணம்’␢ எனச் சொல்லாதே;␢ தாம் வெறுப்பதை␢ அவர் செய்வதில்லை.⁾ 12⁽‘அவரே என்னை நெறிபிறழச்␢ செய்தார்’ எனக் கூறாதே;␢ பாவிகள் அவருக்குத்␢ தேவையில்லை.⁾ 13⁽ஆண்டவர் அருவருப்புக்குரிய␢ அனைத்தையும் வெறுக்கிறார்;␢ அவருக்கு அஞ்சிநடப்போர்␢ அவற்றை விரும்புவதில்லை.⁾ 14⁽அவரே தொடக்கத்தில்␢ மனிதரை உண்டாக்கினர்;␢ தங்கள் விருப்புரிமையின்படி␢ செயல்பட அவர்களை விட்டுவிட்டார்.⁾ 15⁽நீ விரும்பினால் கட்டளைகளைக்␢ கடைப்பிடி; பற்றுறுதியுடன்␢ நடப்பது உனது விருப்பத்தைப்␢ பொறுத்தது.⁾ 16⁽உனக்குமுன் நீரையும்␢ நெருப்பையும் அவர் வைத்துள்ளார்;␢ உன் கையை நீட்டி உனக்கு␢ விருப்பமானதை எடுத்துக்கொள்.⁾ 17⁽மனிதர்முன் வாழ்வும்␢ சாவும் வைக்கப்பட்டுள்ளன.␢ எதை அவர்கள் விரும்புகிறார்களோ␢ அதுவே அவர்களுக்குக்␢ கொடுக்கப்படும்.⁾ 18⁽ஆண்டவரின் ஞானம் பெரிது.␢ அவர் ஆற்றல் மிக்கவர்;␢ அனைத்தையும் அவர் காண்கிறார்.⁾ 19⁽ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது␢ அவரது பார்வை இருக்கும்;␢ மனிதரின் செயல்கள் அனைத்தையும்␢ அவர் அறிவார்.⁾ 20⁽இறைப்பற்றின்றி இருக்க␢ யாருக்கும் ஆண்டவர்␢ கட்டளையிட்டதில்லை;␢ பாவம் செய்ய எவருக்கும்␢ அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.⁾