1⁽மன்னராகிய ஆண்டவரே,␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ என் மீட்பராகிய கடவுளே,␢ உம்மைப் புகழ்வேன்;␢ உமது பெயருக்கு நன்றி சொல்வேன்.⁾
2⁽நீரே என் பாதுகாவலரும்␢ துணைவரும் ஆனீர்;␢ அழிவிலிருந்து என்␢ உடலைக் காப்பாற்றினீர்;␢ பழிகூறும் நாவின் கண்ணியிலிருந்தும்␢ பொய்யை உருவாக்கும்␢ உதடுகளிலிருந்தும் விடுவித்தீர்;␢ என்னை எதிர்த்து நின்றவர்முன்␢ நீரே என் துணையானீர்;␢ என்னை விடுவித்தீர்.⁾
3⁽உம் இரக்கப் பெருக்கத்திற்கும்␢ பெயருக்கும் ஏற்ப,␢ என்னைக் கடிந்து␢ விழுங்கத் துடித்தவர்களின்␢ பற்களிலிருந்தும் என் உயிரைப்␢ பறிக்கத் தேடியவர்களின்␢ கைகளிலிருந்தும் நான்␢ பட்ட பல துன்பங்களிலிருந்தும்␢ என்னை விடுவித்தீர்.⁾
4⁽என்னைச் சூழ்ந்துகொண்டு␢ திணறடித்த தீயினின்றும்␢ நான் மூட்டிவிடாத நெருப்பின்␢ நடுவினின்றும் என்னைக்␢ காப்பாற்றினீர்.⁾
5⁽பாதாளத்தின் ஆழத்தினின்றும்␢ மாசு படிந்த நாவினின்றும்␢ பொய்ச் சொற்களினின்றும்␢ என்னைக் காத்தீர்.⁾
6⁽மன்னரிடம் பழி சாற்றும்␢ அநீதியான நாவினின்றும்␢ என்னை விடுவித்தீர். என் உயிர்␢ சாவை நெருங்கி வந்தது;␢ என் வாழ்க்கை ஆழ்ந்த␢ பாதாளத்தின் அண்மையில் இருந்தது.⁾
7⁽என்னை எப்புறத்திலும்␢ அவர்கள் வளைத்துக்␢ கொண்டார்கள். எனக்கு உதவி␢ செய்வோர் யாருமில்லை.␢ மனிதரின் உதவியைத் தேடினேன்;␢ உதவ யாருமில்லை.⁾
8⁽அப்போது ஆண்டவரே,␢ உம் இரக்கத்தையும்,␢ என்றென்றும் நீர் ஆற்றிவரும்␢ செயல்களையும் நினைவுகூர்ந்தேன்;␢ உமக்காகக் காத்திருப்போரை␢ எவ்வாறு விடுவிக்கிறீர்␢ என்பதையும் பகைவரின் கையிலிருந்து␢ அவர்களை எவ்வாறு மீட்கிறீர்␢ என்பதையும் எண்ணிப்பார்த்தேன்.⁾
9⁽என் மன்றாட்டுகளை␢ மண்ணுலகிலிருந்து எழுப்பினேன்;␢ சாவிலிருந்து விடுவிக்க வேண்டினேன்.⁾
10⁽‘என் ஆண்டவரின் தந்தாய்,␢ என் துன்ப நாள்களிலும்␢ செருக்குற்றோருக்கு எதிராய்␢ எனக்கு உதவியே இல்லாத␢ காலத்திலும் என்னைப்␢ புறக்கணியாதீர். இடைவிடாமல்␢ உம் பெயரைப் புகழ்வேன்;␢ நன்றிப் பாடல் பாடுவேன்’ என்று␢ சொல்லி ஆண்டவரை வேண்டினேன்.⁾
11⁽என் மன்றாட்டு கேட்கப்பட்டது.␢ அழிவிலிருந்து நீர் என்னை மீட்டீர்;␢ தீங்கு விளையும் நேரத்திலிருந்து␢ என்னை விடுவித்தீர்.⁾
12⁽இதன்பொருட்டு உமக்கு␢ நன்றி கூறுவேன்;␢ உம்மைப் புகழ்வேன்;␢ ஆண்டவருடைய பெயரைப்␢ போற்றுவேன்.⁾
13⁽நான் இளைஞனாய் இருந்தபோது,␢ பயணம் மேற்கொள்ளுமுன்␢ என்னுடைய வேண்டுதலில்␢ வெளிப்படையாய் ஞானத்தைத்␢ தேடினேன்.⁾
14⁽கோவில்முன் அதற்காக␢ மன்றாடினேன்; இறுதிவரை␢ அதைத் தேடிக்கொண்டேயிருப்பேன்.⁾
15⁽திராட்சை மலரும் காலத்திலிருந்து␢ கனியும் காலம்வரை என் உள்ளம்␢ ஞானத்தில் இன்புற்றிருந்தது;␢ என் காலடிகள் நேரிய வழியில்␢ சென்றன. என் இளமையிலிருந்தே␢ ஞானத்தைப் பின்தொடர்ந்தேன்.⁾
16⁽சிறிது நேரமே செவி சாய்த்து␢ அதைப் பெற்றுக் கொண்டேன்;␢ மிகுந்த நற்பயிற்சியை எனக்கெனக்␢ கண்டடைந்தேன்.⁾
17⁽ஞானத்தில் நான் வளர்ச்சி␢ அடைந்தேன்; எனக்கு ஞானம்␢ புகட்டுகிறவர்களுக்கு நான்␢ மாட்சி அளிப்பேன்.⁾
18⁽ஞானத்தைக் கடைப்பிடிக்க␢ முடிவு செய்தேன்; நன்மைமீது␢ பேரார்வம் கொண்டேன்;␢ நான் ஒருபோதும் வெட்கமுறேன்.⁾
19⁽நான் ஞானத்தை அடையப்␢ போராடினேன்; திருச்சட்டத்தைக்␢ கடைப்பிடிப்பதில் கண்டிப்புடன்␢ இருந்தேன்; உயர் வானத்தை␢ நோக்கி என் கைகளை உயர்த்தினேன்;␢ ஞானத்தை நான் இதுவரை␢ அறியாதிருந்தது பற்றிப் புலம்பினேன்.⁾
20⁽அதன்பால் என் உள்ளத்தைச்␢ செலுத்தினேன்; தூய்மையில்␢ அதைக் கண்டுகொண்டேன்;␢ தொடக்கத்திலிருந்தே␢ என் உள்ளத்தை அதன்மேல்␢ பதித்தேன்; இதன்பொருட்டு␢ நான் என்றுமே கைவிடப்படேன்.⁾
21⁽என் உள்மனம் அதைத்␢ தேடி அலைந்தது.␢ இதனால் நான் நல்லதொரு␢ சொத்தினைப் பெற்றுக்␢ கொண்டேன்.⁾
22⁽ஆண்டவர் எனக்கு நாவைப்␢ பரிசாகக் கொடுத்தார்.␢ அதைக்கொண்டு நான்␢ அவரைப் புகழ்வேன்.⁾
23⁽நற்பயிற்சி பெறாதோரே,␢ என் அருகே வாருங்கள்;␢ நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்.⁾
24⁽‘இவற்றில் நாங்கள்␢ குறையுள்ளவர்களாய் இருக்கிறோம்’␢ என ஏன் சொல்கிறீர்கள்? உங்கள் உள்ளம் பெரிதும்␢ தவிப்பது ஏன்?⁾
25⁽நான் வாய் திறந்து சொன்னேன்:␢ ‘பணம் இல்லாமலேயே␢ உங்களுக்கென ஞானத்தைப்␢ பெற்றுக்கொள்ளுங்கள்;⁾
26⁽ஞானத்தின் நுகத்தைத் தலை␢ தாழ்த்தி ஏற்றுக்கொள்ளுங்கள்;␢ உங்கள் கழுத்துகளை வளைந்து␢ கொடுங்கள். உங்கள் உள்ளம்␢ நற்பயிற்சிபெறுவதாக.␢ அருகிலேயே அதைக்␢ கண்டுகொள்ளலாம்.⁾
27⁽உங்கள் கண்களால் பாருங்கள்;␢ நான் சிறிதே முயன்றேன்;␢ மிகுந்த ஓய்வை எனக்கெனக்␢ கண்டுகொண்டேன்.⁾
28⁽மிகுந்த பொருள் கொடுத்து␢ நற்பயிற்சியைப் பெற்றுக்␢ கொள்ளுங்கள்; அதனால்␢ பெருஞ்செல்வத்தை அடைந்து␢ கொள்வீர்கள்.⁾
29⁽ஆண்டவரின் இரக்கத்தில்␢ உங்கள் உள்ளம் மகிழ்ச்சி␢ கொள்வதாக; அவரைப் புகழ்வதில்␢ என்றும் நாணம்␢ கொள்ளாதிருப்பீர்களாக.⁾
30⁽குறித்த காலத்திற்குமுன்பே␢ உங்கள் பணிகளைச் செய்து␢ முடியுங்கள். அவ்வாறாயின்␢ குறித்த காலத்தில் கடவுள்␢ உங்களுக்குப் பரிசு வழங்குவார்.⁾