சீராக் 18

முந்திய அடுத்த
1⁽ஆண்டவர் மனிதரை␢ மண்ணால் படைத்தார்;␢ மீண்டும் அந்த மண்ணுக்கே␢ திரும்புமாறு செய்கிறார்.⁾ 2⁽அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட␢ காலவரையை வகுத்தார்;␢ மண்ணுலகில் உள்ளவற்றின்மீது␢ அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.⁾ 3⁽தமக்கு உள்ளதைப்போன்ற␢ வலிமையை அவர்களுக்கு␢ வழங்கினார்; தமது சாயலாகவே␢ அவர்களை உருவாக்கினார்.⁾ 4⁽எல்லா உயிரினங்களும் மனிதருக்கு␢ அஞ்சும்படி செய்தார்;␢ விலங்குகள், பறவைகள்மீது␢ அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.⁾ 5⁽*[தம் ஐந்தறிவைப் பயன்படுத்தும்␢ உரிமையை ஆண்டவர்␢ அவர்களுக்கு அளித்தார்;␢ ஆறாவதாகத் தம் அறிவுத்திறனில்␢ பங்கு கொடுத்தார்;␢ அந்த ஆறறிவையும்␢ விளக்கும் பகுத்தறிவை␢ ஏழாவது கொடையாக வழங்கினார்.]⁾ 6⁽விருப்புரிமை, நாக்கு, கண்,␢ காது ஆகியவற்றையும்␢ சிந்திப்பதற்கு ஓர்␢ உள்ளத்தையும் அவர்களுக்குக்␢ கொடுத்தார்.⁾ 7⁽அவர்களை அறிவாலும்␢ கூர்மதியாலும் நிரப்பினார்;␢ நன்மை தீமையையும்␢ அவர்களுக்குக் காட்டினார்.⁾ 8⁽அவர்களின் உள்ளத்தைப்பற்றி␢ விழிப்பாய் இருந்தார்;␢ தம் செயல்களின் மேன்மையைக்␢ காட்டினார்.⁾ 9⁽*[தம் வியத்தகு செயல்கள் பற்றி␢ என்றும் பெருமைப்படும்␢ உரிமையை அவர்களுக்கு அளித்தார்.]⁾ 10⁽அவர்கள் அவரது திருப்பெயரைப்␢ புகழ்வார்கள்; இவ்வாறு␢ அவருடைய செயல்களின்␢ மேன்மையைப் பறைசாற்றுவார்கள்.⁾ 11⁽அறிவை அவர்களுக்கு வழங்கினார்;␢ வாழ்வு அளிக்கும்␢ திருச்சட்டத்தை அவர்களுக்கு␢ உரிமையாக்கினார்.⁾ 12⁽அவர்களுடன் முடிவில்லா␢ உடன்படிக்கை செய்துகொண்டார்;␢ தம் தீர்ப்புகளை அவர்களுக்கு␢ வெளிப்படுத்தினார்.⁾ 13⁽அவர்களின் கண்கள் அவருடைய␢ மாட்சியைக் கண்டன;␢ அவர்களின் செவிகள் அவரது␢ மாட்சியின் குரலைக் கேட்டன.⁾ 14⁽“எல்லாவகைத் தீமைகள்␢ குறித்தும் கவனமாய் இருங்கள்”␢ என்று அவர் எச்சரித்தார்;␢ அடுத்திருப்பவர்களைப் பற்றிய␢ கட்டளைகளை அவர்கள்␢ ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்.⁾ 15⁽மனிதரின் வழிகளை ஆண்டவர்␢ எப்போதும் அறிவார்;␢ அவரின் பார்வையிலிருந்து␢ அவை மறைந்திருப்பதில்லை.⁾ 16⁽*[இளமை தொட்டே அவர்களின்␢ வழிகள் தீமையை நாடுகின்றன.␢ தங்களின் கல்லான இதயத்தை␢ உணர்ச்சியுள்ள இதயமாக␢ மாற்ற அவர்களால் முடியாது.]⁾ 17⁽நாடுகள் ஒவ்வொன்றுக்கும்␢ ஒரு தலைவரை ஏற்படுத்தினார்;␢ இஸ்ரயேல் நாடோ ஆண்டவரின்␢ பங்காகும்.⁾ 18⁽*[இஸ்ரயேல் அவருடைய␢ தலைப்பேறு. அதை␢ நற்பயிற்சியில் வளர்க்கிறார்;␢ அதன்மீது தம் அன்பின்␢ ஒளியை வீசுகிறார்; அதைக்␢ கவனியாது விட்டுவிடுவதில்லை.]⁾ 19⁽மனிதரின் செயல்கள் அனைத்தும்␢ கதிரவனின் ஒளிபோல்␢ அவர் திருமுன்␢ தெளிவாய்த் துலங்குகின்றன;␢ அவருடைய கண்கள் எப்போதும்␢ அவர்களுடைய வழிகள் மீது␢ இருக்கும்.⁾ 20⁽அவர்களுடைய அநீதியான␢ செயல்கள் அவருக்கு␢ மறைவாய் இருப்பதில்லை;␢ அவர்களின் பாவங்கள்␢ அனைத்தையும் ஆண்டவர் அறிவார்.⁾ 21⁽*[ஆண்டவர் நல்லவர்;␢ அவர் தம் படைப்புகளை அறிவார்.␢ அவற்றை அவர் விட்டுவிடவில்லை,␢ கைவிடவுமில்லை;␢ மாறாகப் பாதுகாத்தார்.]⁾ 22⁽மனிதர் செய்யும் தருமங்கள்␢ அவருக்குக் கணையாழிபோல்␢ திகழ்கின்றன; அவர்கள்␢ புரியும் அன்புச் செயல்கள்␢ அவருக்குக் கண்மணிபோல்␢ விளங்குகின்றன.⁾ 23⁽பின்னர் அவர் எழுந்து␢ அவர்களுக்குக் கைம்மாறு செய்வார்;␢ அவர்களுக்குச் சேரவேண்டிய␢ வெகுமதியை அவர்களின்␢ தலைமேல் பொழிவார்.⁾ 24⁽இருப்பினும் மனம் வருந்துவோரைத்␢ தம்பால் ஈர்த்துக்கொள்கிறார்␢ நம்பிக்கை இழந்தோரை ஊக்குவிக்கிறார்.⁾ 25⁽ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்;␢ பாவங்களை விட்டு விலகுங்கள்;␢ அவர் திருமுன் வேண்டுங்கள்;␢ குற்றங்களைக் குறைத்துக்␢ கொள்ளுங்கள்.⁾ 26⁽உன்னத இறைவனிடம்␢ திரும்பி வாருங்கள்;␢ அநீதியை விட்டு␢ விலகிச் செல்லுங்கள்;␢ அவர் அருவருப்பதை␢ அடியோடு வெறுத்திடுங்கள்.⁾ 27⁽வாழ்வோர் உன்னத இறைவனுக்கு␢ நன்றி செலுத்துகின்றனர்;␢ ஆனால் கீழுலகில் அவரது␢ புகழை யாரே பாடுவர்?⁾ 28⁽உயிர் வாழ்ந்திராதவர் போன்றே␢ இறந்தவர்களும் அவருக்கு␢ நன்றி செலுத்துவதில்லை;␢ உடல் நலத்துடன் உயிர்␢ வாழ்வோரோ அவரைப் போற்றுகின்றனர்.⁾ 29⁽ஆண்டவரின் இரக்கம்␢ எத்துணைப் பெரிது!␢ அவரிடம் மனந்திரும்புவோருக்கு␢ அவர் அளிக்கும் மன்னிப்பு␢ எத்துணை மேலானது!⁾ 30⁽எல்லாமே மனிதரின்␢ ஆற்றலுக்கு உட்பட்டதில்லை;␢ மனிதர் இறவாமை பெற்றவர் அல்லர்.⁾ 31⁽கதிரவனைவிட ஒளி மிக்கது எது?␢ ஆயினும் சூரிய கிரகணமும்␢ உண்டு. ஊனும் உதிரமும்␢ கொண்ட மனிதர் தீமைகளைப்␢ பற்றியே சிந்திக்கின்றனர்.⁾ 32⁽அவர் உயர் வானத்தின்␢ படைகளை வகைப்படுத்துகிறார்.␢ மனிதர் அனைவரும் புழுதியும் சாம்பலுமே.⁾