சீராக் 25

முந்திய அடுத்த
1⁽ஞானம் தன்னையே␢ புகழ்ந்து கொள்கிறது;␢ தன் மக்கள் நடுவே தனது␢ மாட்சியை எடுத்துரைக்கிறது.⁾ 2⁽உன்னத இறைவனின் மன்றத்தில்␢ திருவாய் மலர்ந்து பேசுகிறது;␢ அவரது படைத்திரள்முன்பாக␢ தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.⁾ 3⁽உன்னதரின் வாயினின்று␢ நான் வெளிவந்தேன்;␢ மூடுபனிபோன்று மண்ணுலகை␢ மூடிக்கொண்டேன்.⁾ 4⁽உயர் வானங்களில் நான்␢ வாழ்ந்து வந்தேன்;␢ முகில்தூணில் அரியணை␢ கொண்டிருந்தேன்;⁾ 5⁽வானத்தையெல்லாம் நானே␢ தனியாகச் சுற்றிவந்தேன்;␢ கீழுலகின் ஆழத்தை␢ ஊடுருவிச் சென்றேன்.⁾ 6⁽கடலின் அலைகள்மேலும்␢ மண்ணுலகெங்கும் மக்கள்␢ அனைவர் மீதும் நாடுகள் மீதும்␢ ஆட்சி செலுத்தினேன்.⁾ 7⁽இவை அனைத்தின் நடுவே␢ ஓய்வு கொள்ள ஓர் இடத்தை␢ நான் விரும்பினேன்;␢ யாருடைய உரிமைச் சொத்தில்␢ நான் தங்குவேன்?⁾ 8⁽பின், அனைத்தையும் படைத்தவர்␢ எனக்குக் கட்டளையிட்டார்;␢ என்னைப் படைத்தவர்␢ என் கூடாரம் இருக்கவேண்டிய␢ இடத்தை முடிவு செய்தார்.␢ ‘யாக்கோபில் தங்கி வாழ்;␢ இஸ்ரயேலில் உன்␢ உரிமைச்சொத்தைக்␢ காண்பாய்’ என்று உரைத்தார்.⁾ 9⁽காலத்திற்கு முன்பே␢ தொடக்கத்தில் அவர்␢ என்னைப் படைத்தார்.␢ எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.⁾ 10⁽தூய கூடாரத்தில்␢ அவர் திருமுன் பணிசெய்தேன்;␢ இதனால் சீயோனில்␢ உறுதிப்படுத்தப்பெற்றேன்.⁾ 11⁽இவ்வாறு அந்த அன்புக்குரிய␢ நகரில் அவர் எனக்கு␢ ஓய்விடம் அளித்தார்;␢ எருசலேமில் எனக்கு␢ அதிகாரம் இருந்தது.⁾ 12⁽ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய␢ பங்கில் மாட்சிமைப்படுத்தப்␢ பெற்ற மக்கள் நடுவே␢ நான் வேரூன்றினேன்.⁾ 13⁽லெபனோனின் கேதுருமரம்␢ போலவும் எர்மோன்␢ மலையின் சைப்பிரசுமரம்␢ போலவும் நான் ஓங்கி␢ வளர்ந்தேன்.⁾ 14⁽எங்கேதி ஊரின்␢ பேரீச்சமரம் போலவும்,␢ எரிகோவின் ரோசாச்செடி␢ போலவும் சமவெளியின்␢ அழகான ஒலிவமரம் போலவும்,␢ பிளாத்தான்மரம் போலவும்␢ நான் ஓங்கி வளர்ந்தேன்.⁾ 15⁽இலவங்கப் பட்டைபோலும்,␢ பரிமளத்தைலம் போலும்␢ மணம் கமழ்ந்தேன்;␢ சிறந்த வெள்ளைப்போளம்␢ போல நறுமணம் தந்தேன்;␢ கல்பானும், ஓனிக்சா எனும்␢ நறுமணப் பொடிகள்போலும்,␢ உடன்படிக்கைக் கூடாரத்தில்␢ எழுப்பப்படும் புகைபோலும்␢ நறுமணம் வீசினேன்.⁾ 16⁽தேவதாருமரத்தைப்போல்␢ என் கிளைகளைப் பரப்பினேன்;␢ என் கிளைகள் மாட்சியும்␢ அருளும் நிறைந்தவை.⁾ 17⁽நான் அழகு அளித்திடும்␢ திராட்சைக் கொடி,␢ மாட்சி, செல்வத்தினுடைய␢ கனிகள், என் மலர்கள்.⁾ 18⁽*[நானே தூய அன்பு, அச்சம்,␢ அறிவு, தூய நம்பிக்கை␢ ஆகியவற்றின் அன்னை.␢ கடவுளால் குறிக்கப்பட்ட␢ என் பிள்ளைமேல் நான்␢ பொழியப்படுவேன்.]⁾ 19⁽என்னை விரும்புகிற அனைவரும்␢ என்னிடம் வாருங்கள்;␢ என் கனிகளை வயிறார␢ உண்ணுங்கள்.⁾ 20⁽என்னைப்பற்றிய நினைவு␢ தேனினும் இனியது;␢ என் உரிமைச்சொத்து␢ தேனடையினும் மேலானது.⁾ 21⁽என்னை உண்பவர்கள்␢ மேலும் பசி கொள்வார்கள்;␢ என்னைக் குடிப்பவர்கள்␢ மேலும் தாகம் கொள்வார்கள்.⁾ 22⁽எனக்குக் கீழ்ப்படிவோர்␢ இகழ்ச்சி அடையார்;␢ என்னோடு சேர்ந்து␢ உழைப்போர் பாவம் செய்யார்.⁾ 23⁽இவ்வாறு ஞானம் கூறிய␢ அனைத்தும் உன்னத␢ இறைவனின் உடன்படிக்கை␢ நூலாகும்.␢ மோசே நமக்குக் கட்டளையிட்ட,␢ யாக்கோபின் சபைகளுக்கு␢ உரிமைச் சொத்தாக␢ வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.⁾ 24⁽*[ஆண்டவரில் வலிமை␢ கொள்வதை விட்டுவிடாதே.␢ அவர் உனக்கு வலுவூட்டும்␢ பொருட்டு அவரைப் பற்றிக்கொள்.␢ எல்லாம் வல்ல ஆண்டவர்␢ ஒருவரே கடவுள்;␢ அவரைத்தவிர வேறு␢ மீட்பர் இல்லை.]⁾ 25⁽பீசோன் ஆறுபோன்றும்␢ அறுவடைக்காலத்தில்␢ திக்ரீசு ஆறு போன்றும்␢ திருச்சட்டம் ஞானத்தால்␢ நிறைந்து வழிகிறது.⁾ 26⁽யூப்பிரத்தீசு ஆறுபோல,␢ அறுவடைக்காலத்தில்␢ பெருக்கெடுத்தோடும்␢ யோர்தான் ஆறுபோல,␢ அது அறிவுக்கூர்மையால்␢ நிரம்பி வழிகிறது.⁾ 27⁽திராட்சை அறுவடைக்␢ காலத்தில் நைல் ஆறு␢ வழிந்தோடுவதைப் போல்␢ அது நற்பயிற்சியைப்␢ பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.⁾ 28⁽முதல் மனிதன் ஞானத்தை␢ முழுமையாக அறியவில்லை;␢ இறுதி மனிதனும் அதன்␢ ஆழத்தைக் கண்டானில்லை.⁾ 29⁽ஞானத்தின் எண்ணங்கள்␢ கடலினும் பரந்தவை;␢ அதன் அறிவுரைகள்␢ படுகுழியை விட ஆழமானவை.⁾ 30⁽நான் ஆற்றிலிருந்து பிரியும்␢ கால்வாய் போன்றவன்;␢ தோட்டத்தில் ஓடிப் பாயும்␢ வாய்க்கால் போன்றவன்.⁾ 31⁽‘எனது தோட்டத்துக்கு␢ நான் நீர் பாய்ச்சுவேன்;␢ எனது பூங்காவை நீரால்␢ நிரப்புவேன்’ என்று சொல்லிக்␢ கொண்டேன். உடனே என்␢ கால்வாய் ஆறாக மாறிற்று;␢ என் ஆறு கடலாக மாறிற்று.⁾ 32⁽நான் நற்பயிற்சியை விடியல்␢ போன்று ஒளிரச் செய்வேன்;␢ அது தொலைவிலும் தெரியும்படி␢ செய்வேன்.⁾ 33⁽போதனைகளை␢ இறைவாக்குப் போன்று␢ பொழிவேன்; அதைக்␢ காலங்களுக்கெல்லாம்␢ விட்டுச் செல்வேன்.⁾ 34⁽எனக்காக மட்டும்␢ உழைக்கவில்லை;␢ ஞானத்தைத் தேடுவோர்␢ அனைவருக்காகவும்␢ உழைத்தேன் என அறிந்து␢ கொள்ளுங்கள்.⁾