சீராக் 15

முந்திய அடுத்த
1⁽நாவினால் தவறு செய்யாதோர்␢ பேறுபெற்றோர்;␢ அவர்கள் பாவங்களுக்கான␢ மன உறுத்தல் இல்லாதவர்கள்.⁾ 2⁽தம் மனச்சான்றால்␢ கண்டிக்கப்படாதோர்␢ பேறுபெற்றோர்;␢ நம்பிக்கை தளராதோரும்␢ பேறுபெற்றோர்.⁾ 3⁽கஞ்சனுக்குச் செல்வம் ஏற்றதல்ல;␢ கருமிக்கு அதனால் என்ன பயன்?⁾ 4⁽தமக்கெனச் செலவிடாமல்␢ சேர்த்து வைக்கும் செல்வம்␢ பிறரையே சென்று அடையும்?␢ அச்செல்வத்தால் பிறரே␢ வளமுடன் வாழ்வர்.⁾ 5⁽தங்களையே கடுமையாக␢ நடத்துவோர் அடுத்தவருக்கு␢ எங்ஙனம் நன்மை செய்வர்?␢ அவர்கள் தங்களிடம்␢ உள்ள செல்வங்களையே␢ துய்த்து மகிழத் தெரியாதவர்கள்.⁾ 6⁽தமக்குத்தாமே கருமியாய்␢ இருப்போரைவிடக் கொடியவர் இலர்;␢ அவர்களது கஞ்சத்தனத்துக்கு␢ இதுவே தண்டனை.⁾ 7⁽அவர்கள் நன்மை செய்தாலும்␢ அது அவர்களை அறியாமல்␢ நிகழ்கின்றது; இறுதியில்␢ தங்கள் கஞ்சத்தனத்தையே␢ காட்டி விடுவர்.⁾ 8⁽பொறாமை கொண்டோர் தீயோர்;␢ பிறரைப் புறக்கணித்து␢ முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொள்வர்.⁾ 9⁽பேராசை கொண்டோர்␢ உள்ளது கொண்டு நிறைவு␢ அடைவதில்லை; பேராசையுடன் கூடிய␢ அநீதி, உள்ளம் தளர்வு␢ அடையச் செய்கிறது.⁾ 10⁽கருமிகள் மற்றவர்களுக்கு உணவை␢ அளந்தே கொடுப்பார்கள்.␢ அவர்களின் உணவறையில்␢ எதுவும் இராது.⁾ 11⁽குழந்தாய், உள்ளத்தைக்␢ கொண்டு உன்னையே␢ பேணிக்கொள்;␢ ஆண்டவருக்கு ஏற்ற␢ காணிக்கை செலுத்து.⁾ 12⁽இறப்பு யாருக்கும் காலம்␢ தாழ்த்தாது என்பதையும்␢ நீ சாகவேண்டிய நேரம்␢ உனக்கு இன்னும் சொல்லப்படவில்லை␢ என்பதையும் நினைவில் கொள்.⁾ 13⁽நீ இறக்குமுன் உன் நண்பர்களுக்கு␢ உதவி செய்; உன்னால்␢ முடிந்தவரை தாராளமாகக் கொடு.⁾ 14⁽ஒவ்வொரு நாளும் உனக்குக்␢ கிடைக்கும் நன்மைகளை␢ நன்கு பயன்படுத்து;␢ உன் வாழ்வின் இன்பங்களைத்␢ துய்க்காமல் விட்டுவிடாதே.⁾ 15⁽உன் உழைப்பின் பயனைப்␢ பிறருக்கு விட்டுவிடுவதில்லையா?␢ நீ உழைத்துச் சேர்த்ததைப்␢ பங்கிட்டுக்கொள்ள விடுவதில்லையா?⁾ 16⁽கொடுத்து வாங்கு;␢ மகிழ்ந்திரு. பாதாளத்தில்␢ இன்பத்தைத் தேட முடியாது.⁾ 17⁽ஆடைபோன்று மனிதர்␢ அனைவரும் முதுமை␢ அடைகின்றனர்;␢ ‘நீ திண்ணமாய்ச் சாவாய்’␢ என்பதே தொன்மை நெறிமுறை.⁾ 18⁽இலை அடர்ந்த மரத்தின்␢ சில இலைகள் உதிர்கின்றன;␢ சில இலைகள் தளிர்க்கின்றன.␢ ஊனும் உதிரமும் கொண்ட␢ மனித இனத்திலும் சிலர் இறப்பர்;␢ சிலர் பிறப்பர்.⁾ 19⁽கைவேலைப்பாடுகளெல்லாம்␢ மட்கி மறையும்;␢ அவற்றைச் செய்தோரும்␢ அவற்றோடு மறைந்தொழிவர்.⁾ 20⁽ஞானத்தில் நாட்டம் செலுத்துவோர்␢ பேறுபெற்றோர்;␢ அறிவுக்கூர்மை கொண்டு␢ வாதிடுவோரும் பேறுபெற்றோர்.⁾ 21⁽ஞானத்தின் வழிகள் பற்றித்␢ தம் உள்ளத்தில் எண்ணிப்␢ பார்ப்போரும் அதன் இரகசியங்களைச்␢ சீர்தூக்கிப் பார்ப்போரும் பேறுபெற்றோர்.⁾ 22⁽வேடர்போன்று அதைத் தேடிச்␢ சென்று அதன் வழிகளில்␢ பதுங்கியிருப்போரும் பேறுபெற்றோர்.⁾ 23⁽அதன் பலகணி வழியே␢ உற்றுநோக்குவோரும்␢ அதன் கதவு அருகே நின்று␢ கேட்போரும் பேறுபெற்றோர்.⁾ 24⁽அதன் வீட்டின் அருகே␢ தங்குவோரும் அதன் சுவரில்␢ தம் கூடாரத்தின்␢ முளையை இறுக்குவோறும்␢ பேறுபெற்றோர்.⁾ 25⁽அதன் அருகிலேயே தம்␢ கூடாரத்தை அமைப்போரும்␢ அதன் இனிமை நிறைந்த␢ இடத்தில் தம் இல்லத்தைக்␢ கட்டுவோரும் பேறுபெற்றோர்.⁾ 26⁽அதன் நிழலில் தம் பிள்ளைகளைக்␢ கிடத்துவோரும் அதன்␢ கிளைகளுக்கு அடியில்␢ தங்குவோரும் பேறுபெற்றோர்.⁾ 27⁽வெப்பத்தினின்று ஞானத்திடம்␢ தஞ்சம் புகுவோரும் அதன்␢ மாட்சியின் நடுவே␢ குடியிருப்போரும் பேறுபெற்றோர்.⁾