சீராக் 41

முந்திய அடுத்த
1⁽எல்லா மனிதரும்␢ கடும் உழைப்புக்கே␢ படைக்கப்பட்டிருக்கின்றனர்;␢ தாயின் வயிற்றிலிருந்து␢ வெளிவந்த நாள்முதல்␢ நிலம் என்னும் தாயிடம் எல்லாரும்␢ அடக்கமாகும் நாள்வரை ஆதாமின்␢ மக்கள்மீது வலிய நுகம்␢ சுமத்தப்பட்டிருக்கிறது.⁾ 2⁽எதிர்காலத்தையும் இறுதி␢ நாளையையும் பற்றிய எண்ணங்கள்␢ மனிதருடைய சிந்தனையைக் குழப்பி,␢ உள்ளத்தை அச்சுறுத்துகின்றன.⁾ 3⁽மேன்மைமிகு அரியணையில்␢ அமர்ந்திருப்போர்முதல்␢ புழுதியிலும் சாம்பலிலும்␢ உழலத் தாழ்த்தப்பட்டோர்வரை,⁾ 4⁽கருஞ்சிவப்பு உடையும்␢ பொன்முடியும் அணிந்தோர்முதல்␢ முரட்டுத் துணி உடுத்தியோர்வரை .␢ எல்லாருக்கும் சீற்றம்,␢ பொறாமை, கலக்கம், குழப்பம்,␢ சாவுபற்றிய அச்சம், வெகுளி,␢ சண்டை ஆகியவை உண்டு.⁾ 5⁽கட்டிலின்மீது␢ ஓய்வு கொள்ளும் நேரத்தில்,␢ இரவு நேரத் தூக்கம்␢ மனிதரின் அறிவைக் குழப்புகிறது.⁾ 6⁽சிறிது நேர ஓய்வும்␢ ஓய்வாகத் தோன்றுவதில்லை;␢ பகலில் நேரிடுவதுபோன்று␢ உறக்கத்திலும் அவர்கள்␢ கலக்கம் அடைகிறார்கள்.␢ போர்க்களத்திலிருந்து தப்பிவந்தவர்␢ போலத் தீயக் கனவுகளால்␢ உள்ளத்தில் குழப்பம் அடைகிறார்கள்.⁾ 7⁽தாங்கள் பாதுகாப்பு அடையும்␢ காலத்தில் விழித்துக்␢ கொள்கிறார்கள்; தாங்கள்␢ அஞ்சியிருந்ததற்குத் தகுந்த␢ காரணமில்லையே என␢ வியப்படைகிறார்கள்.⁾ 8❮8-9❯⁽மனிதர் முதல் விலங்குகள் வரை␢ எல்லா உயிரினங்களுக்கும்␢ சாவு, படுகொலை, சண்டை,␢ வாள், பேரிடர், பஞ்சம்,␢ அழிவு, நோவு ஆகியவை உண்டு.␢ பாவிகளுக்கோ இவை␢ ஏழு மடங்கு மிகுதியாகும்.⁾ 9Same as above 10⁽இவையெல்லாம்␢ நெறிகெட்டவர்களுக்கெனப்␢ படைக்கப்பட்டவை; அவர்களை␢ முன்னிட்டே வெள்ளப்␢ பெருக்கும் உண்டாயிற்று.⁾ 11⁽மண்ணிலிருந்து வந்த யாவும்␢ மண்ணுக்கே திரும்பும்;␢ தண்ணீரிலிருந்து வந்த யாவும்␢ கடலுக்கே திரும்பும்.⁾ 12⁽எல்லாக் கையூட்டும் அநீதியும்␢ அழித்தொழிக்கப்படும்;␢ பற்றுறுதி என்றென்றும் நிலைத்திடும்.⁾ 13⁽அநீதருடைய செல்வம்␢ ஆற்றைப்போல வற்றிப்போகும்;␢ மழையின்போது விழும் பேரிடியைப்␢ போல மறைந்து போகும்.⁾ 14⁽வள்ளன்மை கொண்டோர்␢ மகிழ்ச்சி அடைவர்;␢ கட்டளைகளை மீறுவோர்␢ முடிவில் அழிவர்.⁾ 15⁽இறைப்பற்றில்லாதோரின்␢ வழிமரபினர் மிகுதியாகக்␢ கிளைவிடார்; இவர்கள்␢ பாறையின் உச்சியில் உள்ள␢ தூய்மையற்ற வேர்கள்.⁾ 16⁽எல்லா நீர்நிலைகளிலும்␢ ஆற்றங்கரைகளிலும்␢ வளரும் நாணல், புல்␢ வகைகளுக்கு முன்னரே␢ பிடுங்கி எறியப்படும்.⁾ 17⁽இரக்கம் என்பது நலமிகு␢ பூங்காபோன்றது;␢ தருமம் என்றும் நிலைக்கும்.⁾ 18⁽தன்னிறைவு கொண்டோர்,␢ தொழில் புரிவோர் ஆகியோருடைய␢ . வாழ்க்கை இனிமையானது;␢ புதையலைக் கண்டுபிடிப்போருடைய␢ வாழ்க்கை அவர்கள்␢ இருவரின் வாழ்க்கையினும்␢ இனிமையானது.⁾ 19⁽பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும்␢ நகர்களைக் கட்டியெழுப்புவதும்␢ ஒருவருடைய பெயரை நிலைக்கச்␢ செய்கின்றன. மாசற்ற மனைவி␢ இந்த இரண்டினும் மேலாக␢ மதிக்கப்படுவாள்.⁾ 20⁽திராட்சை இரசமும் இன்னிசையும்␢ இதயத்தை மகிழ்விக்கின்றன.␢ ஞானத்தின்மேல் கொண்ட அன்பு␢ இவ்விரண்டினும் மேலானது.⁾ 21⁽குழலும் யாழும்␢ இன்னிசை எழுப்புகின்றன;␢ இனிய சொல் இவ்விரண்டினும் சிறந்தது.⁾ 22⁽வனப்பையும் அழகையும்␢ கண் நாடுகிறது; விளைநிலத்தின்␢ பசுமை இவ்விரண்டினும் உயர்ந்தது.⁾ 23⁽நண்பரும் தோழரும் எப்போதும்␢ சந்திக்கத் தக்கவர்கள்;␢ தன் கணவருடன் வாழும்␢ மனைவி இவ்விருவரினும் மேலானவள்.⁾ 24⁽உடன்பிறந்தோரும்␢ உதவி செய்வோரும்␢ துன்பத்திலிருந்து விடுவிப்பர்;␢ தருமம் செய்தல்␢ இவ்விருவரினும் சிறந்தது.⁾ 25⁽பொன்னும் வெள்ளியும்␢ கால்களுக்கு உறுதி தரும்;␢ அறிவுரை இவ்விரண்டினும்␢ மேலாக மதிக்கப்பெறும்.⁾ 26⁽செல்வமும் வலிமையும்␢ உள்ளத்தை உயர்த்துகின்றன;␢ ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்␢ இவ்விரண்டினும் மேலானது.␢ ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சத்தில் எக்குறையுமில்லை;␢ அதைக் கொண்டிருக்கும்போது␢ உதவி தேடத் தேவையில்லை.⁾ 27⁽ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம்␢ நலமிகு பூங்காபோன்றது;␢ அது எல்லா மாட்சியையும்விடப்␢ பாதுகாப்பு அளிக்கிறது.⁾ 28⁽குழந்தாய், பிச்சையெடுத்து வாழாதே;␢ .பிச்சையெடுப்பதினும்␢ சாவதே மேல்.⁾ 29⁽பிறரிடமிருந்து உணவை எதிர்பார்க்கிற␢ மனிதரின் வாழ்க்கையை வாழ்க்கை␢ எனச் சொல்லமுடியாது;␢ பிறருடைய உணவால் ஒருவர்␢ தம் வாழ்வை மாசுபடுத்துகிறார்;␢ அறிவாற்றல் படைத்தோரும்␢ நற்பயிற்சி பெற்றோரும் இதிலிருந்து␢ தங்களைப் பாதுகாத்துக்கொள்வர்.⁾ 30⁽பிச்சையெடுத்தல்␢ வெட்கம் இல்லாதவரின்␢ வாயில் இனிக்கும்;␢ ஆனால், அது வயிற்றில்␢ நெருப்பாய்ப் பற்றியெரியும்.⁾