1[*]
2⁽தீய நாட்டங்களின் பிடியில்␢ சிக்கிக்கொள்ளாதே;␢ இல்லையேல்,␢ காளையிடம் சிக்கியவன்␢ போலக் கீறிக் குதறப்படுவாய்.⁾
3⁽உன் இலைகள் விழுங்கப்படும்;␢ கனிகள் அழிக்கப்படும்;␢ பட்ட மரம்போல நீ விடப்படுவாய்.⁾
4⁽தீய நாட்டங்களுக்கு␢ ஒருவர் இடம் கொடுத்தால்␢ அவையே அவரை அழித்துவிடும்;␢ அவர் பகைவரின்␢ நகைப்புக்கும் ஆளாவார்.⁾
5⁽இன்சொல் நண்பர்␢ தொகையைப் பெருக்கும்;␢ பண்பான பேச்சு␢ உன் மதிப்பை உயர்த்தும்.⁾
6⁽அனைவரோடும் நட்புடன் பழகு;␢ ஆனால் ஆயிரத்தில்␢ ஒருவரே உனக்கு␢ ஆலோசகராய் இருக்கட்டும்.⁾
7⁽ஆய்ந்து நட்புக்கொள்;␢ நண்பரையும் விரைவில்␢ நம்பிவிடாதே.⁾
8⁽தன்னலம் தேடும்␢ நண்பர்களும் உண்டு;␢ அவர்கள் உன் நெருக்கடியான␢ வேளையில் உன்னோடு␢ இருக்கமாட்டார்கள்.⁾
9⁽பகைவர்களாய் மாறும்␢ நண்பர்களும் உண்டு;␢ அவர்கள் உங்கள் பிணக்கை␢ மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,␢ உனக்கு இழிவைக்␢ கொண்டு வருவார்கள்.⁾
10⁽உன்னுடன் விருந்துண்ணும்␢ நண்பர்களும் உண்டு;␢ அவர்கள் உன் நெருக்கடியான␢ வேளையில் உன்னோடு␢ இருக்கமாட்டார்கள்.⁾
11⁽நீ நல்ல நிலையில்␢ இருக்கும்போது,␢ அவர்கள் உன் உயிருக்கு உயிரான␢ நண்பர்களாய் இருப்பார்கள்;␢ உன் பணியாளர்களை␢ ஆட்டிப் படைப்பார்கள்;⁾
12⁽நீ தாழ்ந்துவிட்டால்␢ உனக்கு எதிராய்␢ அவர்கள் மாறுவார்கள்;␢ உன் முகத்தில் விழிக்கமாட்டார்கள்.⁾
13⁽உன் பகைவர்களிடமிருந்து␢ விலகி நில்;␢ உன் நண்பர்களிடம்␢ எச்சரிக்கையாய் இரு.⁾
14⁽நம்பிக்கைக்குரிய நண்பர்கள்␢ பாதுகாப்பான புகலிடம்␢ போன்றவர்கள்;␢ இத்தகைய நண்பர்களைக்␢ கண்டவர்கள்␢ புதையலைக் கண்டவரைப்␢ போன்றவர்கள்.⁾
15⁽நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு␢ ஈடான செல்வம் எதுவுமில்லை;␢ அவர்களது தகைமைக்கு␢ அளவுகோல் இல்லை.⁾
16⁽நம்பிக்கைக்குரிய நண்பர்கள்␢ நலம் அளிக்கும் மருந்து␢ போன்றவர்கள்;␢ ஆண்டவருக்கு அஞ்சுவோரே␢ இத்தகைய நண்பர்களைக்␢ கண்டடைவர்.⁾
17⁽ஆண்டவருக்கு அஞ்சுவோரே␢ முறையான நட்புப் பேணுவோர்.␢ அவர்களை அடுத்தவர்களும்␢ அவர்களைப்போலவே இருப்பார்கள்.⁾
18⁽குழந்தாய், இளமைமுதல்␢ நற்பயிற்சியைத் தேர்ந்துகொள்;␢ முதுமையிலும் ஞானம் பெறுவாய்.⁾
19⁽உழுது, விதைத்து,␢ பின் நல்ல விளைச்சலுக்காகக்␢ காத்திருக்கும் உழவர்போன்று␢ ஞானத்தை அணுகு.␢ ஞானத்துக்காக உழைப்போர்␢ சிறிதளவே களைப்படைவர்;␢ விரைவிலேயே அதன் கனிகளை உண்பர்.⁾
20⁽நற்பயிற்சி இல்லாதவர்களிடம்␢ ஞானம் மிகக் கடுமையாக␢ நடந்துகொள்ளும்;␢ அறிவிலிகள் அதனோடு␢ நிலைத்திருக்கமுடியாது.⁾
21⁽அது அவர்களைச் சோதிக்கும்␢ பாறாங்கல்லாய் இருக்கும்;␢ அவர்கள் அதைத் தள்ளிவிடக்␢ காலம் தாழ்த்தமாட்டார்கள்.⁾
22⁽ஞானம் பெயர்ப் பொருத்தம்␢ உடையது;␢ பலருக்கு அது புலப்படுவதில்லை.⁾
23⁽குழந்தாய், உற்றுக்கேள்;␢ என் தீர்ப்புகளை ஏற்றுக்கொள்;␢ என் அறிவுரைகளைப் புறக்கணியாதே.⁾
24⁽ஞானத்தின் விலங்குகளில்␢ உன் கால்களைப் பிணைத்துக்கொள்;␢ அதன் சங்கிலியில் உன் கழுத்தைப்␢ புகுத்திக்கொள்.⁾
25⁽குனிந்து அதனைத் தோளில்␢ தூக்கிச் சுமந்து செல்;␢ அதன் தளைகளைக் கண்டு␢ எரிந்து விழாதே.⁾
26⁽உன் முழு உள்ளத்தோடும்␢ அதனை அணுகு;␢ உன் முழு வலிமையோடும்␢ அதன் வழியில் நடந்து செல்.⁾
27⁽அதனை நீ நாடித் தேடு;␢ அது உனக்குப் புலப்படும்.␢ அதனைச் சிக்கெனப் பிடி;␢ நழுவவிடாதே.⁾
28⁽முடிவில் அது அளிக்கும்␢ ஓய்வைப் பெறுவாய்;␢ அதுவே உனக்கு␢ மகிழ்ச்சியாய் மாறும்.⁾
29⁽அதன் விலங்குகள் உனக்கு␢ வலிமையான பாதுகாப்பு ஆகும்;␢ அதன் தளைகள் மாட்சிமிகு␢ ஆடையாக மாறும்.⁾
30⁽அதன் மீது பொன் அணிகலன்␢ உள்ளது;␢ அதன் தளைகள் நீல மணிவடமாகும்.⁾
31⁽ஞானத்தை மாட்சிமிகு␢ ஆடையாக அணிந்துகொள்;␢ மகிழ்ச்சிதரும் மணிமுடியாகச்␢ சூடிக்கொள்.⁾
32⁽சூழந்தாய், நீ விரும்பினால்␢ நற்பயிற்சி பெற முடியும்;␢ உன் கருத்தைச் செலுத்தினால்␢ திறமையுடன் திகழ முடியும்.⁾
33⁽கேட்டறிய ஆர்வம் கொண்டால்␢ அறிவு பெறுவாய்;␢ பிறருக்குச் செவிசாய்த்தால்␢ ஞானியாவாய்;⁾
34⁽மூப்பர்களின் தோழமையை நாடு;␢ ஞானிகள் யார் எனக் கண்டு␢ அவர்களைச் சார்ந்து நில்.⁾
35⁽கடவுளைப் பற்றிய எல்லா␢ உரைகளுக்கும் செவிசாய்ப்பதில்␢ ஆர்வம் காட்டு;␢ அறிவுக்கூர்மை கொண்ட␢ பழமொழிகளைக் கேட்காமல்␢ விட்டுவிடாதே.⁾
36⁽அறிவுக்கூர்மை படைத்தோரை␢ நீ கண்டுவிட்டால்,␢ விரைந்து அவர்களிடம் செல்;␢ உன் காலடி பட்டு அவர்களின்␢ வீட்டு வாயிற்படிகள் தேயட்டும்.⁾
37⁽ஆண்டவரின் நெறிமுறைகளை␢ எண்ணிப்பார்;␢ அவருடைய கட்டளைகளை␢ எப்போதும் உள்ளத்தில் இருத்து.␢ அவரே உன் உள்ளத்திற்குத்␢ தெளிவூட்டுவார்;␢ நீ விரும்பும் ஞானத்தை␢ உனக்கு அருள்வார்.⁾