சீராக் 14

முந்திய அடுத்த
1⁽மையைத் தொடுவோர் தங்களைக்␢ கறைப்படுத்திக் கொள்வர்;␢ செருக்குடையோருடன் சேர்ந்து␢ பழகுவோர் அவர்களைப்␢ போலவே மாறுவர்.⁾ 2⁽உன்னால் சுமக்க முடியாத␢ சுமைகளைத் தூக்காதே;␢ உன்னைவிட வலிமை␢ வாய்ந்தோருடனும் செல்வம்␢ படைத்தோருடனும் உறவு கொள்ளாதே.␢ மண்பானைக்கும் இரும்புக்␢ கொப்பரைக்கும் என்ன தொடர்பு?␢ கொப்பரையுடன் பானை மோதிச்␢ சுக்குநூறாகும்.⁾ 3⁽செல்வர்கள் அநீதி இழைப்பதுமன்றி␢ ஏழைகளை இழிவுபடுத்தவும்␢ செய்வார்கள்; ஏழைகளோ␢ அநீதிக்கு ஆளாவதோடு␢ மன்னிப்பும் கேட்கவேண்டும்.⁾ 4⁽உன்னால் தங்களுக்குப்␢ பயன் விளையுமாயின்,␢ செல்வர் உன்னைச் சுரண்டுவர்;␢ உனக்கு ஒரு தேவை என்றால்␢ உன்னைக் கைவிடுவர்.⁾ 5⁽நீ வசதியாய் இருக்கும்போது␢ உன்னோடு ஒட்டி உறவாடுவர்;␢ உன்னை வெறுமையாக்கி␢ விட்டுக் கவலையின்றி இருப்பர்.⁾ 6⁽உன் உதவி அவர்களுக்குத்␢ தேவைப்படும் போது␢ உன்னை ஏமாற்றுவர்;␢ உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து␢ உனக்கு ஊக்கம் அளிப்பர்;␢ உன்னிடம் நயந்து பேசி,␢ “உனக்குத் தேவையானது என்ன?”␢ எனக் கேட்பர்.⁾ 7⁽நீ திகைக்கத் திகைக்க உனக்குப்␢ பல்சுவை விருந்தூட்டி,␢ சிறிது சிறிதாக உன்னை␢ அறவே கறந்து,␢ இறுதியில் உன்னை␢ எள்ளி நகையாடுவர்;␢ பின்னர் உன்னைக் காண␢ நேர்ந்தால் ஒதுங்கிச் செல்வர்;␢ உன்னைப் பார்த்துத் தலையாட்டுவர்.⁾ 8⁽ஏமாந்து போகாதவாறு␢ எச்சரிக்கையாய் இரு;␢ உன் அறிவின்மையால் தாழ்வுறாதே.⁾ 9⁽வலியோர் உன்னை␢ விருந்துக்கு அழைக்கும்போது␢ ஆர்வம் காட்டாதே;␢ அப்படியானால் மீண்டும்␢ மீண்டும் உன்னை அழைப்பர்.⁾ 10⁽எதிலும் முந்திக்கொள்ளாதே;␢ நீ ஒதுக்கப்படலாம்.␢ தொலைவில் ஒதுங்கி நில்லாதே;␢ நீ மறக்கப்படுவாய்.⁾ 11⁽வலியோரை உனக்கு இணையாக␢ நடத்த முயலாதே;␢ அவர்களின் நீண்ட␢ பேச்சுகளை நம்பாதே.␢ உன்னை ஆழம் காணவே␢ அவர்கள் நீண்டநேரம்␢ பேசுகின்றார்கள்;␢ அவர்கள் சிரித்துப் பேசுவதும்␢ உன்னைக் கணிப்பதற்கே.⁾ 12⁽இரகசியங்களைக் காப்பாற்றாதோர்␢ இரக்கமற்றோர்;␢ உன்னைக் கொடுமைப்படுத்தவும்␢ சிறைப்படுத்தவும்␢ அவர்கள் தயங்கமாட்டார்கள்.⁾ 13⁽அவற்றைக் காப்பாற்றுவதில்␢ மிகவும் கவனமாய் இரு;␢ ஏனெனில் உனது வீழ்ச்சியை␢ மடியில் கட்டிக்கொண்டு நடக்கிறாய்.⁾ 14⁽*[நீ உறங்கும்போது இவற்றைக்␢ கேட்க நேர்ந்தால் விழித்தெழு;␢ உன் வாழ்நாள்முழுவதும்␢ ஆண்டவர்மீது அன்புசெலுத்து;␢ உன் மீட்புக்காக அவரை மன்றாடு.]⁾ 15⁽ஒவ்வோர் உயிரும்␢ தன் இனத்தின்மீது␢ அன்பு பாராட்டுகிறது;␢ ஒவ்வொரு மனிதரும்␢ தமக்கு அடுத்திருப்பவர்மீது␢ அன்பு செலுத்துகிறார்.⁾ 16⁽உயிரினங்களெல்லாம் தங்கள்␢ இனங்களோடு சேர்ந்து வாழ்கின்றன;␢ மனிதரும் தம்மைப்போன்ற␢ மனிதருடன் இணைந்தே வாழ்கின்றனர்.⁾ 17⁽ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும்␢ உறவு ஏது?␢ பாவிகளுக்கும்␢ இறைப்பற்றுள்ளோருக்கும்␢ தொடர்பு ஏது?⁾ 18⁽கழுதைப் புலிக்கும் நாய்க்கும்␢ இடையே அமைதி ஏது?␢ செல்வர்களுக்கும் ஏழைகளுக்கும்␢ இடையே சமாதானம் ஏது?⁾ 19⁽காட்டுக் கழுதைகள் பாலைநிலத்தில்␢ சிங்கங்களுக்கு இரையாகும்;␢ ஏழைகளைச் செல்வர்கள் விழுங்குவர்.⁾ 20⁽இறுமாப்புக் கொண்டோர்␢ தாழ்ச்சியை அருவருப்பர்;␢ செல்வர் ஏழைகளை அருவருப்பர்.⁾ 21⁽செல்வர் தடுமாறினால்␢ நண்பர்கள் தாங்குவார்கள்;␢ எளியோர் விழும்போது␢ நண்பர்களும் சேர்ந்து␢ தள்ளி விடுவார்கள்.⁾ 22⁽செல்வர் நாத்தவறினால்␢ அவரைக் காப்பாற்றப் பலர் இருப்பர்;␢ தகாதவற்றைப் பேசினும்␢ அவற்றை முறைப்படுத்துவர்.␢ எளியோர் நாத்தவறினால்␢ அவர்கள்மீது குற்றஞ் சாட்டுவர்;␢ அறிவுக்கூர்மையோடு பேசினும்␢ அவர்களுக்குச் செவிசாய்ப்பார்␢ யாரும் இலர்.⁾ 23⁽செல்வர் பேசும்போது எல்லாரும்␢ அமைதியாய்க் கேட்பர்;␢ அவரது பேச்சை வானுயரப் புகழ்வர்.␢ ஏழை பேசும்போது,␢ ‘இவன் யார்?’ எனக் கேட்பர்;␢ பேச்சில் தடுமாற்றம் ஏற்படின்,␢ அவரைப் பிடித்து வெளியே தள்ளுவர்.⁾ 24⁽பாவக் கலப்பில்லாத செல்வம் நன்று;␢ வறுமை தீயது␢ என இறைப்பற்றில்லாதோரே கூறுவர்.⁾ 25⁽மனிதரின் உள்ளம் நன்மைக்கோ␢ தீமைக்கோ முகத் தோற்றத்தை␢ மாற்றி விடுகிறது.⁾ 26⁽இனிய உள்ளத்தின் அடையாளம்␢ மலர்ந்த முகம்.␢ உவமைகளைக் கண்டுபிடிக்கக்␢ கடும் உழைப்போடு கூடிய␢ சிந்தனை வேண்டும்.⁾