1⁽பழிவாங்குவோர்␢ ஆண்டவரிடமிருந்து␢ பழிக்குப்பழியே பெறுவர்.␢ ஆண்டவர் அவர்களுடைய␢ பாவங்களைத் திண்ணமாய்␢ நினைவில் வைத்திருப்பார்.⁾
2⁽உனக்கு அடுத்திருப்பவர்␢ செய்த அநீதியை␢ மன்னித்துவிடு;␢ அவ்வாறெனில் நீ␢ மன்றாடும் போது உன்␢ பாவங்கள் மன்னிக்கப்படும்.⁾
3⁽மனிதர் மனிதர்மீது␢ சினங்கொள்கின்றனர்;␢ அவ்வாறிருக்க, ஆண்டவர்␢ தங்களுக்கு நலம் அளிப்பார்␢ என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?⁾
4⁽மனிதர் தம்போன்ற மனிதருக்கு␢ இரக்கங்காட்டுவதில்லை;␢ அப்போது அவர்கள்␢ தம் பாவமன்னிப்புக்காக␢ எப்படி மன்றாடமுடியும்?⁾
5⁽அழியும் தன்மை கொண்ட␢ மனிதர் வெகுளியை␢ வளர்க்கின்றனர்.␢ அவ்வாறாயின், யார்␢ அவர்களுடைய பாவங்களுக்குக்␢ கழுவாய் தேட முடியும்?⁾
6⁽உன் முடிவை நினைத்துப்பார்;␢ பகைமையை அகற்று;␢ அழிவையும் சாவையையும்␢ நினைத்துப்பார்;␢ கட்டளைகளில் நிலைத்திரு.⁾
7⁽கட்டளைகளை நினைவில் கொள்;␢ அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே;␢ உன்னத இறைவனின்␢ உடன்படிக்கையைக் கருத்தில் வை;␢ குற்றங்களைப் பொருட்படுத்தாதே.⁾
8⁽பூசலைத் தவிர்த்திடு;␢ உன் பாவங்கள் குறையும்.␢ சீற்றங்கொள்வோர் சண்டையை␢ மூட்டிவிடுகின்றனர்.⁾
9⁽பாவிகள் நட்பைக்␢ கலைக்கிறார்கள்;␢ அமைதியாய் இருப்போரிடையே␢ பிணக்கை விதைக்கிறார்கள்.⁾
10⁽விறகின் தன்மைக்கு␢ ஏற்ப நெருப்பு பற்றியெரியும்;␢ பூசலின் கடுமைக்கு␢ ஏற்ப அது பற்றியெரியும்.␢ மனிதரின் வலிமையைப் பொறுத்து␢ அவர்களின் சீற்றம் அமையும்;␢ அவர்களின் செல்வத்தைப் பொறுத்து␢ அவர்களது சினம் பெருகும்.⁾
11⁽திடீர் வாக்குவாதம்␢ நெருப்பை மூட்டுகிறது;␢ திடீர்ப் பூசல் கொலைக்கு␢ இட்டுச் செல்கிறது.⁾
12⁽ஊதும்போது தீப்பொறி␢ கொழுந்துவிட்டு எரிகிறது;␢ அதன்மீது துப்பும்போது␢ அது அணைந்துபோகிறது;␢ இந்த இரு விளைவுகளும்␢ உன் வாயினின்றே புறப்படுகின்றன.⁾
13⁽புறங்கூறுவோரையும்␢ இரட்டை நாக்குக்␢ கொண்டோரையும் சபி.␢ அமைதியில் வாழ்ந்த பலரை␢ அவர்கள் அழித்துவிட்டார்கள்.⁾
14⁽மூன்றாவது நாக்கு*␢ பலரை நிலைகுலையச் செய்தது;␢ அவர்களை நாடுவிட்டு நாடு␢ துரத்தியடித்தது;␢ அரண் கொண்ட நகர்களைத்␢ தகர்த்தெறிந்தது;␢ பெரியோர்களின்␢ வீடுகளைத் தரைமட்டமாக்கியது.⁾
15⁽மூன்றாவது நாக்கு␢ பற்றுள்ள மனைவியரையும்␢ வெளியில் துரத்தியது;␢ அவர்களுடைய உழைப்பின்␢ பயனை இழக்கச் செய்தது.⁾
16⁽அதற்குச் செவிசாய்ப்பவர்கள்␢ ஓய்வு கொள்ளமாட்டார்கள்;␢ அமைதியிலும் வாழமாட்டார்கள்.⁾
17⁽சவுக்கடி தழும்பை உண்டாக்கும்;␢ வாயடியோ எலும்பை முறிக்கும்.⁾
18⁽பலர் வாள்முனையில்␢ மடிந்திருக்கின்றனர்;␢ நாவால் மடிந்தோரே␢ அவர்களை விட மிகுதியானோர்.⁾
19⁽மூன்றாவது நாக்கினின்று␢ பாதுகாக்கப்பட்டோர்␢ பேறுபெற்றோர்;␢ அதன் சீற்றத்துக்கு␢ ஆளாகாதோறும்␢ அதன் நுகத்தைச்␢ சுமக்காதோறும்␢ அதன் சங்கிலிகளால்␢ கட்டப்படாதோரும்␢ பேறுபெற்றோர்.⁾
20⁽அதன் நுகம் இரும்பு நுகம்;␢ அதன் சங்கிலிகள்␢ வெண்கலச் சங்கிலிகள்.⁾
21⁽அதனால் விளையும்␢ சாவு இழிந்த சாவு;␢ அதனைவிடப் பாதாளம்␢ மேலானது.⁾
22⁽இறைப்பற்றுள்ளோர்மீது␢ அதற்கு ஆற்றலில்லை;␢ அதன் தீப்பிழம்புகள்␢ அவர்களை எரிப்பதில்லை.⁾
23⁽ஆண்டவரைவிட்டு விலகுவோர்␢ அதற்குள் விழுகின்றனர்;␢ அவர்களுக்குள் அது␢ கொழுந்துவிட்டு எரியும்;␢ அதை அணைக்க முடியாது.␢ அது சிங்கத்தைப்போன்று␢ அவர்கள் மீது கட்டவீழ்த்து␢ விடப்படும்;␢ வேங்கையைப்போன்று␢ அவர்களைப் பிறிட்டுக் கிழிக்கும்.⁾
24⁽உன் உடைமைகளைச்␢ சுற்றி முள் வேலியிடு;␢ உன் வெள்ளியையும்␢ பொன்னையையும் பூட்டிவை.⁾
25⁽உன் சொற்களை நிறுத்துப்␢ பார்க்கத் துலாக் கோலையும்␢ எடைக்கற்களையும் செய்துகொள்;␢ உன் வாய்க்குக் கதவு␢ ஒன்று செய்து அதைத் தாழிடு.⁾
26⁽நாவால் தவறாதபடி␢ எச்சரிக்கையாய் இரு;␢ இல்லையேல்,␢ உனக்காய்ப் பதுங்கியிருப்போர்␢ முன் நீ வீழ்ச்சியுறுவாய்.⁾