1⁽அவருக்குப்பின் நாத்தான்␢ தோன்றினார்; தாவீதின்␢ காலத்தில் இறைவாக்கு உரைத்தார்.⁾
2⁽நல்லுறவுப் பலியிலிருந்து␢ கொழுப்பு பிரிக்கப்படுவதுபோல்,␢ இஸ்ரயேல் மக்களிடமிருந்து தாவீது␢ தெரிந்துகொள்ளப்பெற்றார்.⁾
3⁽வெள்ளாடுகளுடன்␢ விளையாடுவதுபோலச்␢ சிங்கங்களுடன் விளையாடினார்;␢ செம்மறியாடுகளுடன்␢ விளையாடுவதுபோலக்␢ கரடிகளுடன் விளையாடினார்.⁾
4⁽பெருமை பாராட்டிய␢ கோலியாத்தை நோக்கி இளைஞர்␢ தாவீது தம் கைகளை ஓங்கிக்␢ கவண்கல்லை வீசியபோது␢ ஓர் அரக்கனைக் கொல்லவில்லையா?␢ அதனால் மக்களது␢ இழிநிலையை அகற்றவில்லையா?⁾
5⁽வலிமைமிக்க மனிதனைப்␢ போரில் கொன்று தம்␢ மக்களின் வலிமையை உயர்த்த␢ உன்னத இறைவனாகிய␢ ஆண்டவரை அவர்␢ துணைக்கு அழைத்தார்;␢ ஆண்டவரும் அவருடைய␢ வலக்கைக்கு வலிமையூட்டினார்.⁾
6⁽இவ்வாறு அவர் முறியடித்த␢ பத்தாயிரம் பேருக்காக மக்கள்␢ அவரை மாட்சிமைப்படுத்தினர்;␢ ஆண்டவருடைய ஆசிகளுக்காக␢ அவரைப் புகழ்ந்தனர்; மாட்சியின்␢ மணிமுடியை அவருக்குச் சூட்டினர்.⁾
7⁽எப்புறமும் அவர்␢ பகைவர்களைத் துடைத்தழித்தார்;␢ எதிரிகளான பெலிஸ்தியரை␢ அடக்கி ஒழித்தார்;␢ அவர்களுடைய வலிமையை␢ அறவே நசுக்கினார்.⁾
8⁽தம் எல்லாச் செயல்களிலும்␢ மாட்சியைச் சாற்றும் சொற்களால்␢ உன்னத இறைவனாகிய␢ ஆண்டவருக்கு␢ நன்றி செலுத்தினார்;␢ தம் முழு உள்ளத்தோடும்␢ புகழ்ப்பா இசைத்தார்;␢ தம்மைப் படைத்தவர்மீது␢ அன்பு செலுத்தினார்.⁾
9⁽தங்களுடைய குரலால்␢ இன்னிசை எழுப்பப்␢ பாடகர்களைப் பலிபீடத்திற்குமுன்␢ நிற்கச் செய்தார்.⁾
10⁽திருவிழாக்களைச்␢ சீரோடும் சிறப்போடும்␢ கொண்டாடச் செய்தார்;␢ ஆண்டவருடைய திருப்பெயரை␢ அவர்கள் புகழ்ந்து பாடுவதால்␢ திருவிடம் வைகறையிலிருந்து␢ எதிரொலிக்கும்படி ஆண்டு␢ முழுவதும் காலங்களைக் குறித்தார்.⁾
11⁽ஆண்டவர் அவருடைய␢ பாவங்களை நீக்கினார்;␢ அவருடைய வலிமையை␢ என்றென்றைக்கும் உயர்த்தினார்;␢ மன்னர்களின் உடன்படிக்கையையும்␢ இஸ்ரயேலில் மாட்சியின்␢ அரியணையையும்␢ அவருக்குக் கொடுத்தார்.⁾
12⁽தாவீதுக்குப்பின் அறிவாற்றல்␢ கொண்ட அவருடைய மகன்␢ சாலமோன் தோன்றினார்;␢ தாவீதின் பொருட்டு அவர்␢ பாதுகாப்புடன் வாழ்ந்தார்.⁾
13⁽சாலமோன் அமைதியான␢ காலத்தில் அரசாண்டார்;␢ கடவுள் பெயருக்கு ஓர் இல்லம்␢ எழுப்பவும் ஒரு திரு இடத்தை␢ என்றென்றைக்கும் ஏற்பாடு␢ செய்யவும் எல்லைகளெங்கும்␢ அவருக்கு அமைதி அளித்தார்.⁾
14⁽நீர் உம் இளமையில்␢ எவ்வளவோ ஞானியாய்␢ இருந்தீர்! ஆற்றைப்போல்␢ அறிவுக்கூர்மையால்␢ நிரம்பி வழிந்தீர்!⁾
15⁽உமது செல்வாக்கு␢ மண்ணுலகெங்கும் பரவியது.␢ உவமைகளாலும் விடுகதைகளாலும்␢ அதை நிரப்பினீர்.⁾
16⁽உமது பெயர் தொலைவில்␢ இருந்த தீவுகளையும் எட்டியது;␢ உம் அமைதியின் பொருட்டு␢ நீர் அன்பு பாராட்டப்பட்டீர்.⁾
17⁽உம் பாடல்கள், நீதிமொழிகள்,␢ உவமைகள், விளக்கங்கள்␢ ஆகியவற்றைக் கேட்டு நாடுகள்␢ வியப்படைந்தன.⁾
18⁽இஸ்ரயேலின் கடவுள் என␢ அழைக்கப்பெறும் கடவுளாம்␢ ஆண்டவர் பெயரால் பொன்னை␢ வெள்ளீயத்தைப் போலவும்␢ வெள்ளியை ஈயத்தைப் போலவும்␢ குவித்தீர்.⁾
19⁽ஆனால் பெண்களோடு␢ புணர்ச்சியால் ஈடுபட்டீர்;␢ உம் உடல்மீது அவர்களுக்கு␢ அதிகாரம் அளித்தீர்.⁾
20⁽உமது மாட்சிக்கு மாசு வருவித்தீர்;␢ உமது வழிமரபைக்␢ கறைப்படுத்தினீர்;␢ உம் பிள்ளைகள்மீது␢ சினத்தை வருவித்தீர்;␢ உம் அறிவின்மைக்காக␢ அவர்கள் வருந்தினார்கள்.⁾
21⁽இதனால் அரசு␢ இரண்டாக உடைந்தது;␢ அடங்காத அரசு ஒன்று␢ எப்ராயிமிலிருந்து தோன்றியது.⁾
22⁽ஆண்டவர் இரக்கங் காட்ட␢ மறுக்கமாட்டார்;␢ சொன்ன சொல் தவறமாட்டார்.␢ தாம் தெரிந்து கொண்டோரின்␢ வழிமரபினரைத் துடைத்தழிக்கமாட்டார்;␢ தம்மிடம் அன்பு பாராட்டுவோரின்␢ வழித் தோன்றல்களை␢ அழித்தொழிக்க மாட்டார்;␢ எஞ்சியோரை யாக்கோபுக்குக்␢ கொடுத்தார்; தாவீதின்␢ குடும்பத்திலும் ஒரு␢ வேரை விட்டுவைத்தார்.⁾
23⁽சாலமோன் தம் முன்னோரோடு␢ துயில்கொண்டார்;␢ மக்களுக்குள்ளேயே அறிவிலியும்␢ மதி குறைந்தவனுமான␢ ரெகபெயாமைத் தமக்குப்பின்␢ தம் வழிமரபில் விட்டுச் சென்றார்.␢ அந்த ரெகபெயாம் தன்␢ அறிவுரையால் மக்கள் கிளர்ச்சி␢ செய்யத் தூண்டிவிட்டான்.⁾
24⁽அப்போது நெபாத்து மகன்␢ எரொபவாம் தோன்றினான்;␢ இஸ்ரயேலைப் பாவம் செய்யத்␢ தூண்டினான்; எபிராயிமுக்குப்␢ பாவ வழியைக் காட்டினான்.␢ அவர்களுடைய பாவங்கள்␢ மேன்மேலும் பெருகின. அவர்கள்␢ தங்கள் நாட்டிலிருந்து␢ வெளியேற்றப்பட்டார்கள்.⁾
25⁽ஆண்டவர் அவர்களைப்␢ பழிவாங்கும்வரை அவர்கள்␢ எல்லா வகைத் தீமைகளையும் தேடி␢ அலைந்தார்கள்.⁾