1⁽ஓ, சாவே! தம் உடைமைகளோடு␢ அமைதியாய் வாழ்வோருக்கும்␢ எவ்வகைக் கவலையுமின்றி␢ எல்லாவற்றிலும்␢ வளமை அடைவோருக்கும்␢ நல்ல உணவைச் சுவைத்து மகிழ␢ இன்னும் வலிமையுள்ளோருக்கும்␢ உன் நினைவு எத்துணைக்␢ கசப்பாய் உள்ளது!⁾
2⁽ஆனால், ஓ, சாவே!␢ வறுமையுற்றோருக்கும்␢ வலிமை குன்றியோருக்கும்␢ முதியோருக்கும்␢ பொறுமை இழந்தோருக்கும்␢ உன் முடிவு வரவேற்கத்தக்கது!⁾
3⁽இறப்பின் தீர்ப்புக்கு அஞ்சாதே!␢ உனக்குமுன் இருந்தவர்களையும்␢ உனக்குப்பின் வரப்போகிறவர்களையும்␢ எண்ணிப்பார்.⁾
4⁽இந்தத் தீர்ப்பை எல்லா␢ மனிதருக்கும் ஆண்டவர்␢ விதித்துள்ளார். பின்பு ஏன்␢ உன்னத இறைவனின்␢ விருப்பத்தை ஏற்க மறுக்கிறாய்?␢ நீ வாழ்ந்தது பத்து ஆண்டா,␢ நூறு ஆண்டா, ஆயிரம் ஆண்டா␢ என்பதுபற்றிப் பாதாளத்தில்␢ கேள்வி எழாது.⁾
5⁽பாவிகளின் மக்கள்␢ அருவருப்புக்குரிய மக்களாவர்;␢ இறைப்பற்றிலாதோரின்␢ பதுங்கிடத்தில் அவர்கள் கூடுவர்.⁾
6⁽பாவிகளுடைய மக்களின்␢ உரிமைச்சொத்து அழிந்துபோகும்;␢ அவர்களுடைய வழிமரபில்␢ இகழ்ச்சியே நிலைக்கும்.⁾
7⁽இறைப்பற்றில்லாத தந்தையைப்␢ பற்றி மக்கள் முறையிடுவார்கள்;␢ அவர்கள் அவரால் இகழ்ச்சி␢ அடைவார்கள்.⁾
8⁽இறைப்பற்றில்லாதவர்களே,␢ ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!␢ உன்னத இறைவனின்␢ திருச்சட்டத்தைக் கைவிட்டவர்களே,␢ ஐயோ, உங்களுக்குக் கேடு வரும்!⁾
9⁽நீங்கள் பிறந்தபோது␢ சாபத்திற்குப் பிறந்தீர்கள்;␢ நீங்கள் சாகும்போது சாபமே␢ உங்கள் பங்காகும்.⁾
10⁽மண்ணிலிருந்து வந்ததெல்லாம்␢ மண்ணுக்கே திரும்பும்;␢ இறைப்பற்றில்லாதோறும்␢ சாபத்திலிருந்து␢ அழிவுக்குச் செல்வர்.⁾
11⁽மனிதர் தங்களது␢ உடலைப் பற்றியே புலம்புவர்.␢ பாவிகளுடைய கெட்ட பெயர்␢ துடைக்கப்படும்.⁾
12⁽உன் பெயரைப்பற்றி␢ அக்கறை கொள்; ஆயிரம்␢ பெரிய பொற் புதையல்களை␢ விட உனக்கு அது␢ நிலைத்து நிற்கும்.⁾
13⁽நல்வாழ்க்கை சில நாள்களே␢ நீடிக்கும்;␢ நற்பெயர் என்றென்றும்␢ நிலைக்கும்.⁾
14⁽குழந்தைகளே, நற்பயிற்சியை␢ அமைதியாய்க் கடைப்பிடியுங்கள்.␢ மறைக்கப்பட்ட ஞானம்,␢ காணப்படாத புதையல்␢ இவை இரண்டாலும் என்ன பயன்?⁾
15⁽தம் ஞானத்தை மறைக்கும்␢ மனிதரைவிடத் தம் மடமையை␢ மறைக்கும் மானிடர் சிறந்தோர்.⁾
16⁽ஆகவே எந்தெந்தச் சூழலில்␢ நாணம் காக்கவேண்டும் என␢ உங்களுக்குக் கூறுவேன்;␢ சில வேளைகளில்␢ நாணம் காப்பது நல்லதல்ல;␢ எல்லாவகை நாணத்தையும்␢ ஏற்றுக்கொள்ளலாகாது.⁾
17⁽உங்கள் தாய் தந்தையர்␢ முன்னிலையில் கெட்ட␢ நடத்தைபற்றி நாணம்␢ கொள்ளுங்கள்; ஆட்சியாளர்␢ முன்னும் வலியோர் முன்னும்␢ பொய்யைப் பற்றி வெட்கப்படுங்கள்.⁾
18⁽நடுவர்முன்னும் ஆளுநர்␢ முன்னும் குற்றத்தைப் பற்றியும்,␢ தொழுகைக் கூடத்திலும்␢ மக்கள் முன்னும் சட்ட மீறல்பற்றியும்,⁾
19⁽தோழர் முன்னும் நண்பர்முன்னும்␢ அநீதிபற்றியும், நீங்கள்␢ வாழ்கின்ற இடத்தில்␢ திருட்டைப்பற்றியும்,⁾
20⁽ஆணையையும்␢ உடன்படிக்கையையும்␢ முறித்தல்பற்றியும்,*␢ உணவு மேசை மீது உன்␢ முழங்கைகளை வைப்பதுபற்றியும்,⁾
21⁽கொடுக்கும்போதும் வாங்கும்போதும்␢ மதியாமை பற்றியும்,␢ வணக்கம் செலுத்துவோர்முன்␢ அமைதி காத்தல் பற்றியும்,⁾
22⁽விலைமாதரை நோக்குவதுபற்றியும்,␢ உறவினரின் விண்ணப்பத்தை␢ புறக்கணிப்பது பற்றியும்,⁾
23⁽அடுத்தவரின் பங்கையும் பரிசையும்␢ பறித்துக்கொள்வதுபற்றியும்,␢ மணமான பெண்ணை␢ உற்றுநோக்குவதுபற்றியும்⁾
24⁽ஒருவருடைய பணிப் பெண்ணோடு␢ தகாத பழக்கம் வைத்துக்கொள்வது␢ பற்றியும், — அவளுடைய␢ படுக்கையை நெருங்காதே —⁾
25⁽நண்பர்களைத் திட்டுவதுபற்றியும், —␢ அவர்களுக்கு அன்பளிப்பு␢ வழங்கியபின் அவர்களை இகழாதே —⁾
26⁽நீங்கள் கேள்வியுற்றதைத்␢ திருப்பிச் சொல்வதுபற்றியும்␢ இரகசியங்களை␢ வெளிப்படுத்துவது பற்றியும்␢ வெட்கப்படுங்கள்.⁾
27⁽அப்போது நீங்கள்␢ உண்மையான நாணம்␢ கொள்வீர்கள்; எல்லா மனிதரின்␢ பரிவும் உங்களுக்குக் கிடைக்கும்.⁾