சீராக் 5

முந்திய அடுத்த
1⁽தங்களது வீழ்ச்சிக் காலத்தில்␢ அவர்கள் உதவி பெறுவர்.␢ குழந்தாய்,␢ ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே;␢ கையேந்தி நிற்போரைக்␢ காத்திருக்க வைக்காதே.⁾ 2⁽பசித்திருப்போரை␢ வாட்டி வதைக்காதே;␢ வறுமையில் உழல்வோரை␢ எரிச்சலூட்டாதே.⁾ 3⁽உள்ளம் உடைந்தோர்க்குத்␢ துயரங்களைக் கூட்டாதே;␢ வறுமையில் உழல்வோருக்குக்␢ காலம் தாழ்த்தாமல் உதவி செய்.⁾ 4⁽துன்புறுவோரின் வேண்டுதலைத்␢ தள்ளிவிடாதே;␢ ஏழையரிடமிருந்து␢ உன் முகத்தைத் திருப்பிக்␢ கொள்ளாதே.⁾ 5⁽உன்னிடம் உதவி␢ வேண்டுவோரிடமிருந்து␢ உன் கண்களைத்␢ திருப்பிக் கொள்ளாதே;␢ உன்னைச் சபித்திட யாருக்கும்␢ வாய்ப்பு அளிக்காதே.⁾ 6⁽ஏழைகள் கசப்புணர்வினால்␢ உன்னைச் சபித்தால்,␢ அவர்களைப் படைத்தவர்␢ அவர்களுடைய வேண்டுதலுக்குச்␢ செவிசாய்ப்பார்.⁾ 7⁽மக்களின் அன்புக்கு␢ உரியவனாய் இரு;␢ பெரியோர்களுக்குத் தலை வணங்கு.⁾ 8⁽ஏழைகளுக்குச் செவிசாய்;␢ அவர்களுக்கு அமைதியாக,␢ கனிவோடு பதில் சொல்.⁾ 9⁽ஒடுக்குவோரின் கையினின்று␢ ஒடுக்கப்பட்டோரை விடுவி;␢ நீதியான தீர்ப்பு வழங்குவதில்␢ உறுதியாய் இரு.⁾ 10⁽கைவிடப்பட்டோர்க்குத்␢ தந்தையாய் இரு;␢ அவர்களின் அன்னையர்க்குத்␢ துணைவன்போல் இரு.␢ அப்போது நீ உன்னத␢ இறைவனின் பிள்ளைபோல்␢ இருப்பாய்; தாயைவிட␢ அவர் உன்மீது அன்புகூர்வார்.⁾ 11⁽ஞானம் தன் மக்களை␢ மேன்மைப்படுத்தும்;␢ தன்னைத் தேடுவோர்க்குத்␢ துணைநிற்கும்.⁾ 12⁽ஞானத்திற்கு அன்பர்␢ வாழ்விற்கும் அன்பர்;␢ அதனை வைகறையிலேயே␢ தேடுவோர் மகிழ்ச்சியால் நிரம்புவர்.⁾ 13⁽அதனைப் பற்றிக்கொள்வோர்␢ மாட்சியை உரிமையாக்கிக்கொள்வர்;␢ அது செல்லும் இடமெல்லாம்␢ ஆண்டவர் ஆசி வழங்குவார்.⁾ 14⁽அதற்குப் பணி செய்வோர்␢ தூய இறைவனுக்கே␢ ஊழியம் புரிகின்றனர்;␢ ஞானத்துக்கு அன்பர்␢ ஆண்டவருக்கும் அன்பர்.⁾ 15⁽ஞானத்துக்குப் பணிவோர்␢ மக்களினங்களுக்குத்␢ தீர்ப்பு வழங்குவர்;␢ அதற்குச் செவிசாய்ப்போர்␢ பாதுகாப்பாய் வாழ்வர்;⁾ 16⁽ஞானத்தை நம்புவோர்␢ அதனை உரிமையாக்கிக்␢ கொள்வர்; அவர்களுடைய␢ வழி மரபினரும் அதனை␢ உடைமையாக்கிக் கொள்வர்;⁾ 17⁽முதலில் அவர்களை␢ அது கோணல் வழியில்␢ அழைத்துச் செல்லும்;␢ அவர்களுக்கு அச்ச நடுக்கத்தை␢ வருவிக்கும்;␢ தனக்கு அவர்கள்மீது␢ நம்பிக்கை ஏற்படும்வரை␢ அவர்களை அது கண்டிக்கும்,␢ வதைக்கும்;␢ தன் நெறிமுறைகளால்␢ அவர்களைச் சோதிக்கும்.⁾ 18⁽அது மீண்டும் அவர்களிடமே␢ வந்து அவர்களை மகிழ்விக்கும்;␢ அவர்களுக்குத் தன்␢ இரகசியங்களை வெளிப்படுத்தும்.⁾ 19⁽அதைவிட்டு அவர்கள்␢ விலகிச் சென்றால்,␢ அவர்களை அது கைவிட்டுவிடும்;␢ அழிவுக்கு அவர்களை இட்டுச் செல்லும்.⁾ 20⁽தக்கநேரம் பார்;␢ தீமையைக்குறித்து␢ விழிப்பாயிரு;␢ உன்னைப்பற்றியே␢ நாணம் அடையாதே.⁾ 21⁽ஒரு வகை நாணம்␢ பாவத்திற்கு இட்டுச்செல்லும்;␢ மற்றொரு வகை நாணம்␢ மாட்சியையும் அருளையும் தரும்.⁾ 22⁽பாகுபாடு காட்டி␢ உனக்கே கேடு␢ வருவித்துக் கொள்ளாதே;␢ பணிவின் பெயரால் வீழ்ச்சி␢ அடையாதே.⁾ 23⁽பேச வேண்டிய நேரத்தில்␢ பேசாமல் இருந்துவிடாதே.*⁾ 24⁽ஞானம் பேச்சில் புலப்படும்;␢ நற்பயிற்சி வாய்மொழியால் வெளிப்படும்.⁾ 25⁽உண்மைக்கு மாறாகப் பேசாதே;␢ உன் அறியாமைக்காக␢ நாணம் கொள்.⁾ 26⁽உன் பாவங்களை அறிக்கையிட␢ வெட்கப்படாதே;␢ ஆற்றின் நீரோட்டத்தைத்␢ தடை செய்யமுயலாதே.⁾ 27⁽மூடருக்கு அடிபணியாதே;␢ வலியோருக்குப் பாகுபாடு␢ காட்டாதே.⁾ 28⁽இறக்கும்வரை␢ உண்மைக்காகப் போராடு;␢ கடவுளாகிய ஆண்டவர்␢ உனக்காகப் போரிடுவார்.⁾ 29⁽பேச்சில் துடுக்காய் இராதே;␢ செயலில் சோம்பலாகவும்␢ ஈடுபாடின்றியும் இராதே.⁾ 30⁽வீட்டில் சிங்கம்போல் இராதே;␢ பணியாளர்முன் கோழையாய் இராதே.⁾ 31⁽பெறுவதற்காக மட்டும்␢ கைகளை விரித்து வைத்திராதே;␢ கொடுக்கும் நேரத்திலோ␢ உன் கைகளை மூடிக்கொள்ளாதே.⁾