1⁽திருச்சட்டத்தைக்␢ கடைப்பிடிப்பது␢ பல காணிக்கைகளைக்␢ கொடுப்பதற்கு ஈடாகும்.␢ கட்டளைகளைக் கருத்தில்␢ கொள்வது நல்லுறவுப் பலி␢ செலுத்துவதற்கு ஒப்பாகும்.⁾
2⁽அன்புக்குக் கைம்மாறு␢ செய்வது மாவுப் படையல்␢ அளிப்பதற்கு இணையாகும்.␢ தருமம் செய்வது␢ நன்றிப்பலி செலுத்துவதாகும்.⁾
3⁽தீச்செயலை விட்டுவிடுதல்␢ ஆண்டவருக்கு விருப்பமானது;␢ அநீதியைக் கைவிடுதல்␢ பாவக் கழுவாய்ப் பலியாகும்.⁾
4⁽ஆண்டவர் திருமுன்␢ வெறுங்கையோடு வராதே;␢ கட்டளையை நிறைவேற்றவே␢ பலிகளையெல்லாம் செலுத்து.⁾
5⁽நீதிமான்கள் காணிக்கைகளைச்␢ செலுத்தும்போது பலிபீடத்தில்␢ கொழுப்பு வழிந்தோட,␢ உன்னத இறைவன் திருமுன்␢ நறுமணம் எழுகிறது.⁾
6⁽நீதிமான்களின் பலி␢ ஏற்றுக்கொள்ளத்தக்கது;␢ அதன் நினைவு என்றும் நீங்காது.⁾
7⁽ஆண்டவரைத் தாராளமாய்␢ மாட்சிமைப்படுத்து;␢ உன் உழைப்பின் முதற்கனிகளைக்␢ கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே.⁾
8⁽கொடை வழங்கும்போதெல்லாம்␢ முகமலர்ச்சியோடு கொடு;␢ பத்திலொரு பங்கை மகிழ்ச்சியோடு␢ கடவுளுக்கு உரித்தாக்கு.⁾
9⁽உன்னத இறைவன்␢ உனக்குக் கொடுத்திருப்பதற்கு␢ ஏற்ப நீயும் அவருக்குக் கொடு;␢ உன்னால் முடிந்த அளவுக்குத்␢ தாராளமாய்க் கொடு.⁾
10⁽ஆண்டவரே கைம்மாறு செய்பவர்;␢ ஏழு மடங்கு உனக்குத்␢ திருப்பித் தருபவர்.⁾
11⁽ஆண்டவருக்குக் கையூட்டுக்␢ கொடுக்க எண்ணாதே;␢ அவர் அதை ஏற்கமாட்டார்.␢ அநீத பலியில் நம்பிக்கை வைக்காதே.⁾
12⁽ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்;.␢ அவரிடம் ஒருதலைச் சார்பு␢ என்பதே கிடையாது.⁾
13⁽அவர் ஏழைகளுக்கு எதிராய்␢ எவரையும் ஒருதலைச்␢ சார்பாய் ஏற்கமாட்டார்;␢ தீங்கிழைக்கப்பட்டோரின்␢ மன்றாட்டைக் கேட்பார்.⁾
14⁽கைவிடப்பட்டோரின்␢ வேண்டுதலைப் புறக்கணியார்.␢ தம்மிடம் முறையிடும்␢ கைம்பெண்களைக் கைவிடார்.⁾
15⁽கைம்பெண்களின் கண்ணீர்␢ அவர்களுடைய கன்னங்களில்␢ வழிந்தோடுவதில்லையா?␢ அவர்களைக் கண்ணீர்␢ சிந்த வைத்தவர்களுக்கு␢ எதிராக அவர்களது␢ அழுகுரல் எழுவதில்லையா?⁾
16⁽ஆண்டவரின் விருப்பதிற்கு␢ ஏற்றவாறு பணி␢ செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர்.␢ . அவர்களுடைய மன்றாட்டு␢ முகில்களை எட்டும்.⁾
17⁽தங்களைத் தாழ்த்துவோரின்␢ வேண்டுதல் முகில்களை␢ ஊடுருவிச் செல்லும்;␢ அது ஆண்டவரை அடையும்வரை␢ அவர்கள் ஆறுதல் அடைவதில்லை.⁾
18⁽உன்னத இறைவன்␢ சந்திக்க வரும்வரை␢ அவர்கள் நற்பயிற்சியில்␢ தளர்ச்சியடைவதில்லை;␢ அவர் நீதிமான்களுக்குத்␢ தீர்ப்பு வழங்குகிறார்; தம்␢ தீர்ப்பைச் செயல்படுத்துகிறார்.⁾
19⁽ஆண்டவர் காலம்␢ தாழ்த்தமாட்டார்.⁾
20⁽இரக்கமற்றோரின் இடுப்பை␢ அவர் முறித்துப்␢ பிற இனத்தார்மீது␢ பழி தீர்க்கும்வரை,⁾
21⁽இறுமாப்புக் கொண்டோரின்␢ கூட்டத்தை அழித்து␢ அநீதர்களின் செங்கோல்களை␢ முறிக்கும்வரை,⁾
22⁽மனிதருக்கு அவரவர்␢ செயல்பாட்டுக்கு ஏற்பக்␢ கைம்மாறு செய்யும்வரை,␢ அவரவர் எண்ணத்திற்கு␢ ஏற்ப அவர்களின் செயல்களுக்கு␢ ஈடு செய்யும்வரை,⁾
23⁽தம் மக்களின் வழக்கில்␢ அவர் நீதித் தீர்ப்பிட்டு␢ அவர்களைத் தம்␢ இரக்கத்தினால் மகிழ்விக்கும்வரை,␢ அவர்களிடம் பொறுமை காட்டமாட்டார்.⁾
24⁽வறட்சிக் காலத்தில் தோன்றும்␢ கார் முகில்போலத்␢ துன்பக் காலத்தில் அவரின்␢ இரக்கம் வரவேற்கத்தக்கது.⁾