1⁽நீ விருந்துக்குத் தலைவனாக␢ ஏற்படுத்தப்பட்டுள்ளாயா?␢ இறுமாப்புக் கொள்ளாதே;␢ விருந்தினர்களுள் நீயும்␢ ஒருவனாக நடந்துகொள்;␢ முதலில் மற்றவர்களைக் கவனி;␢ பிறகு நீ பந்தியில் அமர்ந்துகொள்.⁾
2⁽உன் கடமைகளையெல்லாம்␢ நீ செய்தபின் பந்தியில்␢ அமர்ந்துகொள்; அப்போது␢ அவர்கள்மூலம் நீ மகிழ்வாய்;␢ விருந்தை நன்முறையில்␢ நடத்தித்தந்தமைக்காக␢ நீ மணிமுடி பெறுவாய்.⁾
3⁽மூப்பரே, பேசும்;␢ அது உமக்குத் தகும்.␢ ஆனால் நுண்ணிய␢ அறிவாற்றலோடு பேசும்;␢ இன்னிசையைத் தடை செய்யாதிரும்.⁾
4⁽இசை ஒலிக்கும் இடத்தில்␢ மிகுதியாகப் பேசாதீர்;␢ பொருந்தா வேளையில்␢ உம் ஞானத்தை வெளிப்படுத்தாதீர்.⁾
5⁽திராட்சை இரசம் பரிமாறப்படும்␢ விருந்தில் அமையும் இன்னிசை␢ நிகழ்ச்சி பொன் அணிகளில்␢ இருக்கும் மாணிக்க␢ முத்திரை போன்றது.⁾
6⁽சிறப்புமிகு திராட்சை இரசம்␢ பரிமாறப்படும் விருந்தில்␢ அமையும் பண்ணொழுகும்␢ இன்னிசை பொன்␢ அணிகலன்களில் இருக்கும்␢ இரத்தின முத்திரை போன்றது.⁾
7⁽இளைஞனே,␢ தேவைப்பட்டால் பேசு;␢ அரிதாக, அதுவும்␢ இரு முறை வினவப்பெற்றால்␢ மட்டும் பேசு.⁾
8⁽சுருக்கமாய்ப் பேசு;␢ குறைவான சொற்களில்␢ நிறைய சொல்; அறிந்திருந்தும்␢ அமைதியாக இரு.⁾
9⁽பெரியார்கள் நடுவில்␢ உன்னை அவர்களுக்கு␢ இணையாக்கிக் கொள்ளாதே;␢ அடுத்தவர் பேசும்போது␢ உளறிக்கொண்டிராதே.⁾
10⁽இடி முழக்கத்திற்கு␢ முன் மின்னல் வெட்டுகிறது;␢ அடக்கமான மனிதருக்குமுன்␢ அவர்களது நற்பெயர் செல்கிறது.⁾
11⁽விருந்தைவிட்டு நேரத்தோடு␢ எழுந்திரு;␢ கடைசி ஆளாய் இராதே;␢ அலைந்து திரியாது வீட்டுக்கு␢ விரைந்து செல்.⁾
12⁽அங்குக் களித்திரு;␢ உன் விருப்பப்படி செய்;␢ செருக்கான பேச்சுகளால்␢ பாவம் செய்யாதே.⁾
13⁽மேலும் உன்னைப்␢ படைத்தவரைப் போற்று;␢ அவரே தம் நலன்களால்␢ உன்னை நிரப்பியவர்.⁾
14⁽ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர்␢ நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வர்;␢ வைகறையில் அவரைத் தேடுவோர்␢ அவரது பரிவைப் பெற்றுக் கொள்வர்.⁾
15⁽திருச்சட்டத்தை ஆய்ந்தறிவோர்␢ அதனால் நிறைவுபெறுவர்;␢ வெளிவேடக்காரர் அதனால்␢ தடுக்கி விழுவர்.⁾
16⁽ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்␢ நீதித் தீர்ப்பைக் காண்பர்;␢ தங்களின் நேர்மையான␢ செயல்களை ஒளிபோலத்␢ தூண்டிவிடுவர்.⁾
17⁽பாவியர் கண்டனத்தைத்␢ தட்டிக் கழிப்பர்; தங்கள்␢ விருப்பத்திற்கு ஏற்பச்␢ சாக்குப் போக்குகளைக்␢ கண்டுபிடிப்பர்.⁾
18⁽அறிவுள்ளோர் பிறருடைய␢ கருத்துகளைப் புறக்கணியார்;␢ பெருமையும் இறுமாப்பும்␢ கொண்டோர் அச்சத்தால்␢ பின்னடையார்.*⁾
19⁽எண்ணிப் பாராது␢ எதையும் செய்யாதே;␢ செய்தபின் மனம் வருந்தாதே.⁾
20⁽சிக்கலான வழிதனியே␢ போகாதே; ஒரே கல்மீது␢ இரு முறை தடுக்கி விழாதே.⁾
21தடங்கலற்ற வழியை நம்பாதே.
22⁽உன் பிள்ளைகளிடமிருந்தும்␢ உன்னைக் காப்பாற்றிக்கொள்.⁾
23⁽உன் செயல்கள் அனைத்திலும்␢ உன்னையே நம்பு;␢ இவ்வாறு கட்டளைகளைக்␢ கடைப்பிடிப்பாய்.⁾
24⁽திருச்சட்டத்தை நம்புவோர்␢ கட்டளைகளுக்குப்␢ பணிந்து நடப்பர்;␢ ஆண்டவரை நம்புவோர்க்கு␢ இழப்பு என்பதே இல்லை.⁾