சீராக் 8

முந்திய அடுத்த
1⁽தீமை செய்யாதே;␢ தீமை ஒருபோதும் உனக்கு நேராது.⁾ 2⁽அநீதியை விட்டு அகன்று செல்;␢ அநீதியும் உன்னைவிட்டு விலகும்.⁾ 3⁽குழந்தாய், அநீதி எனும்␢ நிலத்தில் விதைக்காதே;␢ அப்போது அதில் நீ ஏழு மடங்கு␢ விளைச்சலை அறுக்கமாட்டாய்.⁾ 4⁽ஆண்டவரிடமிருந்து␢ உயர்நிலையைத் தேடாதே;␢ பெருமைக்குரிய இருக்கையை␢ மன்னரிடமிருந்து நாடாதே.⁾ 5⁽ஆண்டவர் திருமுன் உன்னையே␢ நீதிமான் ஆக்கிக்கொள்ளாதே;␢ மன்னர் முன் உன்னையே␢ ஞானி ஆக்கிக்கொள்ளாதே.⁾ 6⁽நடுவர் ஆவதற்கு விரும்பாதே;␢ அநீதியை நீக்க உன்னால்␢ முடியாமல் போகலாம்;␢ வலியவருக்கு அஞ்சி␢ உன் நேர்மைக்கே இழுக்கு␢ வருவிக்கலாம்.⁾ 7⁽நகர மக்களுக்கு எதிராகக்␢ குற்றம் செய்யாதே;␢ மக்கள்முன் உன் பெயரைக்␢ கெடுத்துக்கொள்ளாதே.⁾ 8⁽செய்த பாவத்தையே␢ மீண்டும் செய்யாதே;␢ அவற்றுள் ஒன்றாவது உனக்குத்␢ தண்டனை பெற்றுத் தரும்.⁾ 9⁽‘நான் அளிக்கும் எண்ணற்ற␢ கொடைகளை ஆண்டவர்␢ கண்ணோக்குவார்;␢ உன்னத கடவுளுக்கு␢ நான் செலுத்தும் பலிகளை␢ ஏற்றுக்கொள்வார்’ எனச் சொல்லாதே.⁾ 10⁽நீ மன்றாடும்போது மனம்␢ சோர்ந்து போகாதே;␢ தருமம் செய்வதைப் புறக்கணியாதே.⁾ 11⁽கசப்புணர்வு கொண்டோரை␢ எள்ளிநகையாடாதே;␢ நம்மைத் தாழ்த்தவும் உயர்த்தவும்␢ வல்லவர் ஒருவர் உள்ளார்.⁾ 12⁽பொய் புனைந்து உன்␢ உடன்பிறப்பை ஏமாற்றாதே;␢ உன் நண்பர்க்கும் அவ்வாறே␢ செய்யாதே.⁾ 13⁽பொய் சொல்ல விரும்பாதே;␢ பொய் பேசும் பழக்கம்␢ நன்மை தராது.⁾ 14⁽மூப்பர் கூட்டத்தில் உளறாதே;␢ நீ வேண்டும் போது␢ பின்னிப் பின்னிப் பேசாதே.⁾ 15⁽கடும் உழைப்பையும்␢ உழவுத் தொழிலையும்␢ வெறுக்காதே;␢ இவை உன்னத இறைவனால்␢ ஏற்படுத்தப்பட்டவை.⁾ 16⁽பாவிகளின் கூட்டத்தோடு␢ சேராதே;␢ கடவுளின் சினம் காலம்␢ தாழ்த்தாது வெளிப்படும்␢ என்பதை மறவாதே.⁾ 17⁽பணிவையே பெரிதும் நாடு;␢ இறைப்பற்றில்லாதவர்களுக்கு␢ நெருப்பும் புழுக்களும்␢ தண்டனையாகக் கிடைக்கும்.⁾ 18⁽பணத்துக்காக நண்பரைக்␢ கைவிடாதே; உண்மையான␢ சகோதரனை ஓபிர் நாட்டுப்␢ பொன்னுக்காகவும் பண்டம் மாற்றாதே.⁾ 19⁽ஞானமுள்ள நல்ல மனைவியை␢ இழந்துவிடாதே;␢ அவளது நன்னயம்␢ பொன்னைவிட உயர்ந்தது.⁾ 20⁽உண்மையுடன் உழைக்கும் உன்␢ அடிமைகளுக்கும்,␢ தங்கள் உயிரையே␢ உனக்காகக் கொடுக்கும்␢ கூலியாள்களுக்கும்,␢ எவ்வகைத் தீங்கும் செய்யாதே.⁾ 21⁽அறிவுக்கூர்மை கொண்ட␢ அடிமைக்கு அன்புகாட்டு;␢ அவனுக்கு விடுதலை␢ கொடுக்க மறுக்காதே.⁾ 22⁽உன் வீட்டில் விலங்குகள்␢ இருந்தால் அவற்றைக்␢ கவனித்துக்கொள்;␢ அவை உனக்குப் பயன்␢ கொடுத்தால் அவற்றை␢ வைத்துக்கொள்.⁾ 23⁽உனக்குப் பிள்ளைகள் இருந்தால்␢ அவர்களுக்கு நற்பயற்சி அளி;␢ இளமைமுதலே பணிந்திருக்கச் செய்.⁾ 24⁽உனக்குப் பெண் பிள்ளைகள்␢ இருந்தால், அவர்களது கற்பில்␢ அக்கறை காட்டு;␢ அவர்களுக்கு மிகுதியாகச்␢ செல்லம் கொடுக்காதே.⁾ 25⁽உன் மகளுக்குத்␢ திருமணம் செய்துவை;␢ உன் தலையாய கடமையைச்␢ செய்தவன் ஆவாய்.␢ அறிவுக்கூர்மை படைத்தவருக்கே␢ உன் மகளை மணமுடித்துக்கொடு.⁾ 26⁽உன் உள்ளத்திற்கு ஏற்ற மனைவி␢ உனக்கு இருந்தால் அவளைத்␢ தள்ளி வைக்காதே;␢ நீ வெறுக்கும் மனைவியை␢ நம்பிவிடாதே.⁾ 27⁽உன் தந்தையை உன்␢ முழு உள்ளத்துடன் மதித்து நட;␢ உன் தாயின் பேறுகாலத்␢ துன்பத்தை மறவாதே.⁾ 28⁽அவர்கள் உன்னைப்␢ பெற்றெடுத்தார்கள்;␢ அதற்கு ஈடாக உன்னால்␢ எதையும் செய்ய முடியாது␢ என்பதை நினைவில் இருத்து.⁾ 29⁽உன் முழு உள்ளத்தோடு␢ ஆண்டவருக்கு அஞ்சு;␢ அவருடைய குருக்களை மதித்து நட.⁾ 30⁽உன்னை உண்டாக்கியவர்மீது␢ உன் முழு வலிமையோடும்␢ அன்பு செலுத்து;␢ அவருடைய திருப்பணியாளர்களைக்␢ கைவிடாதே.⁾ 31⁽ஆண்டவருக்கு அஞ்சு;␢ குருக்களைப் பெருமைப்படுத்து;␢ குருக்களுக்குரிய பங்காகிய␢ முதற்கனி, குற்றம்போக்கும் பலி,␢ உழைப்பின் பயன், தூய்மையாக்கும் பலி,␢ தூய பொருள்களின்␢ முதற்பயன் ஆகியவற்றை␢ உனக்குக் கட்டளையிட்டுள்ளபடி␢ கொடு.⁾ 32⁽ஏழைகளுக்குத் தாராளமாய்க்␢ கொடு;␢ இதனால் இறை ஆசி␢ முழுமையாக உனக்குக் கிடைக்கும்;⁾ 33⁽உயிர் வாழ்வோர் அனைவருக்கும்␢ கனிவோடு கொடு;␢ உயிர் நீத்தோர்க்கும்␢ அன்பு காட்ட மறவாதே.⁾ 34⁽அழுவோரைத் தவிர்க்காதே;␢ புலம்புவோரோடு புலம்பு.⁾ 35⁽நோயாளிகளைச் சந்திக்கத்␢ தயங்காதே;␢ இத்தகைய செயல்␢ மற்றவர்களின் அன்பினை␢ உனக்குப் பெற்றுத் தரும்.⁾ 36⁽எல்லாவற்றிலும் உன் முடிவை␢ நினைவில் கொள்;␢ அவ்வாறெனில் ஒருபோதும்␢ நீ பாவம் செய்யமாட்டாய்.⁾