1⁽யோசியாவின் நினைவு,␢ நறுமணப் பொருள்␢ தயாரிப்பவரால் செய்யப்பட்ட␢ தூபக் கலவைபோன்றது;␢ எல்லாருடைய வாயிலும்␢ தேனைப்போலும், திராட்சை␢ இரசம் பரிமாறப்படும் விருந்தின்␢ இன்னிசைபோலும் இனியது.⁾
2⁽மக்களைச் சீர்படுத்துவதில்␢ நேர்மையாக நடந்துகொண்டார்;␢ தீநெறியின் அருவருப்பை நீக்கினார்.⁾
3⁽ஆண்டவரிடம் தம் உள்ளத்தைச்␢ செலுத்தினார்; தீநெறியாளர்களின்␢ காலத்தில் வாழ்ந்த இறைப்␢ பற்றுள்ளோரை உறுதிப்படுத்தினார்.⁾
4⁽தாவீது, எசேக்கியா, யோசியா,␢ ஆகியோரைத்தவிர மற்ற அனைவரும்␢ பாவத்திற்குமேல் பாவம் செய்தனர்.␢ ஏனெனில் உன்னத இறைவனின்␢ திருச்சட்டத்தைக் கைவிட்டனர்;␢ யூதாவின் மன்னர்களும்␢ மறைந்துபோயினர்.⁾
5⁽அவர்கள் தங்களுடைய வலிமையைப்␢ பிறருக்கு விட்டுக்கொடுத்தார்கள்;␢ தங்களுடைய மாட்சியை அயல்␢ நாட்டாருக்குக் கையளித்தார்கள்.⁾
6⁽திருவிடம் அமைந்திருந்த␢ தெரிந்தெடுக்கப்பட்ட நகரை␢ அவர்கள் தீக்கிரையாக்கினார்கள்;␢ எரேமியா கூறியபடி அதன்␢ தெருக்களைப் பாழாக்கினார்கள்.⁾
7⁽தாயின் வயிற்றிலேயே␢ இறைவாக்கினராகத்␢ திருநிலைப்படுத்தப்பெற்று,␢ பிடுங்கவும் துன்புறுத்தவும்␢ இடிக்கவுமின்றி, கட்டியெழுப்பவும்␢ நட்டுவைக்கவும் ஏற்படுத்தப்␢ பெற்ற எரேமியாவை அவர்கள்␢ கொடுமையாய் நடத்தினார்கள்.⁾
8⁽எசேக்கியேல் கடவுளுடைய␢ மாட்சியின் காட்சியைக் கண்டார்;␢ கெருபுகள் தாங்கின தேரின்மேல்␢ மிளிர்ந்த அம்மாட்சியை ஆண்டவர்␢ அவருக்குக் காட்டினார்.⁾
9⁽பகைவர்களை நினைவுகூர்ந்து␢ புயலை அனுப்பினார்;␢ நேரிய வழியில் நடந்தோருக்கு␢ நலன்கள் புரிந்தார்.⁾
10⁽பன்னிரண்டு இறைவாக்கினர்களின்␢ எலும்புகள் அவர்களது␢ கல்லறையிலிருந்து புத்துயிர் பெற்றெழுக.␢ அவர்கள் யாக்கோபின்␢ குலத்தாரைத் தேற்றினார்கள்;␢ பற்றுறுதி கொண்ட நம்பிக்கையால்␢ அவர்களை விடுவித்தார்கள்.⁾
11⁽செருபாபேலை எவ்வாறு நாம்␢ மேன்மைப்படுத்துவோம்?␢ வலக்கையின் கணையாழிபோல்␢ அவர் திகழ்ந்தார்.⁾
12⁽அவரைப்போலவே யோசதாக்கின்␢ மகன் யோசுவாவும் விளங்கினார்.␢ அவர்கள் தங்கள் காலத்தில்␢ ஆண்டவரின் இல்லத்தைக்␢ கட்டினார்கள்; என்றுமுள␢ மாட்சிக்கென␢ நிறுவப்பட்ட திருக்கோவிலை␢ ஆண்டவருக்கு எழுப்பினார்கள்.⁾
13⁽நெகேமியாவின் நினைவும்␢ பெருமைக்குரியது.␢ இடிந்து விழுந்த மதில்களை␢ அவர் நமக்காக எழுப்பினார்;␢ கதவுகளையும் தாழ்ப்பாள்களையும்␢ பொருத்தினார்; நம் இல்லங்களை␢ மீண்டும் கட்டினார்.⁾
14⁽ஏனோக்குபோன்ற எவரும்␢ மண்ணுலகின்மீது␢ படைக்கப்படவில்லை. அவர்␢ நிலத்திலிருந்து மேலே␢ எடுத்துக் கொள்ளப்பெற்றார்.⁾
15⁽யோசேப்பைப் போன்றவர்␢ எவரும் பிறந்ததில்லை;␢ அவர் சகோதரர்களின்␢ தலைவராகவும் மக்களின்␢ ஊன்றுகோலாகவும் திகழ்ந்தார்.␢ அவருடைய எலும்புகளும்␢ காக்கப்பட்டன.⁾
16⁽சேம், சேத்து ஆகியோர்␢ மனிதருக்குள்␢ மாட்சிமைப்படுத்தப்பெற்றனர்.␢ படைக்கப்பட்ட␢ எல்லா உயிரினங்களுள்ளும்␢ ஆதாம் சிறந்து விளங்குகிறார்.⁾