சீராக் 27

முந்திய அடுத்த
1⁽துணிவுள்ள மனைவியை␢ அடைந்த கணவன் பேறுபெற்றவன்.␢ அவனுடைய வாழ்நாளின்␢ எண்ணிக்கை இரு மடங்காகும்.⁾ 2⁽பற்றுள்ள மனைவி தன் கணவரை␢ மகிழ்விக்கிறாள்;␢ அவன் தன் வாழ்நாள் முழுவதும்␢ அமைதியாகக் கழிப்பான்.⁾ 3⁽நல்ல மனைவியை ஒருவனுக்குக்␢ கிடைக்கும் நல்ல சொத்து.␢ ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்␢ பெறும் செல்வங்களுள் ஒன்றாக␢ அவளும் அருளப்படுவாள்.⁾ 4⁽செல்வனாகவோ ஏழையாகவோ␢ இருந்தாலும் அத்தகையவன்␢ உள்ளம் மகிழ்ந்திருக்கும்;␢ எக்காலத்திலும் அவனது␢ முகம் மலர்ந்திருக்கும்.⁾ 5⁽மூன்றைப்பற்றி என் உள்ளம்␢ அஞ்சுகிறது;␢ நான்காவது என்னை␢ அச்சுறுத்துகிறது. அவை: நகரத்தின் அவதூறு,␢ மக்கள் கும்பல்,␢ தவறான குற்றச்சாட்டு — .␢ இவை மூன்றும் சாவினும் கொடியவை.⁾ 6⁽ஒரு பெண் மற்றொரு␢ பெண்மேல் பொறாமைப்படுவது␢ உள்ளத்துக்குத் துன்பமும்␢ துயரமும் தருகிறது.␢ வெடுக்கென்று பேசும் நாவைக்␢ கொண்டவளை எல்லோரும்␢ உணர்ந்து கொள்வர்.⁾ 7⁽கெட்ட மனைவி எருதுகள்␢ பூட்டிய பொருந்தா நுகத்தடி␢ போன்றவள்; அவளை␢ அடக்குகிறவன் தேளைப்␢ பிடித்தவன் போன்றவன்.⁾ 8⁽குடிவெறியில் உள்ள மனைவி␢ கடுஞ்சினத்தைத் தூண்டிவிடுவாள்;␢ அவள் தன் வெட்கத்தை␢ மறைக்க மாட்டாள்.⁾ 9⁽கற்பு இழந்த பெண்ணை␢ அவளுடைய கண்வெட்டுகளாலும்␢ கண் இமைகளாலும்␢ அறிந்துகொள்ளலாம்.⁾ 10⁽அடக்கமற்ற மகளைக்␢ கண்டிப்புக்குள் வைத்திரு;␢ இல்லையேல் அவள் கண்டிப்புத்␢ தளர்ந்த நிலையை உணர்ந்து␢ அதைத் தனக்கெனப் பயன்படுத்திக்கொள்வாள்.⁾ 11⁽நாணமற்ற அவளுடைய␢ கண்களைப்பற்றி␢ எச்சரிக்கையாய் இரு;␢ இல்லையேல், அவள்␢ உன்னை இழிவுபடுத்தும்போது␢ வியப்படையாதே.⁾ 12⁽தாகம் கொண்ட␢ வழிப்போக்கனைப்போன்று␢ அவள் தன் வாயைத் திறப்பாள்;␢ தனக்கு அருகில் இருக்கும்␢ எந்தத் தண்ணீரையும் பருகுவாள்;␢ ஒவ்வொரு கூடாரத்தின்␢ முளைக்குச்சிக்கு முன்னும் அமர்வாள்;␢ எல்லா அம்புகளுக்கும்␢ தன் தூணியைத் திறப்பாள்.⁾ 13⁽ஒரு மனைவியிடம் விளங்கும்␢ நன்னயம் அவள் கணவனை␢ மகிழ்விக்கும்;␢ அவளிடம் காணப்படும்␢ அறிவாற்றல் அவன் எலும்புகளுக்கு␢ வலுவூட்டும்.⁾ 14⁽அமைதியான மனைவி ஆண்டவர்␢ அளித்த கொடை; நற்பயிற்சி␢ பெற்றவளுக்கு ஈடானது ஏதுமில்லை.⁾ 15⁽அடக்கமுள்ள மனைவியின்␢ அழகே அழகு! கற்புள்ளவளுக்கு␢ ஈடு இணை எதுவுமில்லை.⁾ 16⁽ஒழுங்கமைதி உடைய இல்லத்தில்␢ விளங்கும் நல்ல மனைவியின்␢ அழகு ஆண்டவர் உறையும்␢ உயர்வானில் எழும் கதிரவனைப் போன்றது.⁾ 17⁽தக்க பருவத்தில் மிளிரும்␢ அவளது அழகிய முகம்␢ தூய விளக்குத் தண்டின்மேல்␢ ஒளிரும் விளக்குப் போன்றது.⁾ 18⁽உறுதியான அடிகளின்மேல்␢ அமைந்த அவளுடைய அழகான␢ கால்கள் வெள்ளித் தளத்தின்மேல்␢ நிற்கும் பொன் தூண்களைப்␢ போன்றவை.⁾ 19⁽*[குழந்தாய், உன் இளமைப்␢ பொலிவைத் தீங்கின்றிக்␢ காப்பாற்று; உன் வலிமையை␢ அன்னியரிடம் வீணாக்காதே.⁾ 20⁽சமவெளியெங்கும் வளமான␢ வயலைத் தேடு;␢ உன் நல்ல வழிமரபில்␢ நம்பிக்கை வைத்து,␢ உன் விதையை அங்கே விதை.⁾ 21⁽இவ்வாறு உன் வழிமரபினர்␢ வலிமையுறுவர்;␢ நல்ல வழிமரபில்␢ நம்பிக்கை கொண்டவர்களாய்␢ உயர்வு பெறுவர்.⁾ 22⁽விலைமாது எச்சில்␢ போன்று கருதப்படுவாள்;␢ மணமுடித்த பெண்␢ தன் கள்ளக்காதலர்களுக்குச்␢ சாவுக்கூடமாய் அமைவாள்.⁾ 23⁽இறைப்பற்றில்லா மனைவி,␢ சட்டத்தைக் கடைப்பிடிக்காதவனுக்குக்␢ கொடுக்கப்படும் உடைமை;␢ இறைப்பற்றுள்ள மனைவி␢ ஆண்டவர்பால் அச்சம் கொள்வோனுக்குக்␢ கொடுக்கப்படும் கொடை.⁾ 24⁽நாணமற்ற மனைவி␢ தன் இகழ்ச்சியில்␢ மகிழ்ச்சி அடைகிறாள்;␢ நாணமுள்ள பெண் தன்␢ கணவன் முன்கூட␢ அடக்கமாய் இருப்பாள்.⁾ 25⁽அடக்கமற்ற மனைவி␢ நாய் எனக் கருதப்படுவாள்;␢ நாணமுள்ளவள்␢ ஆண்டவருக்கு அஞ்சுவாள்.⁾ 26⁽தன் கணவனை மதிக்கும்␢ மனைவியை ஞானி என␢ அனைவரும் கண்டுகொள்வர்;␢ தன் கணவனை மதிக்காத,␢ செருக்குற்ற மனைவியை␢ இறைப்பற்றில்லாதவள் என␢ அனைவரும் அறிந்து கொள்வர்.␢ நல்ல மனைவியை அடைந்த␢ கணவன் பேறுபெற்றவன்;␢ அவனுடைய வாழ்நாளின்␢ எண்ணிக்கை இருமடங்காகும்.⁾ 27⁽கூச்சலிட்டு வம்பளக்கும்␢ மனைவி போருக்கு அழைக்கும்␢ எக்காளம் போன்றவள்;␢ இத்தகைய மனைவியை␢ அடைந்தவன் போர்க் குழப்பத்தின்␢ நடுவே தன் வாழ்நாளைக் கழிப்பான்.]⁾ 28⁽இரண்டு வகையினரைப் பற்றி␢ என் உள்ளம் வருந்தியது;␢ மூன்றாம் வகையினர்␢ என் சீற்றத்தைக் கிளறினர்.␢ அவர்கள்:␢ வறுமையில் வாடும் போர்வீரர்,␢ இகழப்படும் அறிவாளிகள்,␢ நன்னெறியை விட்டுப்␢ பாவத்துக்குத் திரும்புவோர்.␢ மேற்கூரியோரை வீழ்த்தும்படி␢ ஆண்டவர் வாளை ஏற்பாடு செய்வார்.⁾ 29⁽தவறுகளைத் தவிர்ப்பது␢ வணிகருக்கு அரிது;␢ விற்பனையாளருக்கும்␢ பாவங்களை விலக்குவது அரிது.⁾