1⁽ஓனியாவின் மகன் சீமோன்␢ தலைமைக் குருவாய்த்␢ திகழ்ந்தார்; அவர் தம் வாழ்நாளில்␢ ஆண்டவருடைய இல்லத்தைப்␢ பழுதுபார்த்தார்; தமது காலத்தில்␢ கோவிலை வலிமைப்படுத்தினார்.⁾
2⁽அவர் உயரமான இரட்டைச்␢ சுவருக்கு அடிக்கல் நாட்டினார்;␢ கோவிலைச்சுற்றி உயர்ந்த சுவர்␢ அணைகளை அமைத்தார்.⁾
3⁽அவருடைய காலத்தில் நீர்த் துறை␢ ஒன்று தோண்டப்பட்டது.␢ அந்நீர்த்தேக்கம் கடலைப்போன்று␢ பரந்தது.⁾
4⁽தம் மக்களை அழிவினின்று␢ காப்பாற்றக் கருத்தாயிருந்தார்;␢ முற்றுகையை எதிர்த்து நிற்க␢ நகரத்தை வலிமைப்படுத்தினார்.⁾
5⁽திரையிட்டியிருந்த தூயகத்திலிருந்து␢ அவர் வெளியே வந்த␢ வேளையில் மக்கள் அவரைச்␢ சூழ்ந்து நின்றபோது␢ எத்துணை மாட்சிமிக்கவராய்த்␢ திகழ்ந்தார்!⁾
6⁽முகில்களின் நடுவே␢ தோன்றும் விடிவெள்ளி␢ போன்று விளங்கினார்;␢ விழாக் காலத்தில் தெரியும்␢ முழு நிலவுபோல் ஒளி வீசினார்.⁾
7⁽உன்னத இறைவனின்␢ கோவிலுக்குமேல் ஒளிரும்␢ கதிரவன் போலவும் மாட்சிமிகு␢ முகில்களில் பளிச்சிடும்␢ வானவில் போலவும் காணப்பட்டார்.⁾
8⁽முதற்கனிகளின் காலத்தில்␢ மலரும் ரோசாபோன்றும்,␢ நீரூற்றின் ஓரத்தில் அலரும்␢ லீலி மலர்போன்றும் கோடைக்␢ காலத்தில் தோன்றும்␢ லெபனோனின் பசுந்தளிர்␢ போன்றும் திகழ்ந்தார்.⁾
9⁽தூபக் கிண்ணத்தில்␢ இருக்கும் தீயும் சாம்பிராணியும்␢ போலவும் எல்லாவகை␢ விலையுயர்ந்த கற்களாலும்␢ அணி செய்த பொற்கலத்தைப்␢ போலவும் விளங்கினார்.⁾
10⁽கனி செறிந்த ஒலிவ மரம்போலவும்␢ முகிலை முட்டும் சைப்பிரசுமரம்␢ போலவும் இருந்தார்.⁾
11⁽அவர் மாட்சியின் ஆடை␢ அணிந்து பெருமைக்குரிய␢ அணிகலன்கள் புனைந்து தூய␢ பலிபீடத்தில் ஏறியபோது␢ திருஇடம் முழுவதையும்␢ மாட்சிப்படுத்தினார்.⁾
12⁽எரிபலி பீடத்தின் அருகே␢ அவர் நிற்க, மற்றக் குருக்கள்␢ மாலைபோல் அவரைச் சூழ்ந்து␢ கொள்ள, அவர் அவர்களின்␢ கைகளிலிருந்து பலியின்␢ பாகத்தைப் பெற்றுக்␢ கொண்டபோது, லெபனோனின்␢ இளங் கேதுரு மரம்போல␢ விளங்கினார். அவர்கள்␢ பேரீச்சைமரம்போல் அவரைச்␢ சூழ்ந்துகொண்டார்கள்.⁾
13⁽ஆரோனின் மைந்தர்கள்␢ எல்லாரும் தங்களது␢ மாட்சியில் ஆண்டவருக்குரிய␢ காணிக்கைகளைத் தங்கள்␢ கைகளில் ஏந்தி இஸ்ரயேலின்␢ சபை முழுவதற்கும் முன்பாக␢ நின்றார்கள்.⁾
14⁽சீமோன் பலிபீடப் பணிகளை␢ முடித்துக்கொண்டு,␢ எல்லாம் வல்ல உன்னத␢ இறைவனுக்குச் செலுத்தவேண்டிய␢ காணிக்கையை ஒழுங்குபடுத்தினார்.⁾
15⁽பின் தமது கையை நீட்டிக்␢ கிண்ணத்தை எடுத்தார்;␢ திராட்சை இரசத்தை␢ அதில் வார்த்தார்;␢ பீடத்தின் அடியில் அதை␢ ஊற்றினார். அது அனைத்திற்கும்␢ மன்னரான உன்னதருக்கு␢ உகந்த நறுமணப் பலியாய்␢ அமைந்தது.⁾
16⁽அதன்பின் ஆரோனின்␢ மைந்தர்கள் ஆர்ப்பரித்தார்கள்;␢ வெள்ளியாலான எக்காளங்களை␢ முழங்கினார்கள்; உன்னத␢ இறைவனை நினைவுபடுத்தப்␢ பேரொலி எழச் செய்தார்கள்.⁾
17⁽எல்லா மக்களும் ஒன்று␢ சேர்ந்து விரைந்தார்கள்;␢ தரையில் குப்புற விழுந்தார்கள்;␢ எல்லாம் வல்ல உன்னத␢ ஆண்டவரை வணங்கினார்கள்.⁾
18⁽பாடகர்கள் தங்கள் குரல்களால்␢ அவரைப் புகழ்ந்தார்கள்;␢ அதன் பேரொலி␢ இன்னிசையாய் எதிரொலித்தது.⁾
19⁽ஆண்டவருக்குரிய␢ வழிபாட்டுமுறை முடியும்வரை␢ இரக்கமுள்ளவர் திருமுன்␢ மக்கள் வேண்டினார்கள்;␢ உன்னத ஆண்டவரை␢ மன்றாடினார்கள்.␢ அதனோடு அவருடைய␢ திருப்பணி நிறைவு பெற்றது.⁾
20⁽ஆண்டவருடைய பெயரில்␢ பெருமை கொள்ளவும்␢ அவருடைய ஆசியைத்␢ தம் வாயால் மொழியவும்␢ சீமோன் இறங்கி வந்து␢ இஸ்ரயேல் மக்களின்␢ முழுச் சபைமீதும் தம்␢ கைகளை உயர்த்தினார்.⁾
21⁽உன்னத கடவுளிடமிருந்து␢ ஆசி பெற்றுக்கொள்ள␢ அவர்கள் மீண்டும் தலை␢ தாழ்த்தி வணங்கினார்கள்.⁾
22⁽இப்பொழுது அண்டத்தின்␢ கடவுளைப் போற்றுங்கள்;␢ எல்லா இடங்களிலும் அரியன␢ பெரியன செய்பவரை, பிறப்பிலிருந்து␢ நம் வாழ்வை மேன்மைப்படுத்துபவரை,␢ தம் இரக்கத்திற்கு ஏற்ப␢ நம்மை நடத்துகிறவரைப் புகழுங்கள்.⁾
23⁽அவர் நமக்கு மனமகிழ்ச்சியை␢ அளிப்பாராக; இஸ்ரயேலில்␢ முந்திய நாள்களில் இருந்ததுபோல␢ நம் நாள்களிலும் அமைதி நிலவுவதாக.⁾
24⁽அவருடைய இரக்கம் நம்முடன்␢ என்றும் இருப்பதாக;␢ நம் நாள்களில் அவர்␢ நம்மை விடுவிப்பாராக.⁾
25⁽இரண்டு வகை மக்களினத்தாரை␢ என் உள்ளம் வெறுக்கிறது;␢ மூன்றாம் வகையினர்␢ மக்களினத்தாரே அல்ல.⁾
26⁽அவர்கள்;␢ சமாரியா மலைமீது வாழ்வோர்,␢ பெலிஸ்தியர், செக்கேமில்␢ குடியிருக்கும் அறிவற்ற மக்கள்.⁾
27⁽எருசலேம் வாழ் எலயாசரின்␢ மகனான சீராக்கின் மைந்தர்␢ ஏசுவாகிய நான் ஞானத்தை␢ என் உள்ளத்திலிருந்து பொழிந்தேன்;␢ கூர்மதியையும் அறிவாற்றலையும்␢ தரும் நற்பயிற்சி அடங்கியுள்ள␢ இந்நூலை எழுதியுள்ளேன்.⁾
28⁽இவற்றில் ஈடுபாடு␢ காட்டுவோர் பேறுபெற்றோர்;␢ தம் உள்ளத்தில் இவற்றை␢ இருத்துவோர் ஞானியர் ஆவர்.⁾
29⁽இவற்றைக் கடைப்பிடிப்போர்␢ அனைத்திலும் ஆற்றல் பெறுவர்.␢ ஆண்டவருடைய ஒளியே␢ அவர்களுக்கு வழி.⁾