சீராக் 34

முந்திய அடுத்த
1⁽ஆண்டவருக்கு அஞ்சி␢ நடப்போர்க்குத்␢ தீங்கு எதுவும் நேராது;␢ அவர்களை அவர் சோதனையினின்று␢ மீண்டும் மீண்டும் விடுவிப்பார்.⁾ 2⁽ஞானிகள் திருச்சட்டத்தை␢ வெறுக்கமாட்டார்கள்;␢ அதைக் கடைப்பிடிப்பதாக␢ நடிப்போர் புயலில் சிக்குண்ட␢ படகுபோல் ஆவர்.⁾ 3⁽அறிவுக்கூர்மை கொண்டோர்␢ திருச்சட்டத்தை நம்புகின்றனர்;␢ அது அவர்களுக்கு இறைமொழி␢ போன்று நம்பிக்கைக்குரியது.⁾ 4⁽உன் பேச்சை ஆயத்தம்␢ செய்து கொள்; அப்போது மக்கள்␢ அதைக் கேட்பார்கள்.␢ நீ பெற்ற நற்பயிற்சியிலிருந்து␢ கருத்துகளை ஒழுங்குபடுத்து;␢ பிறகு மறுமொழி கூறு.⁾ 5⁽மூடரின் உணர்வுகள்␢ சக்கரம் போன்றவை;␢ அவர்களின் எண்ணங்கள்␢ சுழலும் அச்சுப் போன்றவை;⁾ 6⁽பொலி குதிரை மீது␢ யார் ஏறிச் சென்றாலும்␢ அது கனைக்கிறது;␢ எள்ளி நகையாடும் நண்பர்கள்␢ அதைப் போன்றவர்கள்.⁾ 7⁽ஒவ்வொரு நாளும்␢ ஒரே கதிரவனிடமிருந்து␢ ஒளி பெற்றாலும் ஆண்டின் ஒரு␢ நாள் இன்னொரு நாளைவிடச்␢ சிறப்பாக இருப்பது ஏன்?⁾ 8⁽ஆண்டவருடைய ஞானத்தால்␢ நாள்கள் வேறுபடுத்தப்படுகின்றன;␢ அவரே காலங்களையும்␢ விழாக்களையும் வெவ்வேறாக␢ அமைத்தார்.⁾ 9⁽சில நாள்களை அவர் உயர்த்தித்␢ தூய்மைப்படுத்தினார்;␢ சிலவற்றைப் பொதுவான␢ நாள்களாக வைத்தார்.⁾ 10⁽மனிதர் எல்லாரும்␢ நிலத்திலிருந்து வந்தவர்கள்;␢ மானிடர் மண்ணிலிருந்து␢ படைக்கப்பட்டனர்.⁾ 11⁽நிறைவான அறிவாற்றலால்␢ ஆண்டவர் அவர்களை␢ வேறுபடுத்தினார்; அவரே␢ அவர்களின் வழிகளை␢ வெவ்வேறாக அமைத்தார்.⁾ 12⁽ஆசி வழங்கிச் சிலரை␢ அவர் உயர்த்தினார்;␢ சிலரைத் தூயவராக்கித்␢ தம் அருகில் வைத்துக்கொண்டார்.␢ ஆனால் வேறு சிலரைச்␢ சபித்துத் தாழ்த்தினார்;␢ அவர்கள் இடத்திலிருந்தே␢ அவர்களை விரட்டியடித்தார்.⁾ 13⁽குயவர் கையில் களிமண்போல் —␢ அவர்களின் எல்லா வழிகளும்␢ அவர்களது விருப்பப்படியே␢ அமைகின்றன. — மனிதர்␢ தங்களை உண்டாக்கியவரின்␢ கையில் உள்ளனர்; அவர் தமது␢ தீர்ப்புக்கு ஏற்ப அவர்களுக்குக்␢ கைம்மாறு கொடுக்கிறார்.⁾ 14⁽நன்மைக்கு முரணானது தீமை;␢ வாழ்வுக்கு முரணானது சாவு;␢ இறைப்பற்றுள்ளோருக்கு␢ முரணானோர் பாவிகள்.⁾ 15⁽உன்னத இறைவனின்␢ எல்லா வேலைப்பாடுகளையும்␢ உற்று நோக்கு. அவை␢ இணை இணையாக உள்ளன;␢ ஒன்று மற்றொன்றுக்கு␢ எதிராய் இருக்கிறது.⁾ 16⁽இறுதியாக␢ விழித்தெழுந்தவன் நான்;␢ திராட்சைப் பழம் பறிப்போர்␢ விட்டுப்போனவற்றைத்␢ திரட்டியவனைப் போன்றவன் நான்.⁾ 17⁽ஆண்டவரின் ஆசியால் நான்␢ முதன்மை நிலை பெற்றேன்;␢ திராட்சைப்பழம் பறிப்போர்␢ போலத் திராட்சை பிழியும்␢ தொட்டியை நிரப்பினேன்.⁾ 18⁽எண்ணிப்பார்; எனக்காக␢ மட்டும்நான் உழைக்கவில்லை;␢ நற்பயிற்சியைத் தேடும்␢ அனைவருக்காகவுமே உழைத்தேன்.⁾ 19⁽மக்களுள் பெரியோர்களே,␢ நான் சொல்வதைக் கேளுங்கள்;␢ சபைத்தலைவர்களே,␢ கூர்ந்து கேளுங்கள்.⁾ 20⁽உன் மகனையோ␢ மனைவியையோ,␢ சகோதரரையோ நண்பரையோ␢ உன் வாழ்நாளில் உன்மேல்␢ அதிகாரம் செலுத்த விடாதே;␢ உன் செல்வங்களை␢ மற்றவர்களுக்குக் கொடாதே.␢ இல்லையேல் நீ மனவருத்தப்பட்டு␢ அவற்றைத் திருப்பிக் கேட்கக்கூடும்.⁾ 21⁽உன்னிடம் உயிர் உள்ளவரை,␢ மூச்சு இருக்கும்வரை,␢ மற்றவர்கள் உன்மீது அதிகாரம்␢ செலுத்த விடாதே.⁾ 22⁽நீ உன் பிள்ளைகள் கையை␢ எதிர்பார்த்திருப்பதைவிட␢ உன் பிள்ளைகள் உன்னிடம்␢ கேட்பதே மேல்.⁾ 23⁽உன்னுடைய எல்லாச்␢ செயல்களிலும் சிறந்தோங்கு;␢ உன் புகழுக்கு␢ இழுக்கு வருவிக்காதே.⁾ 24⁽உன் வாழ்நாளை நீ முடிக்கும்␢ அந்நாளில்,␢ அந்த இறுதி நேரத்தில்,␢ உன் உரிமைச்சொத்தைப்␢ பகிர்ந்துகொடு.⁾ 25⁽தீவனம், தடி, சுமை கழுதைக்கு;␢ உணவு, கண்டிப்பு, வேலை அடிமைக்கு.⁾ 26⁽அடிமையிடம் வேலை வாங்கு,␢ நீ ஓய்வு காண்பாய்;␢ அவனைச் சோம்பியிருக்க விடு,␢ அவன் தன்னுரிமையைத் தேடுவான்.⁾ 27⁽நுகமும் கடிவாளமும் காளையின்␢ கழுத்தை வளைக்கின்றன;␢ வாட்டுதலும் வதைத்தலும்␢ தீய அடிமையை அடக்குகின்றன.⁾ 28⁽அவனை வேலைக்கு அனுப்பு.␢ இல்லையேல்,␢ அவன் சோம்பித் திரிவான்.␢ சோம்பல் பலவகைத் தீங்கையும்␢ கற்றுக் கொடுக்கிறது.⁾ 29⁽அவனுக்கு ஏற்ற வேலையைச்␢ செய்ய அவனை ஏவு;␢ அவன் பணிந்து நடக்கவில்லையேல்,␢ கடுமையான விலங்குகளை␢ அவனுக்கு மாட்டு.⁾ 30⁽ஆனால் எவரோடும் எல்லை மீறி␢ நடந்துகொள்ளாதே;␢ நீதிக்கு மாறாக எதையும் செய்யாதே.⁾ 31⁽உனக்கு ஓர் அடிமை␢ மட்டும் இருந்தால், அவனை␢ உன்னைப்போல நடத்து;␢ ஏனெனில் அவனை உன்␢ குடும்பத்தானாக வாங்கியுள்ளாய்.⁾ 32⁽உனக்கு ஓர் அடிமை␢ மட்டும் இருந்தால், அவனை␢ உன் சகோதரன் போல நடத்து;␢ ஏனெனில் உன் உயிரைப்போல்␢ உனக்கு அவன் தேவைப்படுவான்.⁾ 33⁽நீ அவனைக் கொடுமைப்படுத்த,␢ அவன் உன்னை விட்டு␢ ஓடிப்போனால் எந்த வழியில்␢ அவனைத் தேடிப் போவாய்?⁾