1⁽இரக்கம் காட்டுவோர் தமக்கு␢ அடுத்திருப்பவருக்குக்␢ கடன் கொடுக்கின்றனர்;␢ பிறருக்கு உதவி வெய்வோர்␢ கட்டளைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.⁾
2⁽அடுத்திருப்பவருக்கு அவருடைய␢ தேவைகளில் கடன் கொடு;␢ உரிய காலத்தில் பிறருடைய␢ கடனைத் திருப்பிக்கொடு.⁾
3⁽சொல் தவறாதே;␢ அடுத்தவர் மீது நம்பிக்கை வை;␢ உனக்குத் தேவையானதை␢ எப்போதும் நீ கண்டடைவாய்.⁾
4⁽வாங்கின கடனைக்␢ கண்டெடுத்த பொருள்போலப்␢ பலர் கருதுகின்றனர்;␢ தங்களுக்கு உதவியோருக்குத்␢ தொல்லை கொடுக்கின்றனர்.⁾
5⁽கடன் வாங்கும்வரை␢ கடன் கொடுப்பவரின்␢ கையை முத்தமிடுவர்;␢ அடுத்திருப்பவரின் செல்வத்தைப்␢ பற்றித் தாழ்ந்த குரலில் பேசுவர்;␢ திருப்பிக் கொடுக்கவேண்டிய␢ போது காலம் தாழ்த்துவர்;␢ பொறுப்பற்ற சொற்களைக் கூறுவர்;␢ காலத்தின்மேல் குறை காண்பர்.⁾
6⁽அவர்கள் கடனைத் திருப்பிக்␢ கொடுக்க முடிந்தாலும்␢ பாதியைக் கொடுப்பதே அரிது.␢ அதையும் கண்டெடுத்த பொருள்␢ என்றே எண்ணிக்கொள்வர்;␢ இல்லையேல்,␢ கடனைத் திருப்பித் தராமல்␢ ஏமாற்றிவிடுவர்;␢ இவ்வாறு தாமாகவே␢ எதிரியை உண்டாக்கிக் கொள்வர்;␢ சாபத்தையும் வசைமொழியையும்␢ திருப்பிக் கொடுப்பர்;␢ மாண்புக்குப் பதிலாக␢ இகழ்ச்சியைத் தருவர்.⁾
7⁽பலர் கடன் கொடாமலிருந்தது␢ தீய எண்ணத்தினால் அன்று;␢ காரணமின்றி ஏமாற்றப்படலாமோ␢ என்னும் அச்சத்தினால்தான்.⁾
8⁽தாழ்நிலையில் இருப்போர்␢ குறித்துப் பொறுமையாய் இரு;␢ நீ இடும் பிச்சைக்காக அவர்கள்␢ காத்திருக்கும்படி செய்யாதே.⁾
9⁽கட்டளையைமுன்னிட்டு␢ ஏழைகளுக்கு உதவிசெய்;␢ தேவையின்போது அவர்களை␢ வெறுங்கையராய்த் திருப்பி␢ அனுப்பாதே.⁾
10⁽பணத்தை உன்␢ சகோதரர்களுக்காகவோ␢ நண்பர்களுக்காகவோ செலவிடு;␢ அழிந்து போகும்படி␢ அதைக் கல்லுக்கு அடியில்␢ மறைத்துவைக்காதே.⁾
11⁽உன்னத இறைவனின்␢ கட்டளைப்படி␢ உன் செல்வத்தைப் பயன்படுத்து;␢ அது பொன்னிலும் மேலாக␢ உனக்குப் பயனளிக்கும்.⁾
12⁽உன் களஞ்சியத்தில்␢ தருமங்களைச் சேர்த்துவை;␢ அவை எல்லாத் தீமையினின்றும்␢ உன்னை விடுவிக்கும்.⁾
13⁽வலிமையான கேடயத்தையும்␢ உறுதியான ஈட்டியையும்விட␢ அவை உன் பகைவரை␢ எதிர்த்து உனக்காகப் போராடும்.⁾
14⁽நல்ல மனிதர் தமக்கு␢ அடுத்திருப்பவருக்குப்␢ பிணையாய் நிற்பர்;␢ வெட்கம் கெட்டோர்␢ அவர்களைக் கைவிட்டுவிடுவர்.⁾
15⁽பிணையாளர் செய்த␢ நன்மைகளை மறவாதே;␢ அவர்கள் தங்கள் வாழ்வையே␢ உனக்காகத் தந்துள்ளார்கள்.⁾
16⁽பாவிகள் பிணையாளர்␢ செய்த நன்மைகளை␢ அழிக்கிறார்கள்;␢ நன்றி கெட்டவர்கள்␢ தங்களை விடுவித்தவர்களையே␢ கைவிட்டு விடுவார்கள்.⁾
17⁽பிணையாய் நின்றதால்␢ செல்வர் பலர் சீரழிந்தனர்;␢ திரை கடல் போல்␢ அலைக்கழிக்கப்பட்டனர்.⁾
18⁽அது வலிய மனிதரை␢ வெளியே துரத்தியது;␢ அயல்நாடுகளில்␢ அலையச் செய்தது.⁾
19⁽பயன் கருதித் தங்களையே␢ பிணையாளர் ஆக்கிக் கொண்ட␢ பாவிகள் தங்களையே␢ தீர்ப்புக்கு உட்படுத்திக்␢ கொள்கிறார்கள்.⁾
20⁽உன்னால் முடிந்தவரை␢ அடுத்தவருக்கு உதவு;␢ நீயே விழுந்துவிடாமல்␢ எச்சரிக்கையாய் இரு.⁾
21⁽வாழ்வின் அடிப்படைத்␢ தேவைகளாவன;␢ தண்ணீர், உணவு, உடை,␢ மானம் காக்க வீடு.⁾
22⁽அடுத்தவர் வீட்டில்␢ உண்ணும் அறுசுவை␢ உணவைவிடத் தன்␢ கூரைக்கு அடியில் வாழும்␢ ஏழையின் வாழ்வே மேல்.⁾
23⁽குறைவோ நிறைவோ␢ எதுவாயினும், இருப்பதைக்␢ கொண்டு மனநிறைவு கொள்;␢ அப்போது உன் வீட்டாரின்␢ பழிச்சொற்களை நீ கேட்கமாட்டாய்.⁾
24⁽வீடு வீடாய்ச் செல்வது␢ இரங்கத்தக்க வாழ்க்கை;␢ இத்தகையோர் போய்த் தங்கும்␢ இடத்தில் பேசவும் துணிய␢ மாட்டார்கள்.⁾
25⁽நீ விருந்தோம்பிப் பருகக்␢ கொடுத்தாலும் செய்நன்றி␢ பெறமாட்டாய்; மேலும்,␢ பின்வரும் கடுஞ் சொற்களையே␢ கேட்பாய்:⁾
26⁽“அன்னியனே, வா இங்கே;␢ உணவுக்கு ஏற்பாடு செய்;␢ ஏதாவது உன் கையில் இருந்தால்␢ எனக்கு உண்ணக் கொடு.⁾
27⁽அன்னியனே, மாண்புடையோர்␢ முன்னிலையிலிருந்து வெளியே போ;␢ என் சகோதரன் என்னுடன்␢ தங்குகிறான்; எனக்கு வீடு தேவை.”⁾
28⁽வீட்டாரின் கடுஞ்சொல்லும்␢ கடன் கொடுத்தோரின்␢ பழிச்சொல்லும் அறிவுள்ள␢ மனிதரால் தாங்க முடியாதவை.⁾