சீராக் 22

முந்திய அடுத்த
1⁽குழந்தாய், பாவம் செய்துவிட்டாயா?␢ இனிமேல் செய்யாதே;␢ உன் பழைய பாவங்களுக்காக␢ மன்னிப்புக் கேள்.⁾ 2⁽பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப்␢ பாவத்தைவிட்டு ஓடிவிடு;␢ நீ பாவத்தின் அருகில் சென்றால்␢ அது உன்னைக் கடிக்கும்;␢ அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள்␢ போன்றவை; அவை மனிதரின்␢ உயிரைப் போக்கி விடும்.⁾ 3⁽நெறிகேடுகள் எல்லாமே␢ இருமுனைக் கூர்வாள்␢ போன்றவை;␢ அதன் காயங்கள் ஆறமாட்டா.⁾ 4⁽திகிலும் இறுமாப்பும்␢ செல்வங்களைப் பாழாக்கும்;␢ செருக்குற்றோரின் வீடு பாழாகும்.⁾ 5⁽ஏழைகளின் வாயினின்று␢ எழும் விண்ணப்பம் கடவுளின்␢ செவிகளை எட்டும்;␢ அவரது நீதித் தீர்ப்பு␢ விரைவில் வரும்.⁾ 6⁽கடிந்துரையை வெறுப்போர்␢ பாவிகளின் வழியில் நடக்கின்றனர்;␢ ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர்␢ மனம் வருந்துவர்.⁾ 7⁽நாவன்மை படைத்தோர்பற்றிய␢ பேச்சு தொலைவிலும் பரவும்;␢ ஆனால் அவர்கள் நாத்தவறும்போது␢ அறிவுள்ளோர்␢ அதைக் கண்டுகொள்வர்.⁾ 8⁽மற்றவர்களின் பணத்தைக் கொண்டு␢ தங்கள் வீட்டைக் கட்டுவோர்␢ தங்கள் கல்லறைக்கு வேண்டிய*␢ கற்களைத் தாங்களே சேர்த்து␢ வைப்போர் போன்றவர்கள்.⁾ 9⁽நெறிகெட்டோரின் கூட்டம்␢ சணல் குப்பை போன்றது;␢ கொழுந்துவிட்டு எரியும்␢ நெருப்பே அவர்களின் முடிவு.⁾ 10⁽பாவிகளின் பாதை வழுவழுப்பான␢ கற்களால் பாவப்பட்டுள்ளது;␢ அதன் முடிவில் கீழுலகின்␢ வாயில் உள்ளது.⁾ 11⁽திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர்␢ தங்கள் எண்ணங்களைக்␢ கட்டுப்படுத்துகின்றனர்;␢ ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சத்தின் நிறைவே ஞானம்.⁾ 12⁽திறமை இல்லாதோருக்குக்␢ கல்வியறிவு புகட்ட முடியாது;␢ கசப்பை விளைவிக்கும் ஒருவகைத்␢ திறமையும் உண்டு.⁾ 13⁽ஞானிகளின் அறிவு வெள்ளம்␢ போலப் பெருக்கெடுத்து ஓடும்;␢ அவர்களின் அறிவுரை␢ வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு␢ நிகராகும்.⁾ 14⁽மூடரின் உள்ளம் ஓட்டைக்␢ கலன் போன்றது;␢ அதில் எவ்வகை அறிவும்␢ தங்கி நிற்காது.⁾ 15⁽அறிவாற்றல் பெற்றோர்␢ ஞானம் நிறைந்த பேச்சைக்␢ கேட்டுப் புகழ்வர்;␢ அது வளம் பெறச் செய்வர்.␢ அப்பேச்சை ஒழுக்கம் கெட்டோர்␢ கேட்க நேரிட்டால் அதை␢ விரும்புவதில்லை;␢ அதை உள்ளத்திலிருந்தும்␢ விரட்டிவிடுவர்.⁾ 16⁽மூடரின் உரை பயணத்தின் போது␢ எடுத்துச் செல்லும் பெருஞ்சுமை␢ போன்றது; அறிவுக்கூர்மை␢ கொண்டோரின் பேச்சு␢ இன்பம் தருகின்றது.⁾ 17⁽அறிவுத்திறன் வாய்ந்தோரின்␢ வாய் மொழிகளைச்␢ சபை விரும்பித் தேடும்;␢ அவர்களின் கருத்துகளை␢ உள்ளத்தில் இருத்திச்␢ சிந்தித்துப் பார்க்கும்.⁾ 18⁽மூடர்களுக்கு ஞானம்␢ பாழடைந்த வீடு போன்றது;␢ மதியீனர்களுக்கு அறிவு␢ பொருளற்ற உரை போன்றது.⁾ 19⁽அறிவிலிகளுக்கு அளிக்கும்␢ நற்பயிற்சி கால்விலங்கு␢ போன்றது;␢ வலக்கையில் மாட்டப்பட்ட␢ தளை போன்றது.⁾ 20⁽மூடர்கள் சிரிக்கும்போது␢ உரத்த குரல் எழுப்புவர்;␢ அறிவில் சிறந்தோர்␢ அமைதியாகப் புன்னகைப்பர்.⁾ 21⁽அறிவுத்திறன் கொண்டோருக்கு␢ நற்பயிற்சி பொன் நகையாகும்;␢ வலக்கையில் அணிந்த␢ கைவளையாகும்.⁾ 22⁽மூடர்களின் கால்கள்␢ மற்றவர்களின் வீட்டுக்குள்␢ விரைகின்றன;␢ பட்டறிவு பெற்றவர்களின்␢ கால்களோ நுழையத் தயங்குகின்றன.⁾ 23⁽அறிவிலிகள் கதவு வழியாக␢ வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்;␢ நற்பயிற்சி பெற்றோர்␢ வெளியே காத்திருப்பர்.⁾ 24⁽நற்பயிற்சி பெறாதோர்␢ கதவு அருகே நின்று␢ ஒற்றுக் கேட்பர்;␢ அறிவுத்திறன் வாய்ந்தோர்␢ அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.⁾ 25⁽அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்;*␢ நுண்ணறிவு கொண்டோர்␢ சொற்களை அளந்து பேசுவர்.⁾ 26⁽அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்;␢ அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.⁾ 27⁽இறைப்பற்றில்லாதோர்␢ தங்கள் எதிரியைச்␢ சபிக்கும்போது தங்களையே␢ சபித்துக்கொள்வர்.⁾ 28⁽புறங்கூறுவோர் தங்களையே␢ மாசுபடுத்திக்கொள்வர்;␢ சுற்றுப்புறத்தார் அவர்களை␢ வெறுப்பர்.⁾