சீராக் 26

முந்திய அடுத்த
1⁽என் மனத்திற்குப்␢ பிடித்தவை மூன்று;␢ அவை ஆண்டவர் முன்னும்␢ மனிதர்முன்னும் அழகுள்ளவை.␢ அவை; உடன்பிறப்புகளிடையே␢ காணப்படும் ஒற்றுமை,␢ அடுத்திருப்பாரோடு ஏற்படும்␢ நட்பு, தங்களுக்குள்␢ ஒன்றி வாழும் கணவன் மனைவியர்.⁾ 2⁽மூன்று வகை மனிதரை␢ நான் வெறுக்கிறேன்;␢ அவர்களின் வாழ்வை␢ நான் பெரிதும்␢ அருவருக்கிறேன்.␢ அவர்கள்; இறுமாப்புக்␢ கொண்ட ஏழைகள்,␢ பொய் சொல்லும் செல்வர்,␢ கூடா ஒழுக்கத்தில் ஈடுபடும்␢ அறிவற்ற முதியவர்.⁾ 3⁽உன் இளமையில் நீ எதையும்␢ சேமித்து வைக்காவிடில்␢ முதுமையில் எதைக் காண்பாய்?⁾ 4⁽தீர்ப்பு வழங்குவது␢ நரை திரை விழுந்தோருக்கு␢ ஏற்றது; அறிவுரை␢ கூறுவது பெரியவர்களுக்குத்␢ தக்கது.⁾ 5⁽முதியோருக்கு ஞானமும்,␢ மாண்புடையோருக்குச்␢ சிந்தனையும் அறிவுரையும்␢ எத்துணைச் சிறந்தவை.⁾ 6⁽பரந்த பட்டறிவே முதியோருக்கு␢ மணிமுடி; ஆண்டவருக்கு␢ அஞ்சுவதே அவர்களுக்கு மாட்சி.⁾ 7⁽பேறுபெற்றோர் என நான்␢ கருதுவோர் ஒன்பது வகைப்படுவர்;␢ பத்தாம் வகையினரைப்பற்றியும்␢ என் நாவால் எடுத்துரைப்பேன்.␢ அவர்கள்; தங்கள் பிள்ளைகளில்␢ மகிழ்ச்சியுறும் பெற்றோர்,␢ தங்கள் பகைவரின் வீழ்ச்சியைக்␢ காண வாழ்வோர்,⁾ 8⁽அறிவுக்கூர்மை கொண்ட␢ மனைவியருடன் வாழும்␢ கணவர்கள்*, நாவால் தவறாதோர்,␢ தங்களைவிடத் தாழ்ந்தோருக்குப்␢ பணிவிடை செய்யாதோர்,⁾ 9⁽அறிவுத்திறனைக் கண்டடைந்தோர்,␢ செவிசாய்ப்போரிடம் பேசுவோர்,⁾ 10⁽ஞானத்தைக் கண்டு␢ கொண்டோர் எத்துணை␢ மேலானவர்கள்! ஆயினும்␢ ஆண்டவருக்கு அஞ்சுவோரை␢ விடச் சிறந்தவர்கள் எவருமில்லை.⁾ 11⁽ஆண்டவருக்கு அஞ்சுதல்␢ எல்லாவற்றையும்விட மேலானது.␢ அதனைப் பெற்றவருக்கு␢ ஈடு இணை ஏது?⁾ 12⁽*[ஆண்டவருக்கு அஞ்சுதலே␢ அவரை அன்புசெய்வதன்␢ தொடக்கம்; பற்றுறுதியே␢ அவரைப் பற்றிக் கொள்வதன்␢ தொடக்கம்.]⁾ 13⁽வருத்தங்களிலெல்லாம்␢ கொடிது மனவருத்தமே;␢ தீமைகளிலெல்லாம் கொடிது␢ பெண்ணிடமிருந்து வரும் தீமையே.⁾ 14⁽துன்பங்களிலெல்லாம் கொடிது␢ நம்மை வெறுப்பவரிடமிருந்து␢ வரும் துன்பமே;␢ பழிகளிலெல்லாம் கொடிது␢ நம் பகைவரிடமிருந்து வரும் பழியே.⁾ 15⁽தலைகளிலெல்லாம் கொடிது␢ பாம்பின் தலையே;␢ சீற்றத்திலெல்லாம் கொடிது␢ பகைவரின் சீற்றமே.⁾ 16⁽கெட்ட மனைவியுடன்␢ வாழ்வதைவிடச் சிங்கத்துடனும்␢ அரக்கப் பாம்புடனும் வாழ்வது மேல்.⁾ 17⁽பெண்ணின் கெட்ட நடத்தை␢ அவளது தோற்றத்தை␢ மாற்றுகிறது; கரடியின்␢ முகத்தைப்போன்று அவளது␢ முகத்தை வேறுபடுத்துகிறது.⁾ 18⁽அவளுடைய கணவர்␢ அடுத்தவர்களுடன் அமரும்போது␢ அவர்கள் சொல்வதைக் கேட்டுக்␢ கடுமையாகப் பெருமூச்சுவிடுவார்.⁾ 19⁽பெண்ணின் தீச்செயலுக்கு␢ முன் மற்ற எல்லாமே சிறிது.␢ பாவிகளுடைய கேட்டுக்கு␢ அவள் ஆளாகட்டும்.⁾ 20⁽மணல்மேட்டில் முதியவரால்␢ ஏறமுடியாது; வாயாடி␢ மனைவியுடன் அமைதியான␢ கணவர் வாழ முடியாது.⁾ 21⁽மங்கையரின் அழகினில்␢ மயங்கி விடாதே; பெண்கள்மீது␢ இச்சை கொள்ளாதே.⁾ 22⁽தன் மனைவியின் ஆதரவில்␢ வாழ்க்கை நடத்தும் கணவர்␢ அவளுடைய சினத்துக்கும்␢ செருக்குக்கும் ஆளாகிப்␢ பெரும் இகழ்ச்சி அடைவார்.⁾ 23⁽சோர்வுற்ற மனம், வாட்டமான முகம்,␢ உடைந்த உள்ளம் ஆகியவை␢ கெட்ட மனைவியினால் வருகின்றன.␢ தன் கணவரை மகிழ்விக்காத␢ மனைவி நலிவுற்ற கைகளையும்␢ வலிமையற்ற முழங்கால்களையும்␢ போன்றவள்.⁾ 24⁽பெண்ணாலேயே பாவம்␢ தோன்றியது. அவளை␢ முன்னிட்டே நாம்␢ அனைவரும் இறக்கிறோம்.⁾ 25⁽தொட்டியிலிருந்து தண்ணீர்␢ ஒழுகியோடவிடாதே;␢ கெட்ட பெண்ணை␢ அவளுடைய விருப்பம்␢ போலப் பேசவிடாதே.⁾ 26⁽உன் விருப்பப்படி␢ உன் மனைவி␢ நடக்கவில்லையெனில்␢ உன்னிடமிருந்து அவளை␢ விலக்கிவை.⁾