சீராக் 28

முந்திய அடுத்த
1⁽வருவாயைப் பெருக்குவதற்காகப்␢ பலர் பாவம் புரிகின்றனர்;␢ செல்வத்திற்காக அலைவோர்␢ தங்கள் கண்களைத்␢ திருப்பிக் கொள்கின்றனர்.⁾ 2⁽கற்களுக்கு இடையே உள்ள␢ துளையில் முளை அடிக்கப்படுகிறது;␢ விற்றல் வாங்கலுக்கு இடையே␢ பாவம் நுழைந்துகொள்கிறது.⁾ 3⁽ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சத்தில் ஒருவன்␢ உறுதியாய் நிலைத்திராவிட்டால்␢ அவனது வீடு␢ விரைவில் நிலைகுலைந்துவிடும்.⁾ 4⁽சலிக்கின்றபோது சல்லடையில்␢ உமி தங்கிவிடுகின்றது;␢ அவ்வாறே, மனிதரின் பேச்சில்␢ மாசுபடிந்துவிடுகின்றது.⁾ 5⁽குயவரின் கலன்களை,␢ சூளை பரிசோதிக்கின்றது;␢ மனிதரை, உரையாடல்␢ பரிசோதிக்கின்றது.⁾ 6⁽கனி, மரத்தின்␢ கண்காணிப்பைக்␢ காட்டுகின்றது;␢ சொல், மனிதரின்␢ உள்ளப் பண்பாட்டைக்␢ காட்டுகின்றது.⁾ 7⁽ஒருவர் பேசுவதற்குமுன்பே␢ அவரைப் புகழாதே;␢ பேச்சைக் கொண்டே␢ அவரை அறிந்து கொள்ளலாம்.⁾ 8⁽நீதிநெறியைப் பின்பற்றி நடந்தால்␢ அதனை அடைந்து கொள்வாய்;␢ மாட்சிமிகு நீண்ட ஆடையாக␢ அதனை அணிந்துகொள்வாய்.⁾ 9⁽பறவைகள் தம்முடைய␢ இனத்தோடு தங்குகின்றன;␢ உண்மை அதனைக்␢ கடைப்பிடிப்போரிடம் குடிகொள்ளும்.⁾ 10⁽இரைக்காகப் பதுங்கிச்␢ சிங்கம் காத்திருக்கின்றது;␢ தீமை செய்கிறவர்களுக்காகப்␢ பாவம் காத்திருக்கின்றது.⁾ 11⁽இறைப்பற்றுள்ளோரின் பேச்சு␢ எப்போதும் ஞானமுள்ளது;␢ அறிவிலிகள் நிலவுபோல மாறுபடுவர்.⁾ 12⁽அறிவிலிகள் நடுவில்␢ காலத்தை வீணாக்காதே;␢ அறிவாளிகள் நடுவில்␢ நிலைத்து நில்.⁾ 13⁽மூடரின் உரை␢ வெறுக்கத்தக்கது;␢ அவர்களின் சிரிப்பு␢ பாவத்தைத் தூண்டவல்லது.⁾ 14⁽அடிக்கடி ஆணையிடுவோரின்␢ பேச்சு மெய்சிலிர்க்கச்␢ செய்கின்றது;␢ அவர்களின் வாய்ச் சண்டை␢ நம் காதுகளை மூடச் செய்கின்றது.⁾ 15⁽செருக்குற்றோரின் வாய்ச்␢ சண்டை கொலைக்கு␢ இட்டுச் செல்லும்;␢ அவர்களின் வசைமொழி␢ கேட்பது வருத்தத்திற்கு உரியது.⁾ 16⁽இரகசியங்களை␢ வெளிப்படுத்துவோர் பிறருடைய␢ நம்பிக்கையை இழக்கின்றனர்;␢ ஆருயிர் நண்பர்களை␢ அவர்கள் அடையமாட்டார்கள்.⁾ 17⁽நண்பருக்கு அன்புகாட்டு;␢ அவர்கள்மீது நம்பிக்கை வை;␢ அவர்களுடைய இரகசியங்களை␢ நீ வெளிப்படுத்திவிட்டால்␢ அவர்கள் பின் செல்லாதே.⁾ 18⁽ஏனெனில் ஒருவர்␢ இன்னொருவரைக் கொலை␢ செய்வதைப்போன்று␢ நீ அடுத்திருப்பவரின்␢ நட்பைக் கொன்றுவிட்டாய்.⁾ 19⁽உன் கையில் இருந்த␢ பறவையை நழுவவிட்டது␢ போல் அடுத்திருப்பவரைப்␢ போகவிட்டு விட்டாய்;␢ இனி நீ அவரைப் பிடிக்கமாட்டாய்.⁾ 20⁽அவரைத் தொடர்ந்து செல்லாதே;␢ ஏனெனில் அவர் தொலைவில்␢ சென்றுவிட்டார்;␢ கண்ணியினின்று தப்பியோடும்␢ மான்போல் ஓடிவிட்டார்.⁾ 21⁽காயத்துக்குக் கட்டுப்போடலாம்;␢ வசைமொழியை மன்னிக்கலாம்;␢ ஆனால் இரகசியங்களை␢ வெளிப்படுத்துவோர்␢ பிறருடைய நம்பிக்கையை␢ இழக்கின்றனர்.⁾ 22⁽கண்ணால் சாடை␢ காட்டுபவர்கள் தீச்செயலுக்குச்␢ சூழ்ச்சி செய்கின்றார்கள்.␢ அதிலிருந்து யாரும்␢ அவர்களைத் தடுக்கமுடியாது.⁾ 23⁽உன் கண்முன் அவர்கள்␢ தேன் ஒழுகப் பேசுவார்கள்;␢ உன் பேச்சைக் கேட்டு␢ வியப்படைவார்கள்;␢ பின்னால் அவர்களது␢ பேச்சு மாறிவிடும்;␢ உன் சொல்லைக் கொண்டே␢ உன்னை இடறிவிழச் செய்வார்கள்.⁾ 24⁽பலவற்றை நான்␢ வெறுத்திருக்கிறேன்;␢ ஆனால் இவர்களை␢ வெறுத்ததுபோல்␢ வேறு எதனையும்␢ வெறுத்ததில்லை.␢ ஆண்டவரும் இவர்களை␢ வெறுக்கின்றார்.⁾ 25⁽கல்லை மேலே எறிவோர்␢ அதைத் தம் தலை␢ மேலேயே எறிந்து கொள்கின்றனர்;␢ நம்பிக்கைக் கேடு எனும்␢ அடி காயங்களைப் புதுப்பிக்கும்.⁾ 26⁽குழி தோண்டுவோர்␢ அதிலேயே விழுவர்;␢ கண்ணி வைப்போர்␢ அதிலேயே பிடிபடுவர்.⁾ 27⁽தீமை செய்வோரைத்␢ தீமை திருப்பித் தாக்கும்;␢ அது எங்கிருந்து வருகிறது␢ என அவர்களுக்கே தெரியாது.⁾ 28⁽ஏளனமும் பழிச்சொல்லும்␢ செருக்குற்றோருக்கு உரியவை;␢ பழிக்குப்பழி அவர்களுக்காகச்␢ சிங்கத்தைப்போல்␢ பதுங்கிக் காத்திருக்கிறது.⁾ 29⁽இறைப்பற்றுள்ளோரின்␢ வீழ்ச்சியில் மகிழ்வோர்␢ கண்ணியின் பிடியில் சிக்குவர்;␢ அவர்கள் இறக்குமுன்␢ துயரமே. அவர்களைக் கொன்றுவிடும்.⁾ 30⁽வெகுளி, சினம் ஆகிய␢ இரண்டும் வெறுப்புக்குரியவை;␢ பாவிகள் இவற்றைப் பற்றிக்␢ கொள்கின்றார்கள்.⁾