1⁽குடிகாரரான தொழிலாளர்கள்␢ செல்வர்களாக முடியாது;␢ சிறியவற்றை புறக்கணிப்போர்␢ சிறிது சிறிதாய் வீழ்ச்சி அடைவர்.⁾
2⁽மதுவும் மாதும் ஞானிகளை␢ நெறிபிறழச் செய்யும்;␢ விலைமாதரோடு உறவு கொள்வோர்␢ அசட்டுத் துணிவு கொள்வர்.⁾
3⁽அவர்களது உடல் அழிவுற,␢ புழு தின்னும்; அசட்டுத் துணிவு␢ கொண்டோர் விரைவில்␢ எடுத்துக்கொள்ளப் பெறுவர்.⁾
4⁽பிறரை எளிதில் நம்புவோர்␢ கருத்து ஆழமற்றோர்;␢ பாவம் செய்வோர் தங்களுக்கே␢ தீங்கு இழைத்துக் கொள்கின்றனர்.⁾
5⁽தீச்செயல்களில்* மகிழ்ச்சி காண்போர்␢ கண்டனத்திற்கு உள்ளாவர்.**⁾
6⁽புறங்கூறுதலை வெறுப்போரிடம்␢ தீமைகள் குறையும்.⁾
7⁽உன்னிடம் கூறப்பட்டதை␢ மற்றவர்களிடம் சொல்லாதே;␢ சொல்லாவிடில், உனக்கு␢ ஒன்றும் குறைந்துவிடாது.⁾
8⁽நண்பராயினும் பகைவராயினும்␢ அதைத் தெரிவிக்காதே;␢ மறைப்பது உனக்குப்␢ பாவமானாலொழிய␢ அதை வெளிப்படுத்தாதே.⁾
9⁽நீ கூறியதைக் கேட்டு␢ உன்னைக் கவனித்தோர்␢ காலம் வரும்போது உன்னை␢ வெறுப்பர்.⁾
10⁽எதையாவது நீ கேள்வியுற்றாயா?␢ அது உன்னோடு மடியட்டும்.␢ துணிவுகொள்; எதுவும் உன்னை␢ அசைக்கமுடியாது.⁾
11⁽அறிவிலிகள் தாங்கள் கேட்டவற்றை␢ வெளியிடாமல் இருப்பது␢ அவர்களுக்குப் பேறுகாலத் துன்பம்␢ போல் இருக்கும்.⁾
12⁽தொடையில் அம்பு␢ ஆழமாகப் பாயும்;␢ அதுபோலப் புரளி␢ அறிவிலிகளின் உள்ளத்தில்␢ உறுத்தும்.⁾
13⁽உன் நண்பர்கனைக் கேட்டுப்பார்;␢ ஒருவேளை அவர்கள் ஒன்றும்␢ செய்யாதிருக்கலாம்.␢ ஒருகால் அதைச் செய்திருந்தாலும்␢ இனிமேலாவது செய்யாதிருப்பார்கள்.⁾
14⁽அடுத்திருப்பவர்களைக் கேட்டுப்பார்;␢ ஒருவேளை அவர்கள்␢ ஒன்றும் சொல்லாதிருந்திருக்கலாம்.␢ ஒருகால் அவற்றைச்␢ சொல்லியிருந்தாலும் மறுமுறை␢ சொல்லாது விட்டுவிடுவார்கள்.⁾
15⁽உன் நண்பர்களைக் கேட்டுப்பார்;␢ நீ கேள்விப்பட்டது பொதுவாக␢ அவதூறாக இருக்கும்.␢ எனவே கேட்பதையெல்லாம்␢ நம்பிவிடாதே.⁾
16⁽அறியாது சிலர் தவறலாம்;␢ தம் நாவால் பாவம்␢ செய்யாதோர் யார்?⁾
17⁽உனக்கு அடுத்திருப்பவரை␢ அச்சுறுத்துமுன் எச்சரிக்கை செய்;␢ உன்னத இறைவனின்␢ திருச்சட்டத்திற்கு உரிய␢ இடம் கொடு.⁾
18⁽*[ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சமே அவரால்␢ ஏற்றுக்கொள்ளப் படுவதன்␢ தொடக்கம்.␢ ஞானம் அவருடைய அன்பைப்␢ பெற்றுத் தருகிறது.]⁾
19⁽*[ஆண்டவருடைய சட்டங்கள்␢ பற்றிய அறிவு வாழ்வு அளிக்கும்␢ நற்பயிற்சியாகும்;␢ அவருக்கு விருப்பமானதைச்␢ செய்வோர் வாழ்வு அளிக்கும்␢ மரத்தின் கனியைப் பெறுவர்.]⁾
20⁽*ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சமே முழு ஞானம்;␢ முழு ஞானம் என்பது␢ திருச்சட்டத்தின் நிறைவே.␢ [அவரது எல்லாம் வல்ல␢ தன்மை பற்றிய அறிவே.⁾
21⁽‘நீர் விரும்புவதைச்␢ செய்யமாட்டேன்’␢ எனத் தன் தலைவரிடம்␢ கூறும் அடிமை␢ பின்பு அதைச் செய்தாலும்␢ தனக்கு உணவு அளித்து␢ வளர்க்கின்றவரின் சினத்தைத்␢ தூண்டி விடுகிறான்.]⁾
22⁽தீமைப்பற்றிய அறிவாற்றல்␢ உண்மையான ஞானமன்று;␢ பாவிகளின் அறிவுரையில்␢ அறிவுத்திறனில்லை.⁾
23⁽அருவருக்கத்தக்க␢ அறிவுடைமையும் உண்டு.␢ ஞானம் இல்லாதோர் மூடராவர்.⁾
24⁽அறிவுத்திறன் இருந்தும்␢ திருச்சட்டத்தை மீறுவோரைவிட␢ அறிவுக்கூர்மை இல்லாது␢ போயினும் இறையச்சம்␢ கொண்டோர் மேலானோர்.⁾
25⁽தெளிந்த அறிவுடைமை␢ இருந்தும் அது அநீதியான␢ தாய் இருக்கலாம்;␢ தீர்ப்பில் வெற்றி பெற␢ நன்மைகளைத் தவறாகப்␢ பயன்படுத்திக் கொள்வர்.⁾
26⁽துயரில் முகவாட்டமுடன்␢ திரியும் தீயவர்கள் உண்டு;␢ அவர்கள் உள்ளத்தில்␢ நிறைந்திருப்பதெல்லாம் வஞ்சகமே.⁾
27⁽அவர்கள் கண்டும்␢ காணாதவர்களாய் ஒன்றும்␢ கேளாதவர்கள்போல் இருப்பார்கள்;␢ அவர்களை யாரும் கவனிக்காத␢ வேளையில் உன்னைப் பயன்படுத்திக்␢ கொள்வார்கள்.⁾
28⁽வலிமைக் குறைவு␢ பாவம் செய்வதினின்று␢ அவர்களைத் தடுத்தாலும்,␢ வாய்ப்புக் கிடைக்கும்போது␢ அவர்கள் தீங்கு செய்வார்கள்.⁾
29⁽தோற்றத்தைக் கொண்டு␢ மனிதரைக் கண்டு கொள்ளலாம்.␢ முதல் சந்திப்பிலேயே␢ அறிவாளியைக் கண்டுகொள்ளலாம்.⁾
30⁽ஒருவருடைய உடையும்␢ மனமுவந்த சிரிப்பும்␢ நடையும் அவர் எத்தகையவர்␢ என்பதைக் காட்டிவிடும்.⁾