1⁽நூனின் மகன் யோசுவா␢ போரில் வல்லவராய் இருந்தார்;␢ இறைவாக்கு உரைப்பதில்␢ மோசேயின் வழித்தோன்றல் ஆனார்;␢ தமது பெயருக்கு ஏற்பப்␢ பெரியவர் ஆனார்;␢ ஆண்டவரால் தெரிந்து␢ கொள்ளப்பட்டவர்களை எதிர்த்து␢ வந்த பகைவர்களைப் பழிக்குப் பழி␢ வாங்கி மீட்பு வழங்கினார்;␢ இவ்வாறு இஸ்ரயேலுக்கு␢ உரிமைச்சொத்தை அளித்தார்.⁾
2⁽தம் கைகளை உயர்த்திப்␢ பகைவரின் நகரங்களுக்கு␢ எதிராய் வாளை வீசிய போது␢ எத்துணை மாட்சி அடைந்தார்!⁾
3⁽அவருக்கு முன்னர் எவர்␢ இவ்வாறு உறுதியாய் நின்றார்?␢ ஆண்டவருடைய போர்களை␢ அவரே முன்னின்று நடத்தினார்.⁾
4⁽அவருடைய கையால் கதிரவன்␢ நின்றுவிடவில்லையா?␢ ஒரு நாள் இரு நாள் போல்␢ ஆகவில்லையா?⁾
5⁽பகைவர்கள் அவரைச்␢ சூழ்ந்து நெருக்கியபோது␢ வலியவரான உன்னத இறைவனை␢ அவர் துணைக்கு அழைத்தார்.␢ கொடிய வலிமை கொண்ட␢ ஆலங்கட்டிகளை மாபெரும்␢ ஆண்டவர் அனுப்பி அவருக்குச்␢ செவிசாய்த்தார்.⁾
6⁽அவர் எதிரி நாட்டின்மீது␢ போர்தொடுத்து அடக்கினார்;␢ மலைச் சரிவில் தம்மை␢ எதிர்த்தவர்களை அழித்தார்␢ இவ்வாறு அந்த நாடு அவருடைய␢ படைவலிமையை அறிந்து␢ கொண்டது; அவர் ஆண்டவர்␢ சார்பாகப் போரிட்டார்␢ என்பதையும் தெரிந்துகொண்டது.⁾
7⁽யோசுவா வலிமை பொருந்திய␢ கடவுளைப் பின்தொடர்ந்தார்;␢ மோசே காலத்தில் அவரைச்␢ சார்ந்து நின்றார். அவரும்␢ எபுன்னேயின் மகன் காலேபும்␢ இஸ்ரயேல் சபையை எதிர்த்து␢ நின்றனர்; பாவத்திலிருந்து␢ மக்களைத் தடுத்தனர்;␢ நன்றி கொன்ற மக்களின்␢ முறுமுறுப்பை அடக்கினர்.⁾
8⁽ஆறு இலட்சம்␢ காலாட்படையினருள்␢ இவர்கள் இருவர் மட்டுமே␢ காப்பாற்றப்பட்டனர்;␢ பாலும் தேனும் பொழியும்␢ நாட்டை உரிமையாக்கிக்␢ கொள்ள மக்களை அழைத்து␢ வந்தனர்.⁾
9⁽ஆண்டவர் வலிமையைக்␢ காலேபுக்கு அளித்தார்␢ முதுமைவரை அது␢ அவரோடு இருந்தது.␢ இதனால் அவர் மலைப்பாங்கான␢ நிலத்திற்கு ஏறிச் சென்றார்;␢ அதையே அவருடைய வழிமரபினர்␢ உரிமையாக்கிக்கொண்டனர்.⁾
10⁽ஆண்டவரைப் பின்தொடர்வது␢ நல்லது என்பதை இஸ்ரயேல்␢ மக்கள் எல்லாரும் இதனால் அறிவர்.⁾
11⁽நீதித் தலைவர்கள் ஒவ்வொருவரும்␢ அவரவர் தம் வழியில்␢ பெயர் பெற்றிருந்தார்கள்.␢ அவர்களது உள்ளம் பிற␢ தெய்வங்களை நாடவில்லை;␢ அவர்கள் ஆண்டவரிடமிருந்து␢ அகன்று போகவில்லை.␢ அவர்களது புகழ் ஓங்குக!⁾
12⁽அவர்களுடைய எலும்புகள்␢ அவை கிடக்கும் இடத்திலிருந்து␢ புத்துயிர் பெற்றெழுக!␢ மாட்சி பெற்ற இம்மனிதரின்␢ பெயர்கள் அவர்களுடைய␢ மக்களிடையே நிலைத்தோங்குக!⁾
13⁽சாமுவேல் தம் ஆண்டவரின்␢ அன்புக்கு உரியவரானார்;␢ ஆண்டவரின் இறைவாக்கினரான␢ அவர் அரசை நிறுவினார்;␢ தம் மக்களுக்கு ஆளுநர்களைத்␢ திருப்பொழிவு செய்தார்;⁾
14⁽ஆண்டவருடைய திருச்சட்டப்படி␢ மக்களுக்குத் தீர்ப்பு வழங்கினார்;␢ இவ்வாறு ஆண்டவர் யாக்கோபைக்␢ கண்காணித்தார்.⁾
15⁽தம் பற்றுறுதியால் அவர்␢ இறைவாக்கினராக␢ மெய்ப்பிக்கப்பெற்றார்;␢ தம் சொற்களால்␢ நம்பிக்கைக்குரிய காட்சியாளர்␢ என்று பெயர் பெற்றார்.⁾
16⁽பகைவர்கள் அவரைச்␢ சூழ்ந்து நெருக்கியபோது␢ வலியவரான ஆண்டவரை␢ அவர் துணைக்கு அழைத்தார்;␢ பால்குடி மறவா ஆட்டுக்குட்டியைப்␢ பலி செலுத்தினார்;⁾
17⁽ஆண்டவர் வானத்திலிருந்து␢ இடி முழங்கச் செய்தார்;␢ பேரொலியிடையே தம் குரல்␢ கேட்கச் செய்தார்.⁾
18⁽தீர் நாட்டாருடைய␢ தலைவர்களையும்␢ பெலிஸ்தியருடைய எல்லா␢ ஆளுநர்களையும் அழித்தார்.⁾
19⁽அவர் மீளாத் துயில் கொள்ளுமுன்,␢ ‘நான் சொத்துகளை, ஏன்,␢ காலணியைக்கூட எவரிடமிருந்தும்␢ கைப்பற்றியதில்லை’ என்று␢ ஆண்டவர் முன்னிலையிலும்␢ அவரால் திருப்பொழிவு␢ பெற்றவர் முன்னிலையிலும்␢ சான்று பகர்ந்தார்.␢ எவரும் அவரைக் குறை கூறவில்லை.⁾
20⁽அவர் துயில் கொண்ட␢ பின்னும் இறைவாக்கு உரைத்தார்;␢ மன்னருக்கு அவருடைய முடிவை␢ வெளிப்படுத்தினார்;␢ மக்களுடைய தீநெறியைத்␢ துடைத்துவிட இறைவாக்காக␢ மண்ணிலிருந்து தம் குரலை␢ எழுப்பினார்.⁾