சீராக் 35

முந்திய அடுத்த
1⁽மதியீனர் வெறுமையான,␢ பொய்யான நம்பிக்கை␢ கொண்டுள்ளனர்.␢ கனவுகள் அறிவிலிகளுக்குப்␢ பறக்க இறக்கைகள் தருகின்றன.⁾ 2⁽கனவுகளைப் பொருட்படுத்துவோர்␢ நிழலைப் பிடிக்க முயல்வோர்␢ போலும், காற்றைத் துரத்துவோர்␢ போலும் ஆவர்.⁾ 3⁽கண்ணாடியில் தெரியும்␢ முகம் வெறும் தோற்றமே;␢ கனவுகளில்␢ தோன்றுவதும் அவ்வாறே.⁾ 4⁽தூய்மையின்மையிலிருந்து␢ தூய்மை வரக்கூடுமோ?␢ பொய்மையிலிருந்து␢ உண்மை வரக்கூடுமோ?⁾ 5⁽குறி கூறல், சகுனம் பார்த்தல்,␢ கனவுகள் பொருளற்றவை;␢ பேறுகாலப் பெண்போன்று␢ உள்ளம் கற்பனை செய்கிறது.⁾ 6⁽அவை உன்னத இறைவனின்␢ குறுக்கீட்டால்␢ அனுப்பப்பட்டாலன்றி␢ உன் மனத்தை அவற்றில்␢ செலுத்தாதே.⁾ 7⁽கனவுகள் பலரை␢ நெறிபிறழச் செய்துள்ளன;␢ அவற்றில் நம்பிக்கை␢ வைத்தோர் வீழ்ச்சியுற்றனர்.⁾ 8⁽இத்தகைய பொய்மையின்றியே␢ திருச்சட்டம் நிறைவேறும்.␢ நம்பிக்கைக்குரியோரின் பேச்சில்␢ ஞானம் நிறைவு பெறும்.⁾ 9⁽பல நாடுகளுக்கும்␢ சென்று வந்தோர்*␢ பலவற்றை அறிவர்;␢ பட்டறிவு மிகுந்தோர்␢ அறிவுக் கூர்மையுடன் பேசுவர்;⁾ 10⁽செயலறிவு இல்லாதோர்␢ சிலவற்றையே அறிவர்;␢ பல நாடுகளுக்கும் சென்று வந்தோர்␢ தங்களது அறிவுடைமையைப்␢ பெருக்கிக்கொள்வர்.⁾ 11⁽என்னுடைய பயணங்களில்␢ பலவற்றைக் கண்டிருக்கிறேன்;␢ நான் எடுத்துரைப்பதைவிட␢ மிகுதியாகப் புரிந்துகொண்டேன்.⁾ 12⁽பல வேளைகளில் நான்␢ சாவுக்குரிய பேரிடருக்கு␢ உட்பட்டிருக்கிறேன்;␢ பட்டறிவால்␢ காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.⁾ 13⁽ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ உயிர்வாழ்வர்; அவர்களது␢ நம்பிக்கை தங்களைக்␢ காப்பாற்றுகிறவர்மேல் இருக்கிறது.⁾ 14⁽ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள்␢ எதற்கும் நடுங்கவோ␢ தயங்கவோ மாட்டார்கள்;␢ ஏனெனில் அவரே␢ அவர்களது நம்பிக்கை.⁾ 15⁽ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ பேறுபெற்றோர்; அவர்கள்␢ யாரை நம்புவார்கள்?␢ அவர்களுடைய துணையாளர் யார்?⁾ 16⁽ஆண்டவருடைய கண்கள்␢ அவர்மேல்␢ அன்புகூர்வோர்மீது உள்ளன;␢ அவரே அவர்களுக்கு␢ உறுதியான பாதுகாப்பு,␢ வலிமைமிக்க துணை,␢ வெப்பத்தில் மறைவிடம்,␢ நண்பகல் வெயிலில் நிழல்;␢ தடுமாற்றத்தில் ஊன்றுகோல்,␢ வீழ்ச்சியில் அரண்.⁾ 17⁽அவர் உள்ளத்தை உயர்த்துகிறார்;␢ கண்களை ஒளிர்விக்கிறார்;␢ நலமும் வாழ்வும் ஆசியும் அருள்கிறார்.⁾ 18⁽அநியாயமாய் ஈட்டியவற்றினின்று␢ பலியிடுவோரின் காணிக்கை␢ மாசுள்ளது;␢ நெறிகெட்டோரின் நன்கொடைகள்␢ ஏற்புடையவை அல்ல.⁾ 19⁽இறைப்பற்றில்லாதோரின்␢ காணிக்கைகளை உன்னத␢ இறைவன் விரும்புவதில்லை;␢ ஏராளமான பலி செலுத்தியதற்காக␢ அவர் ஒருவருடைய பாவங்களை␢ மன்னிப்பதில்லை.⁾ 20⁽ஏழைகளின் உடைமையிலிருந்து␢ பலி செலுத்துவது␢ தந்தையின் கண்முன்னே மகனைக்␢ கொலை செய்வதற்கு இணையாகும்.⁾ 21⁽எளிய உணவே ஏழைகளுக்கு உயிர்;␢ அதை அவர்களிடமிருந்து␢ பறிப்பவர்கள் இரத்த வெறியர்கள்.⁾ 22⁽அடுத்தவர் பிழைப்பைக் கெடுப்பது␢ அவர்களைக் கொல்வதாகும்;␢ கூலியாளின் கூலியைப் பறிப்போர்␢ அவர்களது குருதியையே␢ சிந்துகின்றனர்.⁾ 23⁽ஒருவர் கட்ட,␢ மற்றொருவர் இடித்தால்,␢ கடின உழைப்பைத் தவிர␢ வேறு என்ன பயன் கிட்டும்?⁾ 24⁽ஒருவர் மன்றாடுகையில்␢ மற்றொருவர் சபித்தால்␢ யாருடைய குரலை␢ ஆண்டவர் கேட்பார்?⁾ 25⁽பிணத்தைத் தொட்டவர்␢ குளித்தபின் மீண்டும்␢ அதைத் தொடுவாராயின்,␢ அவர் குளித்ததால் பயன் என்ன?⁾ 26⁽தங்கள் பாவங்களுக்காக␢ நோன்பிருப்போர் வெளியில் சென்று,␢ மீண்டும் அதே பாவங்களைச்␢ செய்தால்,␢ யார் அவர்களது வேண்டுதலைக்␢ கேட்பர்? அவர்கள் தங்களைத்␢ தாழ்த்திக் கொள்வதால் பயன் என்ன?⁾