சீராக் 9

முந்திய அடுத்த
1⁽வலியவரோடு வழக்காடாதே;␢ அவர்கள் கையில்␢ சிக்கிக்கொள்ள நேரிடும்.⁾ 2⁽செல்வருடன் சண்டையிடாதே;␢ உன்னைவிட அவர்கள்␢ வசதிமிக்கவர்கள்.␢ பொன்னாசை பலரை␢ அழித்திருக்கிறது;␢ மன்னர்களின் மனத்தையும்␢ கெடுத்திருக்கிறது.⁾ 3⁽வாயாடிகளோடு வாதிடாதே;␢ எரியும் நெருப்பில்␢ எண்ணெய் வார்க்காதே.⁾ 4⁽பண்பற்றோரிடம் நகையாடாதே;␢ உன் முன்னோரை␢ அவர்கள் பழித்துரைக்கலாம்.⁾ 5⁽பாவத்தினின்று␢ மனந்திரும்புவோரைப் பழிக்காதே;␢ நாம் எல்லாருமே தண்டனைக்கு␢ உரியவர்கள் என்பதை␢ நினைத்துக் கொள்.⁾ 6⁽முதியோர் எவரையும் இகழாதே;␢ நம்முள் சிலரும் முதுமை␢ அடைந்து வருகிறோம்.⁾ 7⁽இறந்தோரைக் கண்டு மகிழாதே;␢ நாம் எல்லாருமே சாக வேண்டும்␢ என்பதை நினைவில் கொள்.⁾ 8⁽ஞானிகளுடைய அறிவுரைகளைப்␢ புறக்கணியாதே;␢ அவர்களுடைய␢ பொன்மொழிகளைக் கற்றுணர்.␢ அவற்றால் நற்பயிற்சி பெறுவாய்;␢ பெரியார்களுக்குப் பணி செய்யக்␢ கற்றுக்கொள்வாய்.⁾ 9⁽முதியோரின் உரைகளைப்␢ புறக்கணியாதே;␢ அவர்களும் தங்கள்␢ முன்னோரிடமிருந்தே␢ கற்றுக்கொண்டார்கள்;␢ அவர்களிடமிருந்து நீயும்␢ அறிவுக் கூர்மை பெறுவாய்;␢ தகுந்த நேரத்தில் தக்க␢ விடை கூற அறிந்துகொள்வாய்.⁾ 10⁽பாவிகளது தீய நாட்டத்தைத்␢ தூண்டிவிடாதே;␢ அது உன்னைப் பொசுக்கிவிடும்.⁾ 11⁽இறுமாப்புக் கொண்டோருடன்␢ மோதாதே; மோதினால்,␢ உன் சொற்களைக் கொண்டே␢ உன்மீது குற்றம் சாட்டுவர்.⁾ 12⁽உன்னிலும் வலியோருக்குக்␢ கடன்கொடாதே;␢ கொடுத்தால்,␢ அதை இழந்து␢ விட்டதாக எண்ணிக்கொள்.⁾ 13⁽உன் உடைமைக்கு மிஞ்சிப்␢ பிணையம் ஆகாதே;␢ பிணையமானால், பணம் செலுத்த␢ ஆயத்தமாய் இரு.⁾ 14⁽நடுவருக்கே எதிராக␢ வழக்குத் தொடுக்காதே;␢ அவரது பெருமையை முன்னிட்டு␢ அவர் சார்பாகவே தீர்ப்பு␢ வழங்கப்படும்.⁾ 15⁽தறுதலைகளோடு பயணம் செய்யாதே;␢ அவர்கள் உனக்குச்␢ சுமையாய் இருப்பார்கள்;␢ தங்களது விருப்பம் போல␢ நடப்பார்கள்;␢ அவர்களது அறிவின்மையால்␢ நீயும் அவர்களோடு அழிய நேரிடும்.⁾ 16⁽முன்கோபிகளுடன் சண்டையிடாதே;␢ அவர்களுடன் ஆளில்லாத்␢ தனியிடத்திற்குச் செல்லாதே.␢ கொலை செய்யவும்␢ அவர்கள் அஞ்சுவதில்லை;␢ உனக்கு உதவி இல்லாத␢ இடத்தில் உன்னைத்␢ தாக்கி வீழ்த்துவார்கள்.⁾ 17⁽அறிவிலிகளோடு கலந்தாராயாதே;␢ அவர்களால் இரகசியங்களைக்␢ காப்பாற்ற முடியாது.⁾ 18⁽மறைக்க வேண்டியவற்றை␢ அன்னியர் முன் செய்யாதே;␢ அவர்கள் எதை வெளியிடுவார்கள்␢ என உனக்குத் தெரியாது.⁾ 19⁽திறந்த உள்ளத்துடன்␢ எல்லாரிடமும் பேசாதே;␢ அவர்கள் உனக்கு நன்றி␢ உள்ளவர்களாய் இருக்கமாட்டார்கள்.⁾