1⁽சோம்பேறிகள் மாசுபடிந்த␢ கல் போன்றவர்கள்;␢ அவர்களது இழிவு கண்டு␢ எல்லோரும் எள்ளி நகையாடுவர்.⁾
2⁽சோம்பேறிகள் குப்பைமேட்டுக்கு␢ ஒப்பானவர்கள்; அதைத்␢ தொடுவோர் அனைவரும்␢ கையை உதறித் தட்டிவிடுவர்.⁾
3⁽நற்பயிற்சி பெறாத␢ மகனைப் பெற்ற␢ தந்தை இகழ்ச்சி அடைவார்;␢ அத்தகைய மகளோ␢ அவருக்கு இழிவைக் கொணர்வாள்.⁾
4⁽அறிவுத்திறன் கொண்ட மகள்␢ கணவரை அடைவாள்;␢ இழிவாக நடப்பவள்␢ தன் தந்தைக்கு வருத்தம்␢ ஏற்படுத்துவாள்.⁾
5⁽நாணமற்ற மகள்␢ தன் தந்தைக்கும் கணவருக்கும்␢ இகழ்ச்சியைக் கொணர்வாள்;␢ அவ்விருவரும் அவளை இகழ்வர்.⁾
6⁽நேரத்திற்குப் பொருந்தாத␢ பேச்சு புலம்பவேண்டிய␢ நேரத்தில் இன்னிசை␢ எழுப்புவதைப் போன்றது;␢ கண்டிப்பும் நற்பயிற்சியும்␢ எக்காலத்திலும் ஞானத்தைக்␢ கொடுக்கும்.⁾
7⁽*[நல்வாழ்க்கை வாழப்␢ பயிற்றுவிக்கப் பெற்ற மக்கள்␢ தங்கள் பெற்றோரின் இழிபிறப்பை␢ மறைத்துவிடுகிறார்கள்.⁾
8⁽ஒழுக்கத்தில் வளர்க்கப்படாமல்␢ இறுமாப்பும் பிடிவாதமும்␢ கொண்ட மக்கள்␢ தங்களின் குலப்பெருமைக்கு␢ அவமானம் கொணர்வார்கள்.]⁾
9⁽மூடருக்குக் கல்வியறிவு␢ புகட்டுவோர் உடைந்துவிட்ட␢ பானை ஓடுகளை␢ ஒட்டுவோருக்கு ஒப்பாவர்;␢ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்போரைத்␢ தட்டி எழுப்புவோர் போலாவர்.⁾
10⁽மூடரோடு பேசுவோர்␢ தூக்கக்கலக்கத்தில்␢ உள்ளவரோடு பேசுவோருக்கு␢ ஒப்பாவர்;␢ பேச்சின் முடிவில், ‘அது என்ன?’␢ என மூடர் கேட்பர்.⁾
11⁽இறந்தோருக்காக அழு;␢ ஒளி அவர்களைவிட்டு␢ மறைந்து விட்டது.␢ மூடருக்காக அழு;␢ அறிவுக்கூர்மை அவர்களை␢ விட்டு அகன்றுவிட்டது.␢ இறந்தோருக்காக அமைதியாக அழு;␢ அவர்கள் அமைதியில்␢ துயில் கொள்கிறார்கள்.␢ மூடரின் வாழ்வு சாவைவிடக் கொடிது.⁾
12⁽இறந்தோருக்காக ஏழு நாள்␢ துயரம் கொண்டாடப்படும்;␢ மூடருக்காகவும்␢ இறைப்பற்றில்லாதோருக்காகவும்␢ அவர்களின் வாழ்நாள் முழுவதும்␢ துயரம் கொண்டாடப்படும்.⁾
13⁽அறிவிலிகளோடு மிகுதியாய்ப்␢ பேசாதே; மதியீனரிடம் செல்லாதே.␢ உனக்குத் தொல்லை ஏற்படாதவாறு␢ எச்சரிக்கையாய் இரு;␢ அவர்களோடு தொடர்பு␢ கொண்டால் நீயும் பாழாவாய்.␢ அவர்களை விட்டு விலகிப்போ;␢ அப்போது ஓய்வு காண்பாய்;␢ அவர்களின் அறிவின்மையால்␢ சோர்வுறமாட்டாய்.⁾
14⁽ஈயத்தைவிடக் கனமானது எது?␢ மூடர் என்பதைவிட␢ அவர்களுக்கு வேறு என்ன␢ பெயர் பொருந்தும்?⁾
15⁽மதி கெட்டோரைப்␢ பொறுத்துக் கொள்வதைவிட␢ மணல், உப்பு, இரும்புத் துண்டு␢ ஆகியவற்றைச் சுமப்பது எளிது.⁾
16⁽கட்டடத்தில் இணைக்கப்பட்ட␢ மர உத்திரங்களை␢ நிலநடுக்கத்தால்கூட␢ அசைக்க முடியாது.␢ ஆழ்ந்த சிந்தனையில்␢ முதிர்ச்சிபெற்ற␢ உள்ளம் கொண்டவர்கள்␢ எந்தக் குழப்பத்திலும்␢ தளர்ச்சியுற மாட்டார்கள்.⁾
17⁽அறிவுக்கூர்மை கொண்ட␢ சிந்தனையில் அமைந்த␢ உள்ளம் சுவரை அழகு␢ செய்யும் பூச்சுப் போன்றது.⁾
18⁽உயர்ந்த இடத்தில்␢ அமைக்கப்பட்ட வேலி␢ காற்றை எதிர்த்து நிற்காது;␢ மூடத்தனமான எண்ணங்கள்␢ கொண்ட கோழை உள்ளம்␢ எவ்வகை அச்சுறுத்தல்களையும்␢ எதிர்த்து நிற்காது.⁾
19⁽கண்ணைக் குத்திக்கொள்வோர்␢ கண்ணீரை வரவழைக்கின்றனர்;␢ உள்ளத்தைக் குத்திக்கொள்வோர்␢ உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றனர்.⁾
20⁽பறவைகள் மீது கல்லெறிவோர்␢ அவற்றை அச்சுறுத்தி ஓட␢ வைக்கின்றனர்;␢ நண்பர்களைப் பழிப்போர்␢ நட்பை முறித்துவிடுகின்றனர்.⁾
21⁽உன் நண்பருக்கு எதிராக␢ வாளை நீ உருவியிருந்தபோதிலும்␢ நம்பிக்கை இழந்துவிடாதே.␢ மீண்டும் நட்பு ஏற்பட வழி உண்டு.⁾
22⁽உன் நண்பருக்கு எதிராகப்␢ பேசியிருந்தாலும் அஞ்சாதே.␢ நல்லிணக்கத்துக்கு வழி உண்டு.␢ இகழ்ச்சி, இறுமாப்பு,␢ இரகசியங்களை வெளியிடல்,␢ வஞ்சகத்தாக்குதல்␢ ஆகியவற்றினின்று எந்த␢ நண்பருமே ஓடிவிடுவர்.⁾
23⁽அடுத்திருப்பவர்களது வறுமையில்␢ அவர்களது நம்பிக்கையைப் பெறு;␢ அவர்களது வளமையை␢ முழுமையாய்ப் பகிர்ந்து␢ கொள்வாய். துன்பவேளையிலும்␢ அவர்களைச் சார்ந்திரு;␢ அதனால் அவர்களின்␢ உரிமைச்சொத்தில்␢ நீயும் பங்கு கொள்வாய்.⁾
24⁽சூளையிலிருந்து நெருப்புக்குமுன்␢ ஆவியும் புகையும்␢ வெளிவருகின்றன.␢ கொலைக்கு முன்னே␢ இழிசொல் இடம் பெறும்.⁾
25⁽நண்பருக்குப் பாதுகாப்பு␢ அளிக்க நான்␢ வெட்கப்படமாட்டேன்;␢ அவரது பார்வையினின்று␢ என்னை மறைத்துக்␢ கொள்ளவும் மாட்டேன்.⁾
26⁽அவர்களால் எனக்குத்␢ தீங்கு நேர்ந்தால்,␢ அதைக் கேள்வியுறுவோர்␢ அனைவரும் அவர்களிடம்␢ எச்சரிக்கையாய் இருப்பர்.⁾
27⁽நான் வீழ்ச்சியுறாதிருக்கவும்␢ என் நாவே என்னை␢ அழிக்காதிருக்கவும் என் வாயைக்␢ காவல் செய்பவர் யார்?␢ என் உதடுகளை நுண்ணறிவு␢ எனும் முத்திரையிட்டு␢ மூடுபவர் யார்?⁾