1⁽உன் செல்வங்களில் நம்பிக்கை␢ வைக்காதே;␢ ‘எனக்கு அவை போதும்’␢ எனச் சொல்லாதே.⁾
2⁽உன் நாட்டங்களுக்கும்␢ வலிமைக்கும் அடிமையாகாதே;␢ உன் உள்ளத்து விருப்பங்களைப்␢ பின்பற்றாதே.⁾
3⁽எனக்கு எதிராய்ச்␢ செயல்படக்கூடியவர் யார்?␢ எனச் சொல்லாதே;␢ ஆண்டவர் உன்னைத்␢ தண்டியாமல் விடமாட்டார்.⁾
4⁽‘நான் பாவம் செய்தேன்;␢ இருப்பினும்,␢ எனக்கு என்ன நேர்ந்துவிட்டது?’␢ எனக்கூறாதே;␢ ஆண்டவர் பொறுமை உள்ளவர்.⁾
5⁽பாவத்துக்கு மேல் பாவம்␢ செய்யும் அளவுக்குப்␢ பாவ மன்னிப்புப்பற்றி␢ அச்சம் இல்லாமல் இராதே.␢ ‘ஆண்டவரின் பரிவு எல்லையற்றது;⁾
6⁽‘எண்ணற்ற என் பாவங்களை␢ அவர் மன்னித்துவிடுவார்’␢ என உரைக்காதே.␢ அவரிடம் இரக்கமும்␢ சினமும் உள்ளன;␢ அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.⁾
7⁽ஆண்டவரிடம் திரும்பிச்␢ செல்லக் காலம் தாழ்த்தாதே.␢ நாள்களைத் தள்ளிப்போடாதே.␢ ஆண்டவரின் சினம்␢ திடீரென்று பொங்கியெழும்;␢ அவர் தண்டிக்கும் காலத்தில்␢ நீ அழிந்துபோவாய்.⁾
8⁽முறைகேடான செல்வங்களில்␢ நம்பிக்கை வைக்காதே;␢ பேரிடரின் நாளில் அவற்றால்␢ உனக்குப் பயன் இராது.⁾
9⁽எல்லா வகைக் காற்றிலும்␢ தூற்றிக் கொள்ளாதே;␢ எல்லா வழிகளிலும் போகாதே;␢ இரட்டை நாக்குக்* கொண்ட␢ பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.⁾
10⁽உன் மனச்சான்றை␢ உறுதியோடு பின்பற்று;␢ முன் பின் முரண்படாமல் பேசு.⁾
11⁽விரைந்து செவிசாய்;␢ பொறுத்திருந்து விடை கூறு.⁾
12⁽உனக்குத் தெரிந்தால்,␢ மறுமொழி கூறு;␢ இல்லையேல் வாயை மூடிக்கொள்.⁾
13⁽பெருமையும் சிறுமையும்␢ பேச்சினால் வரும்;␢ நாக்கே ஒருவருக்கு␢ வீழ்ச்சியைத் தரும்.⁾
14⁽புறங்கூறுபவன் எனப்␢ பெயர் வாங்காதே;␢ உன் நாவால் மற்றவர்களுக்குக்␢ கண்ணி வைக்காதே.␢ திருடர்களுக்கு உரியது இகழ்ச்சி;␢ இரட்டை நாக்கினருக்கு␢ உரியது கடும் கண்டனம்.⁾
15⁽பெரிதோ சிறிதோ எதிலும்␢ குற்றம் செய்யாதே;␢ நண்பனாவதற்கு மாறாகப்␢ பகைவனாகாதே.␢ கெட்ட பெயர் இழுக்கையும்␢ பழிச்சொல்லையும் வருவிக்கும்;␢ இரட்டை நாக்குக்கொண்ட␢ பாவிகளுக்கு இவை நேரும்.⁾