சீராக் 17

முந்திய அடுத்த
1⁽பயனற்ற பிள்ளைகள்␢ பலரைப் பெற ஏங்காதே;␢ இறைப்பற்றில்லாத மக்கள் பற்றி␢ மகிழ்ச்சி கொள்ளாதே.⁾ 2⁽அவர்கள் பலராய் இருப்பினும்␢ ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சம் அவர்களிடம்␢ இல்லையெனில் அவர்களால்␢ மகிழ்ச்சி அடையாதே.⁾ 3⁽அவர்களின் நீடிய வாழ்வில்␢ நம்பிக்கை வைக்காதே;␢ அவர்களுடைய எண்ணிக்கையை␢ நம்பியிராதே.␢ ஓராயிரம் பிள்ளைகளைவிட␢ ஒரே பிள்ளை சிறந்ததாய்␢ இருக்கலாம்;␢ இறைப்பற்றில்லாத பிள்ளைகளைப்␢ பெறுவதைவிடப் பிள்ளையின்றி␢ இறப்பது நலம்.⁾ 4⁽அறிவுக்கூர்மை படைத்த ஒருவர்␢ ஒரு நகரையே மக்களால்␢ நிரப்பக் கூடும்;␢ ஒழுக்க வரம்பு அற்றோரின்␢ ஒரு குலம் அதைச் சுடுகாடாக␢ மாற்ற இயலும்.⁾ 5⁽இவைபோன்ற பலவற்றை␢ என் கண் கண்டுள்ளது;␢ இவற்றினும் பெரியனவற்றை␢ என் காது கேட்டுள்ளது.⁾ 6⁽பாவிகளின் கூட்டத்தில்␢ தீ கொழுந்துவிட்டு எரியும்;␢ கட்டுப்பாடில்லா நாட்டில் சினம்␢ பற்றியெரியும்.⁾ 7⁽தங்கள் வலிமைகொண்டு␢ கிளர்ச்சி செய்த பழங்கால␢ அரக்கர்களை ஆண்டவர்␢ மன்னிக்கவில்லை.⁾ 8⁽லோத்து என்பவரை அடுத்து␢ வாழ்ந்தவர்களை அவர் அழிக்காமல்␢ விடவில்லை; அவர்களின்␢ இறுமாப்பினால் அவர்களை␢ வெறுத்தார்.⁾ 9⁽கேட்டிற்குரிய நாட்டின்மீது␢ அவர் இரக்கம் காட்டவில்லை;␢ தங்கள் பாவங்களால் அவர்கள்␢ வேருடன் களைந்து␢ எறியப்பட்டார்கள்.⁾ 10⁽தங்கள் பிடிவாதத்தால்␢ திரண்ருந்த ஆறு␢ இலட்சம் காலாட்படையினரையும்␢ அவர் தண்டிக்காமல் விடவில்லை.⁾ 11⁽பிடிவாதம் கொண்ட␢ ஒருவர் இருந்திருந்தால்கூட␢ அவர் தண்டனை பெறாது␢ விடப்பட்டிருந்தால் அது␢ வியப்பாக இருந்திருக்கும்!␢ இரக்கமும் சினமும்␢ ஆண்டவரிடம் உள்ளன.␢ அவர் மன்னிப்பதில் வல்லவர்;␢ தம் சினத்தைக் காட்டுவதிலும்␢ வல்லவர்.⁾ 12⁽அவரின் இரக்கம் பெரிது;␢ அவரது தண்டனை கடுமையானது.␢ அவரவர் செயல்களுக்கு ஏற்ப␢ அவர் மனிதருக்குத் தீர்ப்பளிக்கிறார்.⁾ 13⁽பாவிகள் தங்கள் கொள்ளைப்␢ பொருள்களுடன் தப்பமாட்டார்கள்.␢ இறைப்பற்றுள்ளோரின் பொறுமை␢ வீண்போகாது.⁾ 14⁽தருமங்கள் அனைத்தையும்␢ அவர் குறித்து வைக்கிறார்;␢ மனிதர் எல்லாரும் அவரவர்␢ தம் செயல்களுக்கு ஏற்பக்␢ கைம்மாறு பெறுவர்.⁾ 15⁽*[ஆண்டவரைப் பார்வோன்␢ அறிந்து கொள்ளாதவாறும்␢ அதனால் அவருடைய␢ செயல்களை உலகம்␢ தெரிந்து கொள்ளாதவாறும்␢ அவனுக்குப் பிடிவாதமுள்ள␢ உள்ளத்தைக் கொடுத்தார்.]⁾ 16⁽படைப்பு முழுவதற்கும் அவர்␢ தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார்;␢ ஒளியையும் இருளையும்␢ தூக்குநூல் கொண்டு␢ பிரித்துவைத்தார்.⁾ 17⁽‘நான் ஆண்டவரிடமிருந்து␢ ஒளிந்து கொள்வேன்;␢ உயர் வானிலிருந்து யார்␢ என்னை நினைப்பார்?␢ இத்துணை பெரிய மக்கள் திரளில்␢ என்னை யாருக்கும் தெரியாது;␢ அளவற்ற படைப்பின்␢ நடுவே நான் யார்?’␢ என்று சொல்லிக் கொள்ளாதே.⁾ 18⁽இதோ! அவரது வருகையின்போது␢ வானமும் வானகத்தின்␢ மேல் உள்ள விண்ணகமும்␢ கீழுலகும் மண்ணுலகும் நடுங்கும்.⁾ 19⁽அவரது பார்வைப் பட்டதும்␢ மலைகளும் மண்ணுலகின்␢ அடித்தளங்களும் அதிர்ந்து␢ நடுங்குகின்றன.⁾ 20⁽இவைபற்றி மனிதர் யாரும்␢ நினைத்துப் பார்ப்பதில்லை.␢ அவருடைய வழிகளை␢ யாரே அறிவர்?⁾ 21⁽புயலை யாரும் காண்பதில்லை;␢ அவருடைய செயல்களுள்␢ பல மறைந்துள்ளன.⁾ 22⁽அவருடைய நீதியின்␢ செயல்களை யாரால்␢ அறிவிக்கமுடியும்?␢ அவற்றுக்காக யார்␢ காத்திருக்க முடியும்?␢ அவரின் உடன்படிக்கை␢ தொலைவில் உள்ளது.⁾ 23⁽மேற்கூறியவை அறிவில்லாதவர்களின்␢ எண்ணங்கள்; மதிகெட்ட,␢ நெறிபிறழ்ந்த மனிதர்கள்␢ மூடத்தனமானவற்றை␢ நினைக்கிறார்கள்.⁾ 24⁽குழந்தாய், நான்␢ சொல்வதைக் கேள்;␢ அதனால் அறிவு பெறு;␢ என் சொற்கள்மீது␢ உன் கருத்தைச் செலுத்து.⁾ 25⁽நற்பயிற்சியை உனக்கு␢ நுட்பமாகக் கற்பிப்பேன்;␢ அறிவை உனக்குச்␢ செம்மையாய் புகட்டுவேன்.⁾ 26⁽தொடக்கத்தில் ஆண்டவர்␢ தம் படைப்புகளை␢ உண்டாக்கியபோது,*␢ பின்னர் அவற்றின் எல்லைகளை␢ வரையறுத்தபோது,⁾ 27⁽தம் படைப்புகளை என்றென்றைக்கும்␢ ஒழுங்கோடு அமைத்தார்;␢ அவற்றின் செயற்களங்களை␢ எல்லாத் தலைமுறைகளுக்கும்␢ வகுத்தார். அவற்றுக்குப்␢ பசியுமில்லை, சோர்வுமில்லை;␢ தங்கள் பணியிலிருந்து␢ அவை தவறுவதுமில்லை.⁾ 28⁽அவற்றுள் ஒன்று மற்றொன்றை␢ நெருங்குவதில்லை;␢ அவரது சொல்லுக்கு அவை␢ என்றுமே கீழ்ப்படியாமலில்லை.⁾ 29⁽அதன்பின் ஆண்டவர்␢ மண்ணுலகை நோக்கினார்;␢ அதைத் தம் நலன்களால் நிரப்பினார்.⁾ 30⁽நிலப்பரப்பை எல்லாவகை␢ உயிரினங்களாலும் நிறைத்தார்.␢ அவை மண்ணுக்கே திரும்ப வேண்டும்.⁾