1⁽செல்வத்தின் மீதுள்ள விழிப்பு␢ உடலை நலியச் செய்கிறது;␢ அதைப்பற்றிய கவலை␢ உறக்கத்தைத் துரத்தியடிக்கின்றது.⁾
2⁽கவலை நிறைந்த விழிப்பு␢ ஆழ்துயிலைக் கெடுக்கிறது;␢ கொடிய நோய் உறக்கத்தைக்␢ கலைக்கிறது.⁾
3⁽செல்வம் திரட்டச் செல்வர்␢ கடுமையாய் உழைக்கின்றனர்;␢ தம் ஓய்வின்போது இன்பத்தில்␢ திளைக்கின்றனர்.⁾
4⁽ஏழைகள் கடுமையாய்␢ உழைத்தும் வறுமையில்␢ வாழ்கிறார்கள்; ஓய்வின்போது␢ தேவையில் உழல்கிறார்கள்.⁾
5⁽பொன்னை விரும்புவோர்␢ நீதியைக் கடைப்பிடியார்␢ மேன்மையை நாடுவோர்␢ அதனாலேயே நெறிபிறழ்வர்.*⁾
6⁽பொன்னை முன்னிட்டுப் பலர்␢ அழிவுக்கு ஆளாயினர்;␢ அவர்கள் அழிவை நேரில்␢ எதிர்க்கொண்டனர்.⁾
7⁽அதன்மீது பேராவல் கொள்வோருக்கு␢ அது ஒரு தடைக்கல்;␢ அறிவிலிகள் அனைவரும்␢ அதனால் பிடிபடுவர்.⁾
8⁽குற்றமில்லாது காணப்படும்␢ செல்வர் பேறுபெற்றோர்;␢ அவர்கள் பொன்னை␢ நாடிப் போவதில்லை.⁾
9⁽இத்தகையோர் யார்? அவர்களைப்␢ பேறுபெற்றோர் எனலாம்;␢ ஏனெனில் அவர்கள்␢ தங்கள் மக்களிடையே வியக்கத்␢ தக்கன செய்திருக்கிறார்கள்.⁾
10⁽பொன்னால் சோதிக்கப்பட்டு␢ நிறைவுள்ளவராய்க்␢ காணப்பட்டோர் யார்? அவர்கள்␢ அதிலே பெருமை கொள்ளட்டும்.␢ தவறு செய்யக்கூடிய சூழ்நிலை␢ இருந்திருந்தும் தவறு செய்யாமல்␢ விட்டவர் யார்? தீமை புரியக்கூடிய␢ சூழ்நிலை இருந்திருந்தும்␢ தீமை புரியாமல் விட்டவர் யார்?⁾
11⁽இத்தகையோருடைய சொத்து␢ நிலையாய் இருக்கும்; இஸ்ரயேலர்␢ கூட்டம் அவர்களுடைய␢ தருமங்களை எடுத்துரைக்கும்.⁾
12⁽அறுசுவை விருந்து␢ உன்னை அமர்ந்திருக்கிறாயா?␢ அதன்மீது பேராசை கொள்ளாதே.␢ ‘நிறைய பண்டங்கள் உள்ளன’␢ என வியக்காதே.⁾
13⁽பேராசை படைத்த கண்␢ தீயது என நினைத்துக்கொள்.␢ படைக்கப்பட்டவற்றுள் கண்ணைவிடக்␢ கெட்டது எது? அதனால்தான்␢ எல்லாக் கண்களினின்றும் நீர் வடிகிறது.⁾
14⁽காண்பவைமீதெல்லாம்␢ கையை நீட்டாதே; பொது␢ ஏனத்திலிருந்து உணவை␢ எடுக்கும்போது அடுத்தவரை␢ நெருக்காதே.⁾
15⁽உனக்கு அடுத்திருப்பவரின்␢ தேவைகளை உன்னுடையவற்றைக்␢ கொண்டே அறிந்துகொள்;␢ எல்லாவற்றிலும் அடுத்திருப்பவர்களைப்␢ பற்றிக் கருத்தாய் இரு.⁾
16⁽உனக்குமுன் வைக்கப்பட்டவற்றைப்␢ பண்புள்ள மனிதர்போன்று சாப்பிடு;␢ பேராசையோடு விழுங்காதே;␢ இல்லையேல் நீ வெறுக்கப்படுவாய்.⁾
17⁽நற்பயிற்சியை முன்னிட்டு␢ உண்டு முடிப்பதில்␢ முதல்வனாய் இரு;␢ அளவு மீறி உண்ணாதே;␢ இல்லையேல் அடுத்தவரைப்␢ புண்படுத்துவாய்.⁾
18⁽பலர் நடுவே நீ பந்தியில்␢ அமர்ந்திருக்கும்போது␢ மற்றவருக்குமுன் நீ␢ உண்ணத்தொடங்காதே.⁾
19⁽நற்பயிற்சி பெற்றோருக்கு␢ சிறிது உணவே போதுமானது;␢ படுத்திருக்கும்போது அவர்கள்␢ அரும்பாடுபட்டு␢ மூச்சுவிடமாட்டார்கள்.⁾
20⁽அளவோடு உண்பதால்␢ ஆழ்ந்த உறக்கம் வருகிறது;␢ அவர்கள் வைகறையில்␢ துயில் எழுகிறார்கள்;␢ உயிரோட்டம் உள்ளவர்களாய்␢ இருக்கிறார்கள்.␢ தூக்கமின்மை, குமட்டல்,␢ கடும் வயிற்றுவலி ஆகியவை␢ அளவின்றி உண்பவருக்கு␢ உண்டாகும்.⁾
21⁽மிகுதியாக உண்ணுமாறு␢ நீ கட்டாயப்படுத்தப்பட்டால்,␢ இடையில் எழுந்துபோய்␢ வாந்தியெடு;* அது உனக்கு␢ நலம் பயக்கும்.⁾
22⁽குழந்தாய்,␢ நான் சொல்வதைக் கேள்;␢ என்னைப் புறக்கணியாதே.␢ கடைசியில் நான் சொல்வதன்␢ பொருளைக் கண்டுணர்வாய்.␢ உன் செயல்கள் எல்லாவற்றிலும்␢ சுறுசுறுப்பாய் இரு; அப்பொழுது␢ எந்த நோயும் உன்னை அணுகாது.⁾
23⁽தாராளமாக விருந்தோம்புவோரை␢ மனிதர் புகழ்வர்; அவர்களுடைய␢ ஈகைக்கு மானிடர் பகரும்␢ சான்று நம்பத்தக்கது.⁾
24⁽கஞ்சத்தனமாக உணவு␢ படைப்போரைப்பற்றி நகரே␢ குறைகூறும்; அவர்களுடைய␢ கஞ்சத்தனத்திற்கு மனிதர்␢ பகரும் சான்று முறையானது.⁾
25⁽திராட்சை இரசம்␢ அருந்துவதால் உன் ஆற்றலைக்␢ காட்டமுயலாதே;␢ திராட்சை இரசம் பலரை␢ அழித்திருக்கிறது.⁾
26⁽இரும்பின் உறுதியைச்␢ சூளை பரிசோதிக்கின்றது;␢ செருக்குற்றோரின் பூசல்களில்␢ அவர்களின் உள்ளத்தைத்␢ திராட்சை இரசம் பரிசோதிக்கின்றது.⁾
27⁽திராட்சை இரசத்தை␢ அளவோடு குடிக்கின்றபோது␢ அது மனிதருக்கு வாழ்வை␢ அளிக்கின்றது. திராட்சை இரசம்␢ இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை!␢ மானிடரின் மகிழ்வுக்காக␢ அது படைக்கப்பட்டது.⁾
28⁽உரிய நேரத்தில் அளவோடு␢ அருந்தப்படும் திராட்சை␢ இரசம் உள்ளத்திற்கு இன்பத்தையும்␢ மனத்திற்கு மகிழ்வையும் அளிக்கிறது.⁾
29⁽அளவுக்குமீறி அருந்தப்படும்␢ திராட்சை இரசம் சினத்தையும்␢ பூசலையும் தூண்டிவிடுகிறது;␢ மனக் கசப்பையும் விளைவிக்கிறது.⁾
30⁽அறிவிலிகள் தங்களுக்கே␢ கேடுவிளைக்கும்படி␢ குடிவெறி அவர்களின்␢ சீற்றத்தைத் தூண்டிவிடுகிறது;␢ அவர்களின் வலிமையைக்␢ குறைக்கிறது; அவர்கள்␢ காயம்பட நேரிடுகிறது.⁾
31⁽திராட்சை இரசம் பரிமாறப்படும்␢ விருந்தில் உனக்கு␢ அடுத்திருப்பவரைக் கடிந்துக்கொள்ளாதே;␢ அவர்கள் மகிழ்ந்திருக்கும்போது␢ அவர்களை இகழாதே;␢ அவர்களைப் பழித்துப் பேசாதே;␢ கடனைத் திருப்பிக்கேட்டு␢ அவர்களைத் தொல்லைப்படுத்தாதே.⁾