1⁽நீ நன்மை செய்தால் யாருக்குச்␢ செய்கிறாய் என்பதைத்␢ தெரிந்து செய்;␢ உன் நற்செயல்களுக்கு␢ நன்றி பெறுவாய்.⁾
2⁽இறைப்பற்றுள்ளோருக்கு␢ நன்மை செய்;␢ உனக்குக் கைம்மாறு கிடைக்கும்.␢ அவர்களால் இயலாவிடினும்␢ உன்னத இறைவன் கைம்மாறு␢ செய்வார்.⁾
3⁽தீமையில் விடாப்பிடியாய்␢ இருப்போருக்கு நன்மை பிறவாது;␢ தருமம் செய்யாதோருக்கும்␢ அவ்வாறே நிகழும்.⁾
4⁽இறைப்பற்றுள்ளோருக்குக் கொடு;␢ பாவிகளுக்கு உதவாதே.⁾
5⁽நலிவுற்றோருக்கு நன்மை செய்;␢ இறைப்பற்றில்லாதோருக்குக்␢ கொடாதே.␢ அவர்களுக்குரிய உணவைக்கூட␢ நிறுத்திவை;␢ அவர்களுக்கு அதை அளிக்காதே;␢ அதைக்கொண்டே அவர்கள் உன்னை␢ வீழ்த்த நேரிடும்.␢ நீ அவர்களுக்குச் செய்த␢ நன்மைகளுக்கெல்லாம்␢ கைம்மாறாக␢ அவற்றைப்போல் இரு␢ மடங்கு தீமை அடைவாய்.⁾
6⁽உன்னத இறைவனும் பாவிகளை␢ வெறுக்கிறார்;␢ இறைப்பற்றில்லாதோரை ஒறுக்கிறார்.⁾
7⁽நல்லாருக்குக் கொடு;␢ பாவிகளுக்கு உதவாதே.⁾
8⁽இன்பத்தில் உண்மையான நண்பனை␢ அறிந்துகொள்ள முடியாது;␢ துன்பத்தில் உன் பகைவனைக்␢ கண்டு கொள்ள முடியும்.⁾
9⁽ஒருவரது உயர்வு அவருடைய␢ பகைவருக்கு வருத்தம் தரும்;␢ அவரது தாழ்வு நண்பரையும்␢ விலகச் செய்யும்.⁾
10⁽ஒருகாலும் உன் பகைவரை நம்பாதே;␢ அவர்களின் தீய குணம்␢ செம்பில் பிடித்த களிம்பு போன்றது.⁾
11⁽அவர்கள் தங்களையே␢ தாழ்த்திக் கொண்டாலும்,␢ இச்சகம் பேசினாலும்,␢ அவர்களைக் குறித்து விழிப்பாய்␢ இருந்து உன்னையே காத்துக்கொள்.␢ கண்ணாடியைத் துடைப்போர்␢ போன்று அவர்களிடம் நடந்து கொள்.␢ அது முழுதும் கறைபடவில்லை␢ என்பதை நீ அறிந்துகொள்வாய்.⁾
12⁽உன் எதிரிகளை உன் அருகில்␢ நிற்கவிடாதே; அவர்கள்␢ உன்னை வீழ்த்தி, உன் இடத்தைக்␢ கைப்பற்றிக்கொள்ளலாம்.␢ உன் வலப்புறத்திலும்␢ அவர்களை அமர்த்தாதே;␢ உன் இருக்கையைப் பறிக்கத்␢ தேடலாம்.␢ நான் சொன்னதெல்லாம் உண்மை␢ என இறுதியில் உணர்வாய்;␢ என் சொற்கள் உன்னை␢ உறுத்திக் கொண்டே இருக்கும்.⁾
13⁽பாம்பாட்டியைப்␢ பாம்பு கடித்துவிட்டால்␢ யாரே அவருக்கு இரங்குவர்?␢ காட்டு விலங்குகளின் அருகில்␢ செல்வோர்மீதும்␢ யாரே பரிவு காட்டுவர்?⁾
14⁽அவ்வாறே, பாவிகளோடு␢ சேர்ந்து பழகி,␢ அவர்களுடைய பாவங்களிலும்␢ ஈடுபாடு காட்டுவோர்மீது␢ யாரே இரக்கம் காட்டுவர்?⁾
15⁽சிறிது நேரம் அவர்கள் உன்னுடன்␢ உறவாடுவார்கள்;␢ நீ தடுமாற நேர்ந்தால்␢ உன்னைத் தாங்கிக்கொள்ள␢ மாட்டார்கள்.⁾
16⁽பகைவர் உதட்டில் தேன்␢ ஒழுகப்பேசுவர்;␢ உள்ளத்திலோ உனக்குக்␢ குழி பறிக்கத் திட்டமிடுவர்;␢ உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்;␢ வாய்ப்புக் கிடைக்கும் போது␢ அவர்களது கொலை வெறி அடங்காது.⁾
17⁽உனக்குத் துன்பம் நேர்ந்தால்␢ அங்கே உனக்குமுன்␢ அவர்களைக் காண்பாய்;␢ உனக்கு உதவி செய்வதுபோல்␢ உன் காலை இடறிவிடுவர்.⁾
18⁽அவர்கள் தங்களது முகப்பொலிவை␢ மாற்றிக்கொண்டு எள்ளி␢ நகையாடும்படி தலையாட்டுவர்;␢ கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்.⁾