1⁽குழந்தைகளே,␢ உங்கள் தந்தையாகிய எனக்குச்␢ செவிசாயுங்கள்; நான்␢ கூறுவதன்படி செயல்படுங்கள்;␢ அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்.⁾
2⁽பிள்ளைகளைவிடத் தந்தையரை␢ ஆண்டவர் மிகுதியாக␢ மேன்மைப்படுத்தியுள்ளார்;␢ பிள்ளைகள்மீது அன்னையருக்குள்ள␢ உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளார்.⁾
3⁽தந்தையரை மதிப்போர்␢ பாவங்களுக்குக் கழுவாய்␢ தேடிக்கொள்கின்றனர்.⁾
4⁽அன்னையரை␢ மேன்மைப்படுத்துவோர்␢ செல்வம் திரட்டி வைப்போருக்கு␢ ஒப்பாவர்.⁾
5⁽தந்தையரை மதிப்போருக்குத்␢ தங்கள் பிள்ளைகளால்␢ மகிழ்ச்சி கிட்டும்;␢ அவர்களுடைய மன்றாட்டு␢ கேட்கப்படும்.⁾
6⁽தந்தையரை மேன்மைப்படுத்துவோர்␢ நீடுவாழ்வர்;␢ ஆண்டவருக்குப் பணிந்து␢ நடப்போர் தங்கள் அன்னையர்க்கு␢ மதிப்பு அளிப்பர்.⁾
7⁽தலைவர்கள் கீழ்ப்பணியாளர்கள்␢ போல் அவர்கள் தங்கள்␢ பெற்றோருக்குப் பணி செய்வார்கள்.⁾
8⁽சொல்லாலும் செயலாலும்␢ உங்கள் பெற்றோரை␢ மதியுங்கள்;␢ அப்பொழுது உங்களுக்கு␢ ஆண்டவரின் ஆசி கிடைக்கும்.⁾
9⁽தந்தையின் ஆசி பிள்ளைகளின்␢ குடும்பங்களை நிலைநாட்டும்;␢ தாயின் சாபம் அவற்றை வேரோடு␢ பெயர்த்தெறிந்துவிடும்.⁾
10⁽உங்கள் தந்தையரை␢ அவமதிப்பதில் பெருமை␢ கொள்ளாதீர்கள்;␢ உங்கள் தந்தையரின்␢ சிறுமை உங்களுக்குப் பெருமையாகாது.⁾
11⁽தந்தை மதிக்கப்பெற்றால்␢ அது பிள்ளைகளுக்குப் பெருமை;␢ தாய்க்கு இழிவு ஏற்பட்டால்␢ அது பிள்ளைகளுக்குச் சிறுமை.⁾
12⁽குழந்தாய், உன் தந்தையின்␢ முதுமையில் அவருக்கு உதவு;␢ அவரது வாழ்நாளெல்லாம்␢ அவர் உள்ளத்தைப் புண்படுத்தாதே.⁾
13⁽அவரது அறிவாற்றல் குறைந்தாலும்␢ பொறுமையைக் கடைப்பிடி;␢ நீ இளமை மிடுக்கில் இருப்பதால்␢ அவரை இகழாதே.⁾
14⁽தந்தைக்குக்காட்டும் பரிவு␢ மறக்கப்படாது. அது உன்␢ பாவங்களுக்குக் கழுவாயாக␢ விளங்கும்.⁾
15⁽உன் துன்ப நாளில் கடவுள்␢ உன்னை நினைவுகூர்வார்;␢ பகலவனைக் கண்ட பனிபோல்␢ உன் பாவங்கள் மறைந்தொழியும்.⁾
16⁽தந்தையரைக் கைவிடுவோர்␢ கடவுளைப் பழிப்பவர் போல்வர்;␢ அன்னையர்க்குச் “சினமூட்டுவோர்␢ ஆண்டவரால் சபிக்கப்படுவர்.⁾
17⁽குழந்தாய், நீ செய்வது அனைத்தையும்␢ பணிவோடு செய்;␢ அவ்வாறாயின், கடவுளுக்கு␢ உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர்.⁾
18⁽நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப்␢ பணிந்து நட. அப்போது␢ ஆண்டவர் முன்னிலையில்␢ உனக்குப் பரிவு கிட்டும்.⁾
19⁽*[உயர்ந்தோர், புகழ்பெற்றோர்␢ பலர் உள்ளனர்.␢ ஆயினும் எளியோருக்குத்தான்␢ ஆண்டவர் தம் மறைபொருளை␢ வெளிப்படுத்துகிறார்.]⁾
20⁽ஆண்டவரின் ஆற்றல் பெரிது;␢ ஆயினும், தாழ்ந்தோரால்␢ அவர் மாட்சி பெறுகின்றார்.⁾
21⁽உனக்கு மிகவும் கடினமாக␢ இருப்பவற்றைத் தேடாதே;␢ உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை␢ ஆராயாதே.⁾
22⁽உனக்குக் கட்டளையிடப்பட்டவை␢ பற்றி எண்ணிப்பார்;␢ ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி␢ நீ ஆராய வேண்டியதில்லை.⁾
23⁽உனக்கு அப்பாற்பட்ட␢ செயல்களில் தலையிடாதே;␢ ஏனெனில் உனக்குக்␢ காட்டப்பட்டவையே␢ மனித அறிவுக்கு எட்டாதவை.⁾
24⁽மாந்தரின் இறுமாப்பு␢ பலரை நெறிபிறழச்␢ செய்திருக்கிறது;␢ தவறான கணிப்புகள்␢ தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன.⁾
25⁽*[கண் இல்லையேல்␢ பார்க்க முடியாது.␢ அறிவு இல்லையேல்␢ அது இருப்பதாகக்␢ காட்டிக் கொள்ளாதே.]⁾
26⁽பிடிவாதம் கொண்டோர்␢ இறுதியில் தீமைக்கு உள்ளாவர்;␢ கேட்டினை விரும்புவோர்␢ அதனால் அழிவர்.⁾
27⁽அடங்கா மனத்தோர்␢ தொல்லைகளால்␢ அழுத்தப்படுவர்;␢ பாவிகள் பாவத்தைப்␢ பெருக்குவர்.⁾
28⁽இறுமாப்புக்கொண்டோரின்␢ நோய்க்கு மருந்து இல்லை;␢ ஏனெனில் தீமை அவர்களுள்␢ வேரூன்றி விட்டது.⁾
29⁽நுண்ணறிவாளர் உவமைகளைப்␢ புரிந்துகொள்வர்;␢ ஞானிகள் கேட்டறியும்␢ ஆவல் மிக்கவர்கள்.⁾
30⁽எரியும் நெருப்பைத்␢ தண்ணீர் அவிக்கும்;␢ தருமம் செய்தல் பாவங்களைக்␢ கழுவிப் போக்கும்.⁾
31⁽நன்மை செய்தோர்க்கே␢ நன்மை செய்வோர்␢ தங்களது எதிர்காலத்தை␢ எண்ணிச் செயல்படுகின்றனர்;␢ தங்களது வீழ்ச்சிகாலத்தில் அவர்கள் உதவி பெறுவர்.⁾