சீராக் 21

முந்திய அடுத்த
1⁽தவறான நேரத்தில்␢ கண்டிப்போரும் உண்டு;␢ அமைதி காத்து ஞானி␢ ஆனோரும் உண்டு.⁾ 2⁽உள்ளே புகைந்து␢ கொண்டிருப்பதைவிடக்␢ கண்டிப்பது மேல்.⁾ 3⁽தங்கள் குற்றங்களை␢ ஏற்றுக்கொள்வோர்␢ தோல்வியிலிருந்து␢ விடுவிக்கப்பெறுவர்.⁾ 4⁽கட்டாயத்தின்பேரில் ஒருவர்␢ நீதியானதைச் செய்வது␢ ஓர் அண்ணகன் ஒரு சிறுமியை␢ கற்பழிக்க விரும்புவதற்கு␢ இணையாகும்.⁾ 5⁽அமைதி காப்போர் ஞானியராக␢ எண்ணப்படுகின்றனர்;␢ வாயாடிகள் வெறுப்புக்கு␢ ஆளாகின்றனர்.⁾ 6⁽எதைப்பேசுவது எனத் தெரியாமல்␢ அமைதியாய் இருப்போரும் உண்டு;␢ எப்போது பேசுவது எனத் தெரிந்தவராய்␢ அமைதி காப்போரும் உண்டு.⁾ 7⁽ஞானியர் தக்க நேரம்␢ வரும் வரை அமைதி காப்பர்;␢ வீண் பெருமை பேசும் மூடர்␢ சரியான நேரத்தைத் தவறவிடுவர்.⁾ 8⁽மட்டு மீறிப் பேசுவோர்␢ அருவருப்புக்கு ஆளாவார்;␢ அதிகாரத்தைத் தவறாகப்␢ பயன்படுத்துவோர் வெறுக்கப்படுவர்.⁾ 9⁽தீமை நன்மையாக␢ மாறுவதும் உண்டு;␢ நல்வாய்ப்பு இழப்புக்கு␢ இட்டுச் செல்வதும் உண்டு.⁾ 10⁽உனக்குப் பயன் அளிக்காத␢ கொடையும் உண்டு;␢ இரட்டிப்பாகத் திருப்பிக்␢ கொடுக்க வேண்டிய␢ கொடைகளும் உண்டு.⁾ 11⁽பெருமை நாடி வீழ்ச்சி␢ அடைந்தோர் உண்டு;␢ தாழ்நிலையிலிருந்து உயர்நிலை␢ அடைந்தோரும் உண்டு.⁾ 12⁽நிறைந்த பொருளைக்␢ குறைந்த விலைக்கு வாங்கக்␢ கருதி ஏழு மடங்கு மிகுதியாகக்␢ கொடுத்து வாங்குவோரும் உண்டு.⁾ 13⁽ஞானிகள் தங்கள் சொற்களால்␢ தங்களை அன்புக்குரியோர் ஆக்கிக்␢ கொள்ளுகின்றார்கள்; மூடரின்␢ இச்சகம் வீணாகின்றது.⁾ 14⁽அறிவிலிகளின் கொடை␢ உனக்கு ஒன்றுக்கும் உதவாது;␢ அது அவர்களுக்கே பன்மடங்கு␢ பெரிதாய்த் தெரிகிறது.⁾ 15⁽அவர்கள் குறைவாகக் கொடுப்பார்கள்;␢ நிறைய திட்டுவார்கள்.␢ முரசறைவோர் போன்று␢ அதுபற்றிப் பேசுவார்கள்.␢ இன்று கடன் கொடுப்பர்;␢ நாளையே அதைத்␢ திருப்பிக்கேட்பர்.␢ இத்தகையோர் வெறுப்புக்கு␢ உரியோர்.⁾ 16⁽‘எனக்கு நண்பர்கள் இல்லை;␢ நான் செய்த நற்செயல்களுக்கு␢ எவரும் நன்றி காட்டுவதில்லை’␢ என அறிவிலிகள் சொல்லிக்␢ கொள்வார்கள்.⁾ 17⁽அவர்கள் அளிக்கும் உணவை␢ அருந்தியவாறே அவர்களைப்பற்றி␢ இழிவாய்ப் பேசுவார்கள்;␢ பல நேரங்களில் அவர்களை␢ எள்ளி நகையாடுவார்கள்.⁾ 18⁽நாவினில் தடுமாறுவதைவிட␢ நடைபாதையில் தடுமாறி␢ விழுவதுமேல்; தீயவர்களின்␢ வீழ்ச்சி திடீரென்று ஏற்படும்.⁾ 19⁽பண்பற்றோர் பொருத்தமற்ற␢ கதையைப் போன்றோர்;␢ அறிவற்றோரின் வாயில் அது␢ தொடர்ந்து இருக்கும்.⁾ 20⁽மூடர்களின் வாயினின்று␢ வரும் பழமொழிகள்␢ ஏற்றுக்கொள்ளப்படா;␢ காலம் அறிந்து அவர்கள்␢ அவற்றைச் சொல்வதில்லை.⁾ 21⁽வறுமையினால்␢ பாவம் செய்வதினின்று␢ தடுக்கப்படுவோர் உண்டு;␢ அவர்கள் மனவுறுத்தலின்றி␢ ஓய்வு கொள்வார்கள்.⁾ 22⁽தன்மானம் இழக்கும் நேரத்தில்␢ உயிர் நீப்போர் உளர்;␢ மூடர்பொருட்டு அழிவோரும்␢ உண்டு.⁾ 23⁽வெட்கம் தாங்காமல் சிலர்␢ தங்கள் நண்பர்களுக்கு␢ உறுதிமொழி வழங்குகின்றனர்;␢ காரணமின்றி அவர்களைப்␢ பகைவர் ஆக்கிக்கொள்கின்றனர்.⁾ 24⁽பொய் பேசுதல் மனிதருக்கு␢ அருவருக்கத்தக்க␢ கறை ஆகும்;␢ அறிவற்றோரின் வாயிலிருந்து␢ அது ஓயாது வெளிப்படும்.⁾ 25⁽பொய் சொல்லும் பழக்கம்␢ கொண்டவரை விடத் திருடன்␢ மேலானவன்; இருவருமே␢ அழிவை உரிமையாக்கிக்கொள்வர்.⁾ 26⁽பொய்யரின் நடத்தை இகழ்ச்சிக்கு␢ இட்டுச்செல்லும்;␢ அவர்களின் வெட்கக்கேடும்␢ அவர்களோடு எப்போதும் இருக்கும்.⁾ 27⁽ஞானியர் தங்கள் சொற்களால்␢ முன்னேற்றம் அடைவர்;␢ முன்மதி கொண்டோர்␢ பெரியார்களை மகிழ்விக்கின்றனர்.⁾ 28⁽நிலத்தில் பாடுபடுவோர்␢ நிறைந்த விளைச்சல் பெறுவர்;␢ பெரியார்களுக்கு வேண்டியோர்␢ அநீதி புரிந்திருந்தாலும் தப்பிவிடுவர்.⁾ 29⁽சலுகைகளும் அன்பளிப்புகளும்␢ ஞானிகளின் கண்களைக்␢ குருடாக்கும்;␢ கடிவாளமிட்ட வாய்போல்␢ அவை கண்டனங்களைத்␢ தவிர்த்துவிடும்.⁾ 30⁽மறைந்து கிடக்கும் ஞானம்,␢ கண்ணுக்குத் தெரியாத␢ புதையல் ஆகியவற்றால்␢ கிடைக்கும் பயன் என்ன?⁾ 31⁽தங்கள் ஞானத்தை மறைத்து␢ வைக்கும் மனிதரைவிடத்␢ தங்களது மடமையை மூடி␢ மறைக்கும் மானிடர் மேலானோர்.⁾