1⁽அறிவுடைய நடுவர் தம் மக்களுக்கு␢ நற்பயிற்சி அளிப்பார்;␢ அறிவுக்கூர்மை கொண்டோரின்␢ ஆட்சி சீராய் அமையும்.⁾
2⁽மக்களின் நடுவர் எவ்வாறோ␢ அவருடைய பணியாளர்கள்␢ அவ்வாறே;␢ நகரத் தலைவர் எவ்வழியோ,␢ அவ்வழி நகர மக்கள்.⁾
3⁽நற்பயிற்சி பெறாத மன்னர்␢ தம் மக்களை அழிப்பார்;␢ ஆட்சியாளர்களின் அறிவுக்␢ கூர்மையால் நகர் கட்டியெழுப்பப்படும்.⁾
4⁽மண்ணுலகில் அதிகாரம்␢ ஆண்டவரின் கையில் உள்ளது;␢ ஏற்ற தலைவரைத் தக்க நேரத்தில்␢ அவரே எழுப்புகிறார்.⁾
5⁽மனிதரின் மேம்பாடு␢ ஆண்டவரின் கையில் உள்ளது;␢ மறைநூல் அறிஞர்களை␢ அவர் பெருமைப்படுத்துவார்.⁾
6⁽அநீதி ஒவ்வொன்றுக்காகவும்␢ அடுத்திருப்பவர்மீது␢ சினம் கொள்ளாதே;␢ இறுமாப்புள்ள செயல்கள்␢ எதையும் செய்யாதே.⁾
7⁽இறுமாப்பை ஆண்டவரும்␢ மனிதரும் வெறுப்பர்;␢ அநீதியை இருவரும் பழிப்பர்.⁾
8⁽அநீதி, இறுமாப்பு, செல்வம்␢ ஆகியவற்றால் ஆட்சி கைமாறும்.⁾
9⁽புழுதியும் சாம்பலுமாக மனிதர்␢ எவ்வாறு செருக்குற முடியும்?␢ உயிரோடு இருக்கும்போதே␢ அவர்களது உடல் அழியத்தொடங்கும்.⁾
10⁽நாள்பட்ட நோய் மருத்துவரைத்␢ திணறடிக்கிறது;␢ இன்று மன்னர், நாளையோ பிணம்!⁾
11⁽மனிதர் இறந்தபின் பூச்சிகள்,␢ காட்டு விலங்குகள்,␢ புழுக்களே அவர்களது␢ உரிமைச்சொத்து ஆகின்றன.⁾
12⁽ஆண்டவரிடமிருந்து விலகிச்␢ செல்வதே மனிதருடைய␢ இறுமாப்பின் தொடக்கம்;␢ அவர்களின் உள்ளம்␢ தங்களைப் படைத்தவரை␢ விட்டு அகன்று போகின்றது.⁾
13⁽பாவமே ஆணவத்தின் தொடக்கம்.␢ அதில் மூழ்கிப்போனவர்கள்␢ அருவருப்பை உண்டாக்குகின்றனர்;␢ இதனால், ஆண்டவர்␢ அவர்கள்மீது கேட்டறியாப்␢ பேரிடர்களை வருவிப்பார்;␢ அவர்களை முழுதும்␢ அழித்தொழிப்பார்.⁾
14⁽ஆளுநர்களின் அரியணையினின்று␢ ஆண்டவர் அவர்களை␢ வீழ்த்துகிறார்;␢ அவர்களுக்குப் பதிலாகப்␢ பணிவுள்ளோரை அமர்த்துகிறார்.⁾
15⁽நாடுகளின் ஆணிவேரை␢ ஆண்டவர் அகழ்ந்தெறிகிறார்;␢ அவர்களுக்குப் பதிலாகத்␢ தாழ்ந்தோரை நட்டுவைக்கிறார்.⁾
16⁽ஆண்டவர் பிற இனத்தாரைப்␢ பாழாக்குகிறார்;␢ அவர்களை அடியோடு அழிக்கிறார்.⁾
17⁽அவர்களுள் சிலரை␢ அகற்றி அழித்தொழிக்கிறார்;␢ அவர்களின் நினைவை␢ உலகினின்று துடைத்தழிக்கிறார்.⁾
18⁽செருக்கு மனிதருக்கென்று␢ படைக்கப்படவில்லை; கடுஞ் சீற்றமும்␢ மானிடப் பிறவிக்கு உரியதல்ல.⁾
19⁽மதிப்பிற்குரிய இனம் எது?␢ மனித இனம்.␢ மதிப்பிற்குரிய இனம் எது?␢ ஆண்டவருக்கு அஞ்சும் இனம்.␢ மதிக்கத் தகாத இனம் எது?␢ அதே மனித இனம்.␢ மதிக்கத் தகாத இனம் எது?␢ கட்டளைகளை மீறும் இனம்.⁾
20⁽உடன் பிறந்தாருள்␢ மூத்தவர் மதிப்பிற்குரியவர்;␢ ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ அவர் முன்னிலையில் மதிப்புப்பெறுவர்.⁾
21⁽*[ஆண்டவரிடம் கொள்ளும்␢ அச்சமே ஏற்பின் தொடக்கம்;␢ பிடிவாதமும் ஆணவமும்␢ புறக்கணிப்பின் தொடக்கம்;]⁾
22⁽செல்வர், மாண்புமிக்கோர், வறியவர்␢ ஆகிய எல்லாருக்கும்␢ உண்மையான பெருமை␢ ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே.⁾
23⁽அறிவுக்கூர்மை படைத்த␢ ஏழைகளை இழிவுபடுத்தல்␢ முறையன்று; பாவிகளைப்␢ பெருமைப்படுத்துவதும் சரியன்று.⁾
24⁽பெரியார்கள், நடுவர்கள்,␢ ஆட்சியாளர்கள் ஆகியோர்␢ பெருமை பெறுவர்;␢ ஆண்டவருக்கு அஞ்சுவோரை விட␢ இவர்களுள் யாருமே பெரியவர் அல்லர்.⁾
25⁽ஞானமுள்ள அடிமைக்கு␢ உரிமைக் குடிமக்கள்␢ பணிபுரிவார்கள்;␢ இது கண்டு அறிவாற்றல்␢ நிறைந்தவர்கள்␢ முறையிடமாட்டார்கள்.⁾
26⁽நீ உன் வேலையைச் செய்யும்போது,␢ உன் ஞானத்தைக்␢ காட்டிக் கொள்ளாதே;␢ வறுமையில் வாடும்போது␢ உன்னையே பெருமைப்படுத்திக்␢ கொள்ளாதே.⁾
27⁽தற்பெருமை பாராட்டி␢ உணவுக்கு வழி␢ இல்லாதோரைவிட␢ உழைத்து வளமையுடன்␢ வாழ்வோர் சிறந்தோர்.⁾
28⁽குழந்தாய், பணிவிலே நீ␢ பெருமைகொள்;␢ உன் தகுதிக்கு ஏற்ப␢ உன்னையே நீ மதி.⁾
29⁽தங்களுக்கு எதிராகவே␢ குற்றம் செய்வோரை␢ நீதிமான்களென யாரே கணிப்பர்?␢ தங்கள் வாழ்வையே␢ மதிக்கத் தெரியாதவர்களை␢ யாரே பெருமைப்படுத்துவர்?⁾
30⁽ஏழையருக்குத் தங்கள்␢ அறிவாற்றலால் சிறப்பு;␢ செல்வருக்குத் தங்கள்␢ செல்வத்தால் சிறப்பு.⁾
31⁽வறுமையிலேயே பெருமை␢ பெறுவோர்␢ செல்வச் செழிப்பில் எத்துணைப்␢ பெருமை அடைவர்!␢ செல்வச் செழிப்பிலேயே␢ சிறுமையுறுவோர்␢ வறுமையில் எத்துணைச் சிறுமையுறுவர்!⁾