1⁽தந்தையாகிய ஆண்டவரே,␢ என் வாழ்வின் தலைவரே,␢ என் வாய் கூறுவதையெல்லாம்␢ பொருட்படுத்தாதேயும்;␢ அவற்றின் பொருட்டு␢ நான் வீழ்ச்சியுறாதவாறு செய்யும்.⁾
2⁽என் தவறுகளுக்காக␢ என்னை விட்டுவைக்காமலும்␢ என் பாவங்களைக் கவனிக்கத்␢ தவறாமலும் இருக்குமாறு,␢ என் எண்ணங்களைக்␢ கட்டுப்படுத்தத் தண்டனை␢ கொடுப்பவர் யார்?␢ என் உள்ளத்திற்கு␢ ஞானத்தின் நற்பயிற்சியை␢ அளிப்பவர் யார்,⁾
3⁽இல்லையேல், என் தவறுகள்␢ பெருகிவிடும்;␢ என் பாவங்கள் மிகுந்துவிடும்.␢ என் எதிரிகள் முன்␢ நான் வீழ்ச்சியுறுவேன்;␢ என் பகைவர் என்னைக்␢ குறித்து மகிழ்வர்.⁾
4⁽தந்தையாகிய ஆண்டவரே,␢ என் வாழ்வின் கடவுளே,␢ இறுமாப்புள்ள பார்வைக்கு நான்␢ இடம் கொடாதிருக்கச் செய்யும்.⁾
5⁽தீய நாட்டங்களை␢ என்னிடமிருந்து அகற்றும்.⁾
6⁽பேருண்டி விருப்பமும்␢ சிற்றின்ப ஆசையும் என்னை␢ மேற்கொள்ள விடாதேயும்;␢ தகாத எண்ணங்களுக்கு␢ என்னை ஒப்புவிக்காதேயும்.⁾
7⁽குழந்தைகளே,␢ நாவடக்கம்பற்றிக் கேளுங்கள்;␢ நாவைக் காப்போர் எதிலும்␢ சிக்கிக்கொள்ளமாட்டார்கள்.⁾
8⁽பாவிகள் தங்கள் நாவினாலேயே␢ அகப்பட்டுக்கொள்வார்கள்;␢ வசை கூறுவோரும் செருக்குக்␢ கொண்டோரும் அதனால்␢ இடறிவிழுகின்றனர்.⁾
9⁽ஆணையிட உன் நாவைப்␢ பழக்கப்படுத்தாதே;␢ தூய கடவுளின் பெயரைச்␢ சொல்லிக்கொண்டே இராதே.⁾
10⁽விசாரணைக்கு உள்ளாகி␢ அடிக்கடி அடிபடும் அடிமையிடம்␢ அதன் வடுக்கள்␢ காணப்படாமல் போகா;␢ எப்போதும் ஆணையிடுவோரும்␢ கடவுளின் பெயரைப்␢ பயன்படுத்துவோரும்␢ பாவங்களினின்று கழுவப்பட␢ மாட்டார்கள்.⁾
11⁽அடிக்கடி ஆணையிடுபவர்கள்␢ தீநெறியில் ஊறியவர்கள்;␢ இறைத் தண்டனை அவர்களது␢ வீட்டை விட்டு அகலாது.␢ அவர்கள் தவறாக ஆணையிட்டால்␢ பாவம் அவர்கள் மீதே இருக்கும்;␢ தங்கள் ஆணையைப் புறக்கணித்தால்␢ அவர்களது பாவம் இரு மடங்காகும்.␢ வீணாக ஆணையிடுவோர்␢ பாவத்தினின்று விடுபடார்;␢ அவர்களது வீடு பேரிடரால்␢ நிரப்பப்படும்.⁾
12⁽சாவுக்கு ஒப்பிடக்கூடிய␢ தீய சொற்கள் உண்டு;␢ யாக்கோபின் உரிமைச்சொத்தில்␢ அவை காணாதிருக்கட்டும்.␢ இறைப்பற்றுள்ளோர் இவை␢ அனைத்திலிருந்து விலகி நிற்பர்;␢ அவர்கள் பாவச் சேற்றில்␢ புரளமாட்டார்கள்.⁾
13⁽பண்பற்ற பேச்சுக்கு␢ உன் நாவைப் பழக்காதே;␢ அது பாவத்துக்குரிய பேச்சு.⁾
14⁽பெரியோர்கள் நடுவே␢ நீ அமர்ந்திருக்கும்போது உன்␢ தந்தை தாயை நினைவில்கொள்.␢ இல்லையேல், அவர்கள்␢ முன்னிலையில்␢ உன்னையே மறப்பாய்;␢ உன் தீய பழக்கத்தால்␢ அறிவிலிபோன்று␢ நடந்து கொள்வாய்;␢ நீ பிறவாமல் இருந்திருந்தால்␢ நலமாய் இருந்திருக்கும்␢ என விரும்புவாய்;␢ உன் பிறந்த நாளையும் சபிப்பாய்.⁾
15⁽வசைமொழி பேசிப்␢ பழக்கப்பட்டோர் தங்கள்␢ வாழ்நாள் முழுவதும்␢ நற்பயிற்சி பெறப்போவதில்லை.⁾
16⁽இரண்டு வகை மாந்தர்␢ பாவங்களைப் பெருக்குகின்றனர்;␢ மூன்றாவது வகையினர்␢ சினத்தைத் தூண்டிவிடுகின்றனர்.⁾
17⁽கொழுந்துவிட்டு எரியும்␢ காமவெறி கொண்டோர்;␢ அவர்களது காமவெறி␢ எரிந்து அடங்கினாலன்றி அணையாது.␢ தம் உறவினர்களோடு முறையற்ற␢ உறவு கொள்வோர்;␢ அந்த ஆசை அடங்கும்வரை␢ தீநெறியை அவர்கள் விடமாட்டார்கள்.␢ தகாத உறவு கொள்வோருக்கு␢ எல்லா உணவும் இனியதே;␢ இறக்கும்வரை அவர்கள்␢ தளர்ந்து போக மாட்டார்கள்.⁾
18⁽பிறர்மனை நாடுவோர்:␢ ‘என்னைப் பார்ப்பவர் யார்?␢ இருள் என்னைச் சூழ்ந்துள்ளது.␢ சுவர்கள் என்னை␢ மறைத்துக் கொள்கின்றன.␢ யாரும் என்னைக் காண்பதில்லை.␢ நான் ஏன் கவலைப்படவேண்டும்?␢ உன்னத இறைவன் என்␢ பாவங்களை நினைத்துப்பாரார்’␢ எனத் தங்களுக்குள் சொல்லிக்கொள்வர்.⁾
19⁽மனிதரின் கண்கள்␢ கண்டுவிடுமோ என␢ அவர்கள் அஞ்சுகிறார்கள்.␢ ஆண்டவரின் கண்கள்␢ கதிரவனைவிடப் பத்தாயிரம்␢ மடங்கு ஒளி படைத்தவை;␢ அவை மாந்தரின் வழிகளையெல்லாம்␢ காண்கின்றன;␢ மறைந்திருப்பவற்றை அறிகின்றன␢ என்பதை அவர்கள் அறியார்கள்.⁾
20⁽அனைத்தும் படைக்கப்படுமுன்பே␢ ஆண்டவர் அவற்றை அறிந்திருந்தார்;␢ அவற்றைப் படைத்து முடித்த␢ பின்னும் அவற்றை அறிந்துள்ளார்.⁾
21⁽காமுகர் நகர வீதிகளில்␢ தண்டிக்கப்படுவர்;␢ எதிர்பாராத இடத்தில் பிடிபடுவர்.⁾
22⁽தன் கணவரை விட்டுவிலகி,␢ வேறு ஆடவன்மூலம்␢ அவருக்கு வழித்தோன்றலை␢ உருவாக்கும் மனைவிக்கும்␢ அவ்வாறே நேரும்.⁾
23⁽முதலாவதாக, அவள்␢ உன்னத இறைவனின்␢ திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதில்லை;␢ இரண்டாவதாக,␢ தன் கணவருக்கு எதிராகக்␢ குற்றம் புரிகிறாள்;␢ மூன்றாவதாக,␢ தன் கெட்ட நடத்தையால்␢ விபசாரம் செய்கிறாள்;␢ அடுத்தவர்மூலம்␢ பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.⁾
24⁽அவள் சபைமுன்␢ அழைத்து வரப்படுவாள்;␢ அவளுடைய பிள்ளைகளும்␢ விசாரணைக்கு ஆளாவர்.⁾
25⁽அவளின் பிள்ளைகள்␢ வேரூன்றமாட்டார்கள்;␢ அவளின் கிளைகளும்␢ கனிகள் கொடா.⁾
26⁽அவள் சாபத்துக்குரிய␢ நினைவை விட்டுச்செல்வாள்;␢ அவள் அடைந்த இழிவு␢ ஒரு நாளும் அழியாது.⁾
27⁽ஆண்டவருக்கு அஞ்சுவதைவிட␢ மேலானது எதுவுமில்லை என்றும்,␢ ஆண்டவரின் கட்டளைகளுக்குக்␢ கீழ்ப்படிவதைவிட இனிமையானது␢ எதுவுமில்லை என்றும்␢ அவளுக்குப்பின் வாழ்வோர்␢ உணர்ந்துகொள்வர்.⁾