சீராக் 46

முந்திய அடுத்த
1⁽யாக்கோபின் வழிமரபிலிருந்து␢ இறைப்பற்றுள்ள ஒரு மனிதரைக்␢ கடவுள் தோற்றுவித்தார்;␢ அம்மனிதர் எல்லா␢ உயிரினங்களின் பார்வையிலும்␢ தயவு பெற்றார்;␢ கடவுளுக்கும் மனிதருக்கும்␢ அன்புக்குரியவரானார்.␢ அவரது நினைவு போற்றுதற்குரியது.␢ அவரே மோசே!⁾ 2⁽கடவுள் தூய தூதர்களுக்கு␢ இணையான மாட்சியை அவருக்கு␢ வழங்கினார்; பகைவர்கள்␢ அஞ்சும்படி அவரை␢ மேன்மைப்படுத்தினார்;⁾ 3⁽அவருடைய சொற்களால் பிறர்␢ செய்த வியத்தகு செயல்களை␢ முடிவுக்குக் கொணர்ந்தார்;␢ மன்னர்களின் முன்னிலையில்␢ அவரை மாட்சிமைப்படுத்தினார்;␢ தம் மக்களுக்காக அவரிடம்␢ கட்டளைகளைக் கொடுத்தார்;␢ தம் மாட்சியை அவருக்குக் காட்டினார்.⁾ 4⁽அவருடைய பற்றுறுதியையும்␢ கனிவையும் முன்னிட்டு␢ அவரைத் திருநிலைப்படுத்தினார்;␢ மனிதர் அனைவரிடமிருந்தும்␢ அவரைத் தெரிந்தெடுத்தார்.⁾ 5⁽ஆண்டவர் தம் குரலை மோசே␢ கேட்கச் செய்தார்; கார்முகில்␢ நடுவே அவரை நடத்திச் சென்றார்;␢ நேரடியாக அவரிடம்␢ கட்டளைகளைக் கொடுத்தார்;␢ வாழ்வும் அறிவாற்றலும்␢ தரும் திருச்சட்டத்தை அளித்தார்;␢ இதனால் யாக்கோபுக்கு␢ உடன்படிக்கை பற்றியும்␢ இஸ்ரயேலுக்குக் கடவுளின்␢ தீர்ப்புகள் பற்றியும் மோசே␢ கற்றுக்கொடுக்கும்படி செய்தார்.⁾ 6⁽அடுத்து, ஆரோனைக்␢ கடவுள் உயர்த்தினார்; அவர்␢ மோசேயைப் போலவே தூயவர்;␢ அவருடைய சகோதரர்; லேவியின் குலத்தைச் சேர்ந்தவர்.⁾ 7⁽அவருடன் என்றுமுள␢ உடன்படிக்கை செய்தார்;␢ மக்களுக்குப் பணி செய்யக்␢ குருத்துவத்தை அவருக்கு␢ வழங்கினார்;␢ எழில்மிகு அணிகலன்களால்␢ அவரை அழ‌குபடுத்தினார்;␢ மாட்சியின் ஆடையை␢ அவருக்கு அணிவித்தார்.⁾ 8⁽மேன்மையின் நிறைவால்␢ அவரை உடுத்தினார்;␢ குறுங்கால், சட்டை, நீண்ட ஆடை,␢ ‘ஏபோது’ ஆகிய அதிகாரத்தின்␢ அடையாளங்களால் அவருக்கு␢ வலிமையூட்டினார்.⁾ 9⁽அவருடைய ஆடையின்␢ விளிம்பைச்சுற்றி அணிகலன்களும்␢ பொன்மணிகளும்␢ பொருத்தப்பட்டிருந்தன.␢ இதனால் அவர் நடந்து செல்கையில்␢ அவை ஒலி எழுப்பும்;␢ தம் மக்களின் பிள்ளைகளுக்கு␢ நினைவூட்டும்படி கோவிலில்␢ அவற்றின் ஒலி கேட்கும்.⁾ 10⁽பூத்தையல் வேலைப்பாடு உடைய,␢ பொன், நீலம், கருஞ் சிவப்பு␢ நிறங்கள் கொண்ட திருவுடையை␢ அவருக்குக் கொடுத்தார்.␢ உண்மையை அறிவிக்கக்கூடிய␢ மார்புப்பட்டை* அதில் இருந்தது.␢ கைவினைஞரின் வேலைப்␢ பாடாகிய சிவப்பு ஆடையால்␢ அவரைப் போர்த்தினார்.⁾ 11⁽அந்த ஆடையில் பொற்கொல்லரின்␢ வேலைப்பாடாகிய␢ பொன் தகட்டுப் பின்னணியில்␢ விலையுயர்ந்த கற்கள் முத்திரை␢ போலப் பதிக்கப்பட்டிருந்தன.␢ இஸ்ரயேலின் குலங்களினுடைய␢ எண்ணிக்கையின் நினைவாக␢ எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன.⁾ 12⁽தலைப்பாகை மீது␢ பொன்முடி இருந்தது;␢ தூய்மையின் முத்திரை␢ அதில் பொறிக்கப்பட்டிருந்தது;␢ அது பெருமைக்குரிய மதிப்புடையது;␢ சிறந்த வேலைப்பாடு கொண்டது;␢ கண்களுக்கு இனிமையானது,␢ பெரிதும் அணி செய்யப்பட்டது.⁾ 13⁽இவற்றைப்போன்று அழகானவை␢ அவருக்குமுன் இருந்ததில்லை;␢ இவற்றை அன்னியர் எவரும்␢ என்றும் அணிந்ததில்லை;␢ அவருடைய மைந்தரும்␢ . வழிமரபினரும் மட்டுமே␢ என்றும் அணிந்திருந்தார்கள்.⁾ 14⁽அவர் செலுத்திய பலிப்பொருள்கள்␢ ஒவ்வொரு நாளும்␢ இருமுறை தொடர்ந்து␢ முழுமையாய் எரிக்கப்பட்டன.⁾ 15⁽மோசே ஆரோனைத்␢ திருநிலைப்படுத்தினார்;␢ தூய எண்ணெயால் அவரைத்␢ திருப்பொழிவு செய்தார்;␢ அவரோடும் அவருடைய␢ வழிமரபினரோடும் வானம்␢ நீடித்திருக்கும்வரை நிலைத்திருக்கும்␢ உடன்படிக்கையாக அதை␢ ஏற்படுத்தினார்; ஆண்டவருக்குப்␢ பணி செய்யவும் குருவாய்␢ ஊழியம் புரியவும், அவரது பெயரால்␢ அவருடைய மக்களுக்கு ஆசி␢ வழங்கவும் இவ்வாறு செய்தார்.⁾ 16⁽ஆண்டவருக்குப் பலி␢ செலுத்தவும் தூபத்தையும்␢ நறுமணப்பலியையும் நினைவுப்␢ பலியாய் ஒப்புக்கொடுக்கவும்␢ அவருடைய மக்களுக்காகப்␢ பாவக்கழுவாய் செய்யவும்␢ வாழ்வோர் அனைவரிடமிருந்தும்␢ அவரைத் தெரிந்தெடுத்தார்.⁾ 17⁽யாக்கோபுக்குச் சட்டங்களைக்␢ கற்றுக் கொடுக்கவும்␢ இஸ்ரயேலுக்குத் திருச்சட்டம்␢ பற்றித் தெளிவுபடுத்தவும்␢ ஆண்டவருடைய கட்டளைகள் மீதும்␢ உடன்படிக்கையின் தீர்ப்புகள் மீதும்␢ அவருக்கு அதிகாரம் அளித்தார்.⁾ 18⁽அன்னியர்கள் அவருக்கு எதிராய்ச்␢ சூழ்ச்சி செய்தார்கள்;␢ பாலைநிலத்தில் அவர்மேல்␢ பொறாமைப்பட்டார்கள்;␢ தாத்தானும் அபிரோனும்␢ அவர்களோடு இருந்தவர்களும்␢ கோராகுவின் கூட்டாளிகளும்␢ தங்கள் சினத்திலும் சீற்றத்திலும்␢ இவ்வாறு செய்தார்கள்.⁾ 19⁽ஆண்டவர் அதைப் பார்த்தார்;␢ அதை அவர் விரும்பவில்லை.␢ அவருடைய கடுஞ்சீற்றத்தால்␢ அவர்கள் அழிந்தார்கள்.␢ எரியும் நெருப்பில் சுட்டெரிப்␢ பதற்காக அவர்களுக்கு␢ எதிராய் அரியன செய்தார்.⁾ 20⁽அவர் ஆரோனின் மாட்சியை␢ மிகுதிப்படுத்தினார்;␢ அவருக்கு உரிமைச்சொத்தை␢ அளித்தார்;␢ முதற்கனிகளில் முதலானவற்றை␢ அவருக்கென ஒதுக்கிவைத்தார்;␢ காணிக்கை அப்பங்களைக்␢ கொண்டு அவர்களுக்கு␢ நிறைவாய் உணவு அளித்தார்.⁾ 21⁽தமக்குக் கொடுக்கப்பட்ட␢ பலிப் பொருள்களையே␢ ஆரோனும் அவருடைய␢ வழிமரபினரும் உண்ணக்␢ கொடுத்தார்.⁾ 22⁽தம் மக்களது நாட்டில்␢ அவருக்கு உரிமைச்சொத்து␢ கொடுக்கப்படவில்லை; அம்மக்கள்␢ நடுவே அவருக்குப் பங்கு␢ அளிக்கப்படவில்லை; ஆண்டவரே␢ அவருடைய பங்கும் உரிமைச்␢ சொத்தும் ஆவார்.⁾ 23⁽எலயாசர் மகன் பினகாசு␢ மாட்சியின் மூன்றாம் நிலையில்␢ இருக்கிறார்; ஆண்டவருக்கு␢ அஞ்சி நடப்பதில்␢ பேரார்வமிக்கவராய் இருந்தார்;␢ ஆண்டவரைவிட்டு மக்கள்␢ விலகிச் சென்றபோது இவர்␢ நன்மனத்தோடு அவரை␢ உறுதியாய்ப் பற்றி நின்றார்;␢ இஸ்ரயேலுக்காகப் பாவக்␢ கழுவாய் செய்தார்.⁾ 24⁽ஆதலால் ஆண்டவர் அவருடன்␢ அமைதி உடன்படிக்கை␢ செய்துகொண்டார்;␢ திருவிடத்துக்கும் தம்␢ மக்களுக்கும்* தலைவராக்கினார்;␢ அவருக்கும் அவருடைய␢ வழிமரபினருக்கும் குருத்துவத்தின்␢ மேன்மை என்றும்␢ நிலைக்கும்படி செய்தார்.⁾ 25⁽மகனிலிருந்து மகனுக்கு␢ மட்டுமே அரசுரிமை செல்ல,␢ யூதாவின் குலத்தில் தோன்றிய␢ ஈசாயின் மகன் தாவீதோடு␢ ஆண்டவர்␢ உடன்படிக்கை செய்துகொண்டார்.␢ அதுபோல் ஆரோனின்␢ குருத்துவ உரிமை அவருடைய␢ வழிமரபினரையே சேரும்.⁾ 26⁽ஆண்டவர் தம் மக்களை␢ நீதியோடு தீர்ப்பிடுவதற்காக␢ ஞானத்தை உங்கள் உள்ளங்களில்␢ பொழிவாராக! இவ்வாறு␢ அவர்களுடைய நலன்கள்␢ அழியாதிருப்பனவாக;␢ அவர்களுடைய மாட்சி␢ எல்லாத் தலைமுறைகளுக்கும்␢ நீடிப்பதாக.⁾