சீராக் 3

முந்திய அடுத்த
1⁽குழந்தாய், ஆண்டவருக்குப்␢ பணிபுரிய நீ முன்வந்தால்,␢ சோதனைகளை எதிர்கொள்ள␢ முன்னேற்பாடு செய்துகொள்.⁾ 2⁽உள்ளத்தில்␢ உண்மையுள்ளவனாய் இரு;␢ உறுதியாக இரு;␢ துன்ப வேளையில்␢ பதற்றமுடன் செயலாற்றாதே.⁾ 3⁽ஆண்டவரைச் சிக்கெனப்␢ பிடித்துக்கொள்;␢ அவரை விட்டு விலகிச் செல்லாதே.␢ உன் வாழ்க்கையின் முடிவில்␢ வளமை அடைவாய்.⁾ 4⁽என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்;␢ இழிவுவரும்போது␢ பொறுமையாய் இரு.⁾ 5⁽நெருப்பில் பொன் புடமிடப்படுகிறது;␢ ஏற்புடைய மனிதர் மானக்கேடு␢ எனும் உலையில்␢ சோதித்துப் பார்க்கப்படுகின்றனர்.⁾ 6⁽ஆண்டவரிடம் பற்றுறுதி கொள்;␢ அவர் உனக்குத் துணை செய்வார்.␢ உன் வழிகளைச் சீர்படுத்து;␢ அவரிடம் நம்பிக்கை கொள்.⁾ 7⁽ஆண்டவருக்கு அஞ்சுவோரே.␢ அவரிடம் இரக்கத்துக்காகக்␢ காத்திருங்கள்;␢ நெறி பிறழாதீர்கள்;␢ பிறழ்ந்தால் வீழ்ச்சி அடைவீர்கள்.⁾ 8⁽ஆண்டவருக்கு அஞ்சுவோரே,␢ அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்;␢ உங்களுக்குக் கைம்மாறு␢ கிடைக்காமற் போகாது.⁾ 9⁽ஆண்டவருக்கு அஞ்சுவோரே,␢ நல்லவைமீது நம்பிக்கை␢ கொள்ளுங்கள்;␢ நிலையான மகிழ்ச்சியையும்␢ இரக்கத்தையும் எதிர்நோக்கியிருங்கள்.⁾ 10⁽முந்திய தலைமுறைகளை␢ எண்ணிப்பாருங்கள்.␢ ஆண்டவரிடம் பற்றுறுதி␢ கொண்டிருந்தோருள்␢ ஏமாற்றம் அடைந்தவர் யார்?␢ அவருக்கு அஞ்சி நடந்தோருள்␢ கைவிடப்பட்டவர் யார்?␢ அவரை மன்றாடினோருள்␢ புறக்கணிக்கப்பட்டவர் யார்?⁾ 11⁽ஆண்டவர் பரிவும் இரக்கமும் உள்ளவர்;␢ பாவங்களை மன்னிப்பவர்;␢ துன்ப வேளையில் காப்பாற்றுகிறவர்.⁾ 12⁽கோழை நெஞ்சத்தவருக்கும்␢ ஆற்றலற்ற கையருக்கும்␢ இரட்டை வேடமிடும்␢ பாவிகளுக்கும்␢ ஐயோ, கேடு வரும்!⁾ 13⁽உறுதியற்ற உள்ளத்தவருக்கும்␢ ஐயோ, கேடு வரும்!␢ ஏனெனில் அவர்கள்␢ பற்றுறுதி கொள்ளவில்லை;␢ எனவே அவர்களுக்குப்␢ பாதுகாப்பு இராது.⁾ 14⁽தளர்ச்சி அடைந்தோரே,␢ உங்களுக்கும் ஐயோ, கேடு வரும்!␢ ஆண்டவர் உங்களைச் சந்திக்க␢ வரும்போது என்ன செய்வீர்கள்?⁾ 15⁽ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ அவருடைய சொற்களைக்␢ கடைப்பிடிப்பர்;␢ அவர்மீது அன்புசெலுத்துவோர்␢ அவர்தம் வழிகளைப் பின்பற்றுவர்.⁾ 16⁽ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ அவர்தம் விருப்பத்தையே தேடுவர்;␢ அவரிடம் அன்பு பாராட்டுவோர்␢ அவர்தம் திருச்சட்டத்தில்␢ நிறைவு அடைவர்.⁾ 17⁽ஆண்டவருக்கு அஞ்சுவோர்␢ முன்னேற்பாடாய் இருப்பர்;␢ அவர் திருமுன் தங்களைத்␢ தாழ்த்திக் கொள்வர்.⁾ 18⁽‘ஆண்டவரின் கைகளில்␢ நாம் விழுவோம்;␢ மனிதரின் கைகளில்␢ விழமாட்டோம்; ஏனெனில்␢ அவரது பெருமையைப் போன்று␢ அவர்தம் இரக்கமும் சிறந்தது’␢ என அவர்கள் சொல்லிக் கொள்வார்கள்.⁾