சீராக் 45

முந்திய அடுத்த
1⁽மேன்மை பொருந்திய மனிதரையும்␢ நம் மூதாதையரையும் அவர்களது␢ தலைமுறை வரிசைப்படி புகழ்வோம்.⁾ 2⁽தொடக்கத்திலிருந்தே ஆண்டவர்␢ மிகுந்த மாட்சியையும்␢ மேன்மையையும் படைத்துள்ளார்.*⁾ 3⁽அவர்கள் தங்களுடைய நாடுகளில்␢ ஆட்சி செலுத்தினார்கள்;␢ தங்களது வலிமையால்␢ நற்பெயர் பெற்றார்கள்;␢ தங்களது அறிவுக்கூர்மையால்␢ அறிவுரை வழங்கினார்கள்;␢ இறைவாக்குகளை எடுத்துரைத்தார்கள்.⁾ 4⁽தங்கள் அறிவுரையாலும் சட்டம்␢ பற்றிய அறிவுக் கூர்மையாலும்␢ மக்களை வழிநடத்தினார்கள்;␢ நற்பயிற்சியின் சொற்களில்␢ ஞானிகளாய் இருந்தார்கள்.⁾ 5⁽இன்னிசை அமைத்தார்கள்;␢ பாக்கள் புனைந்தார்கள்.⁾ 6⁽மிகுந்த செல்வமும்␢ ஆற்றலும் கொண்டிருந்தார்கள்;␢ தங்கள் இல்லங்களில்␢ அமைதியுடன் வாழ்ந்தார்கள்.⁾ 7⁽அவர்கள் அனைவரும் தங்கள்␢ வழிமரபில் மாட்சி பெற்றார்கள்;␢ தங்கள் வாழ்நாளில்␢ பெருமை அடைந்தார்கள்.⁾ 8⁽அவர்களுள் சிலர் புகழ்␢ விளங்கும்படி தங்கள்␢ பெயரை விட்டுச்சென்றார்கள்.⁾ 9⁽நினைவுகூரப்படாத சிலரும் உண்டு;␢ வாழ்ந்திராதவர்கள்போன்று␢ அவர்கள் அழிந்தார்கள்;␢ பிறவாதவர்கள்போல் ஆனார்கள்.␢ அவர்களுக்குப்பின் அவர்கள்␢ பிள்ளைகளும் அவ்வாறே ஆனார்கள்,⁾ 10⁽ஆனால் அவர்களும்␢ இரக்கமுள்ள மனிதர்களே.␢ அவர்களுடைய நேர்மையான␢ செயல்கள் மறக்கப்படுவதில்லை.⁾ 11⁽தங்களது வழிமரபில்␢ அவர்கள் நிலைத்திருக்கிறார்கள்.␢ அவர்களுடைய உரிமைச்சொத்து␢ அவர்களின் வழித்தோன்றல்களுக்கும்␢ கிடைக்கும்.⁾ 12⁽அவர்களின் வழிமரபினர்␢ உடன்படிக்கையின்படி␢ நடக்கின்றனர்; அவர்கள் பொருட்டு␢ அவர்களின் பிள்ளைகளும்␢ அவ்வாறே நடப்பார்கள்.⁾ 13⁽அவர்களின் வழிமரபு␢ என்றும் நிலைத்தோங்கும்;␢ அவர்களின் மாட்சி அழிக்கப்படாது.⁾ 14⁽அவர்களுடைய உடல்கள்␢ அமைதியாய் அடக்கம்␢ செய்யப்பட்டன; அவர்களுடைய␢ பெயர் முறை தலைமுறை தலைமுறைக்கும்␢ வாழ்ந்தோங்கும்.⁾ 15⁽மக்கள் அவர்களுடைய␢ ஞானத்தை எடுத்துரைப்பார்கள்.␢ அவர்களது புகழைச் சபையார்␢ பறைசாற்றுவர்.⁾ 16⁽ஏனோக்கு ஆண்டவருக்கு␢ உகந்தவரானார்; அவரால்␢ எடுத்துக் கொள்ளப்பட்டார்;␢ எல்லாத் தலைமுறைகளுக்கும்␢ மனமாற்றத்தின் எடுத்துக்காட்டாக␢ விளங்குகிறார்.⁾ 17⁽நோவா நிறைவுள்ளவராகவும்␢ நீதிமானாகவும் திகழ்ந்தார்;␢ சினத்தின் காலத்தில்␢ பரிகாரம் செய்தார்;␢ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது,␢ அவர்பொருட்டுச் சிலர்␢ உலகில் விடப்பட்டார்கள்.⁾ 18⁽எவ்வுயிரும் வெள்ளப்பெருக்கால்␢ இனி அழியக்கூடாது என்பதற்கு␢ என்றுமுள உடன்படிக்கைகள்␢ அவருடன் செய்யப்பட்டன.⁾ 19⁽ஆபிரகாம் பல மக்களினங்களுக்குக்␢ குலமுதல்வராய்த் திகழ்ந்தார்;␢ மாட்சியில் அவருக்கு இணையானவர்␢ எவரையும் கண்டதில்லை.⁾ 20⁽உன்னத இறைவனின்␢ திருச்சட்டத்தை அவர்␢ கடைப்பிடித்தார்; அவரோடு␢ உடன்படிக்கை செய்துகொண்டார்;␢ அவ்வுடன்படிக்கையைத் தம்␢ உடலில் நிலைக்கச் செய்தார்;␢ சோதிக்கப்பட்டபோது பற்றுறுதி␢ கொண்டவராக விளங்கினார்.⁾ 21⁽ஆதலால் அவருடைய␢ வழிமரபு வழியாக␢ மக்களினங்களுக்கு ஆசி␢ வழங்குவதாகவும், நிலத்தின்␢ புழுதியைப்போல் அவருடைய␢ வழிமரபைப் பெருக்குவதாகவும்,␢ விண்மீன்களைப் போல்␢ அவர்களை உயர்த்துவதாகவும்,␢ ஒரு கடலிலிருந்து மற்றொரு␢ கடல்வரைக்கும், யூப்பிரத்தீசு␢ ஆற்றிலிருந்து நிலத்தின்␢ கடையெல்லைவரைக்கும் உள்ள␢ நிலப்பரப்பை அவர்களுக்கு␢ உரிமைச்சொத்தாக அளிப்பதாகவும்␢ கடவுள் அவருக்கு ஆணையிட்டு␢ உறுதி கூறினார்.⁾ 22⁽ஈசாக்கிடமும், அவருடைய தந்தை␢ ஆபிரகாமை முன்னிட்டு␢ அந்த உறுதிமொழியைக்␢ கடவுள் புதுப்பித்தார்.⁾ 23⁽எல்லா மனிதருடைய ஆசியும்␢ உடன்படிக்கையும் யாக்கோபின்␢ தலைமீது தங்கச் செய்தார்;␢ தம் ஆசிகளால் அவரை␢ உறுதிப்படுத்தினார்; நாட்டை அவருக்கு␢ உரிமைச் சொத்தாக வழங்கினார்;␢ அவருடைய பங்குகளைப் பிரித்தார்;␢ பன்னிரு குலங்களுக்கிடையே␢ அவற்றைப் பகிர்ந்து கொடுத்தார்.⁾