சீராக் 49

முந்திய அடுத்த
1⁽இறைவாக்கினர் எலியா␢ நெருப்புபோல் எழுந்தார்;␢ தீவட்டிபோல் அவருடைய␢ சொல் பற்றியெரிந்தது.⁾ 2⁽மக்கள் மீது பஞ்சம் வரச் செய்தார்;␢ தம் பற்றார்வத்தால் அவர்களை␢ எண்ணிக்கையில் சிலராக்கினார்.⁾ 3⁽ஆண்டவருடைய சொல்லால்␢ வானம் பொழிவதை நிறுத்தினார்;␢ மும்முறை நெருப்பு விழச் செய்தார்.⁾ 4⁽எலியாவே, உம்முடைய␢ வியத்தகு செயல்களில் நீர்␢ எத்துணை மாட்சிக்குரியவர்!␢ உமக்கு இணையாய் யார்␢ பெருமை பாராட்டக்கூடும்?⁾ 5⁽இறந்தவரை உன்னத␢ இறைவனின் சொல்லால்␢ இறப்பினின்றும் பாதாளத்தினின்றும்␢ எழச்செய்தீர்.⁾ 6⁽மன்னர்களை அழிவுக்கு␢ உட்படுத்தினீர்; மேன்மை␢ மிக்கவர்களைப் படுத்த␢ படுக்கையாக்கி வீழ்த்தினீர்.⁾ 7⁽கடுஞ் சொல்லைச் சீனாய்␢ மலைமீதும் பழி வாங்கும்␢ தீர்ப்பை ஓரேபு மலைமீதும் கேட்டீர்.⁾ 8⁽பழிதீர்க்கும்படி மன்னர்களைத்␢ திருப்பொழிவு செய்தீர்;␢ உம் வழித்தோன்றல்களாக␢ இறைவாக்கினர்களை ஏற்படுத்தினீர்.⁾ 9⁽தீச்சூறாவளியில் நெருப்புக்␢ குதிரைகள் பூட்டிய தேரில்␢ நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர்.⁾ 10⁽ஆண்டவருடைய சினம்␢ சீற்றமாய் மாறுமுன்␢ அதைத் தணிப்பதற்கும்␢ தந்தையின் உள்ளத்தை␢ மகனை நோக்கித் திருப்புவதற்கும்␢ யாக்கோபின் குலங்களை␢ மீண்டும் நிலைநிறுத்துவதற்கும்␢ குறித்த காலங்களில்␢ நீர் கடிந்து கொள்வீர்␢ என்று எழுதப்பட்டுள்ளது.⁾ 11⁽உம்மைக் கண்டவர்களும்␢ உமது அன்பில் துயில்␢ கொண்டவர்களும் பேறுபெற்றோர்.␢ நாமும் வாழ்வது உறுதி.⁾ 12⁽எலியா சூறாவளி சூழ␢ மறைந்தார்;␢ எலிசா அவருடைய␢ ஆவியால் நிறைவுபெற்றார்;␢ எலிசா தம் வாழ்நாளில்␢ எந்தத் தலைவருக்கும்␢ அஞ்சவில்லை;␢ அவரை அடிபணிய வைக்க␢ எவராலும் முடியவில்லை.⁾ 13⁽அவரால் முடியாதது ஒன்றுமில்லை;␢ இறந்த பிறகும் அவரது␢ உடல் இறைவாக்கு உரைத்தது.⁾ 14⁽அவர் தம் வாழ்நாளில்␢ அரியன செய்தார்;␢ இறப்பில் அவருடைய செயல்கள்␢ வியப்புக்குரியனவாய் இருந்தன.⁾ 15⁽இவை யாவும் கண்டும்␢ மக்கள் மனம் மாறவில்லை.␢ அவர்கள் கைதிகளாக␢ நாடு கடத்தப்பட்டு,␢ மண்ணுலகெங்கும்␢ சிதறடிக்கப்பட்டவரையிலும்␢ தங்கள் பாவங்களை␢ விட்டு விலகவில்லை.⁾ 16⁽மக்களுள் சிலரும் தாவீதின்␢ வீட்டைச் சேர்ந்த தலைவர்களும்␢ காப்பாற்றப்பட்டனர்;␢ அவர்களுள் சிலர் கடவுளுக்கு␢ விருப்பமானதைச் செய்தனர்;␢ வேறு சிலர் மேன்மேலும்␢ பாவம் செய்தனர்.⁾ 17⁽எசேக்கியா தம் நகரை அரண்␢ செய்து வலிமைப்படுத்தினார்;␢ அதன் நடுவே␢ தண்ணீர் கொண்டுவந்தார்;␢ இரும்புக் கருவிகளைக் கொண்டு␢ பாறையில் சுரங்க வழி அமைத்தார்;␢ தண்ணீர்த் தொட்டிகளை அமைத்தார்.⁾ 18⁽அவருடைய ஆட்சிக் காலத்தில்␢ சனகெரிபு படையெடுத்து வந்தான்;␢ இரபிசாகேயை அனுப்பிவிட்டுப்␢ பிரிந்து சென்றான்.␢ சீயோனை␢ ஒரு கை பார்த்துவிடுவதாக␢ அவன் சவால்விட்டான்;␢ இறுமாப்பினால் பெருமை␢ பாராட்டலானான்.⁾ 19⁽இஸ்ரயேலருடைய உள்ளங்களும்␢ கைகளும் நடுங்கின.␢ பேறுகாலப் பெண்களைப்போல்␢ அவர்கள் துன்பம் அடைந்தார்கள்.⁾ 20⁽அவர்கள் இரக்கமுள்ள␢ ஆண்டவரை நோக்கித் தங்கள்␢ கைகளை விரித்து அவரைத் துணைக்கு␢ அழைத்தார்கள். தூய இறைவன்␢ விண்ணகத்திலிருந்து அவர்களுக்கு␢ உடனே செவிசாய்த்தார்;␢ எசாயா வழியாய் அவர்களை விடுவித்தார்.⁾ 21⁽அசீரியர்களுடைய பாசறையைத்␢ தாக்கினார்; வானதூதர்␢ அவர்களைத் துடைத்தழித்தார்.⁾ 22⁽ஆண்டவருக்கு விருப்பமானதை␢ எசேக்கியா செய்தார்;␢ பெரியவரும் காட்சிகளைக்␢ கண்டவருமான நம்பிக்கைக்குரிய␢ இறைவாக்கினர் எசாயா␢ கட்டளையிட்டபடி எசேக்கியா␢ தம் மூதாதையாகிய தாவீதின்␢ நெறிகளில் உறுதியாக நின்றார்.⁾ 23⁽எசாயா காலத்தில் கதிரவன்␢ பின் நோக்கிச் சென்றான்.␢ அவர் மன்னருடைய வாழ்வை␢ நீடிக்கச் செய்தார்.⁾ 24⁽ஆவியின் ஏவதலால்␢ இறுதியில் நிகழவிருப்பதைக்␢ கண்டார்; சீயோனில்␢ புலம்பியழுதவர்களைத் தேற்றினார்.⁾ 25⁽இறுதிக் காலம் வரை␢ நிகழவிருப்பனவற்றையும்␢ மறைந்திருப்பனவற்றையும் அவை␢ நடப்பதற்குமுன்னரே␢ வெளிப்படுத்தினார்.⁾