திருப்பாடல்கள் 101

முந்திய அடுத்த
1⁽இரக்கத்தையும் நீதியையும்␢ குறித்துப் பாடுவேன்;␢ ஆண்டவரே, உமக்கே புகழ்␢ சாற்றிடுவேன்.⁾ 2⁽மாசற்ற வழியே நடப்பதில்␢ நான் கருத்தாயிருக்கிறேன்;␢ எப்பொழுது நீர் என்னிடம் வருவீர்?␢ தூய உள்ளத்தோடு␢ என் இல்லத்தில் வாழ்வேன்.⁾ 3⁽இழிவான எதையும்␢ என் கண்முன் வைக்கமாட்டேன்.␢ நெறிதவறியவரின் செயலை␢ நான் வெறுக்கின்றேன்;␢ அது என்னைப் பற்றிக்கொள்ளாது.⁾ 4⁽வஞ்சக நெஞ்சம் எனக்கு␢ வெகு தொலைவில் இருக்கும்;␢ தீதான எதையும் நான் அறியேன்.⁾ 5⁽தமக்கு அடுத்திருப்போரை␢ மறைவாகப் பழிப்போரை␢ நான் ஒழிப்பேன்;␢ கண்களில் இறுமாப்பும்␢ உள்ளத்தில் செருக்கும்␢ உள்ளோரின் செயலை␢ நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்;⁾ 6⁽நாட்டில் நம்பிக்கைக்குரியோரைக்␢ கண்டுபிடித்து␢ என்னோடு வாழச் செய்வேன்;␢ நேரிய வழியில் நடப்போரை␢ எனக்குப் பணிவிடை புரியச் செய்வேன்;⁾ 7⁽வஞ்சனை செய்வோருக்கு␢ என் மாளிகையில் இடமில்லை.␢ பொய் உரைப்போர்␢ என் கண்முன் நிலைப்பதில்லை.⁾ 8⁽நாட்டிலுள்ள பொல்லார் அனைவரையும்␢ நாள்தோறும் அழிப்பேன்;␢ ஆண்டவரின் நகரினின்று␢ தீங்கிழைப்போரை ஒழிப்பேன்.⁾