திருப்பாடல்கள் 86

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே! எனக்குச்␢ செவிசாய்த்துப் பதிலளியும்;␢ ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.⁾ 2⁽என் உயிரைக் காத்தருளும்;␢ ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;␢ உம் ஊழியனைக் காத்தருளும்;␢ நீரே என் கடவுள்! நான் உம்மீது␢ நம்பிக்கை கொண்டுள்ளேன்.⁾ 3⁽என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;␢ ஏனெனில், நான் முழுவதும்␢ உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.⁾ 4⁽உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;␢ என் தலைவரே! உம்மை நோக்கி␢ என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.⁾ 5⁽ஏனெனில் என் தலைவரே!␢ நீர் நல்லவர்; மன்னிப்பவர்;␢ உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்␢ பேரன்பு காட்டுபவர்.⁾ 6⁽ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்␢ செவிகொடும்;␢ உம் உதவியை நாடும்␢ என் குரலைக் கேட்டருளும்.⁾ 7⁽என் துன்ப நாளில்␢ உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;␢ நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.⁾ 8⁽என் தலைவரே! தெய்வங்களுள்␢ உமக்கு நிகரானவர் எவருமில்லை.␢ உமது செயல்களுக்கு ஒப்பானவை␢ எவையுமில்லை.⁾ 9⁽என் தலைவரே! நீர் படைத்த␢ மக்களினத்தார் அனைவரும்␢ உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;␢ உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.⁾ 10⁽ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;␢ வியத்தகு செயல்கள் புரிபவர்;␢ நீர் ஒருவரே கடவுள்!⁾ 11⁽ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப␢ நான் நடக்குமாறு␢ உமது வழியை எனக்குக் கற்பியும்,␢ உமது பெயருக்கு அஞ்சுமாறு␢ என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.⁾ 12⁽என் தலைவரே! என் கடவுளே!␢ என் முழு இதயத்தோடு␢ உம்மைப் புகழ்வேன்;␢ என்றென்றும் உமது பெயருக்கு § மாட்சி அளிப்பேன்.⁾ 13⁽ஏனெனில், நீர் என்மீது காட்டிய␢ அன்பு பெரிது!␢ ஆழமிகு பாதாளத்தினின்று␢ என்னுயிரை விடுவித்தீர்!⁾ 14⁽கடவுளே! செருக்குற்றோர்␢ எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;␢ கொடியோர் கூட்டம்␢ என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;␢ அவர்களுக்கு உம்மைப்பற்றிய␢ நினைவே இல்லை.⁾ 15⁽என் தலைவரே!␢ நீரோ இரக்கமிகு இறைவன்;␢ அருள் மிகுந்தவர்;␢ விரைவில் சினமுறாதவர்;␢ பேரன்பும் உண்மையும்␢ பெரிதும் கொண்டவர்.⁾ 16⁽என்னைக் கண்ணோக்கி␢ என்மீது இரங்கும்;␢ உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;␢ உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.⁾ 17⁽நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை␢ எனக்கு அருளும்;␢ என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;␢ ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே␢ எனக்குத் துணைசெய்து␢ ஆறுதல் அளித்துள்ளீர்.⁾