திருப்பாடல்கள் 108

முந்திய அடுத்த
1⁽என் உள்ளம் உறுதியாய்␢ இருக்கின்றது;␢ கடவுளே! என் உள்ளம்␢ உறுதியாய் இருக்கின்றது;␢ நான் பாடுவேன். § உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.␢ என் நெஞ்சே! விழித்தெழு;⁾ 2⁽வீணையே! யாழே! விழித்தெழுங்கள்;␢ வைகறையை விழித்தெழச் செய்வேன்.⁾ 3⁽ஆண்டவரே, மக்களினங்களிடையே␢ உமக்கு நன்றி செலுத்துவேன்;␢ எல்லா இனத்தாரிடையேயும்␢ உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.⁾ 4⁽ஏனெனில், வானளவு உயர்ந்துள்ளது␢ உமது பேரன்பு!␢ முகில்களைத் தொடுகின்றது␢ உமது உண்மை!⁾ 5⁽கடவுளே! வானங்களுக்கு மேலாக␢ நீர் உயர்வு பெறுவீராக!␢ பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக!⁾ 6⁽உம் அன்பர்கள் விடுதலை பெறுமாறு␢ உமது வலக்கையால்␢ அவர்களுக்குத் துணை செய்யும்!␢ என் விண்ணப்பத்திற்குப் பதிலளியும்!⁾ 7⁽கடவுள் தமது தூயகத்தினின்று␢ இவ்வாறு உரைத்தார்;␢ “வெற்றிக் களிப்பிடையே␢ செக்கேமைப் பங்கிடுவேன்;␢ சுக்கோத்துப் பள்ளத்தாக்கை␢ அளந்து கொடுப்பேன்!⁾ 8⁽கிலயாது என்னுடையது;␢ மனாசேயும் என்னுடையதே;␢ எப்ராயிம் என் தலைச்சீரா,␢ யூதா என் செங்கோல்!⁾ 9⁽மோவாபு! எனது பாதங்கழுவும் பாத்திரம்;␢ ஏதோமின்மீது␢ எனது மிதியடியை எறிவேன்;␢ பெலிஸ்தியாவை வென்று ஆர்ப்பரிப்பேன்!”⁾ 10⁽அரண்சூழ் நகரினுள்␢ என்னை இட்டுச் செல்பவர் யார்?␢ ஏதோம்வரைக்கும்␢ என்னைக் கூட்டிச் செல்பவர் யார்?⁾ 11⁽கடவுளே! நீர் எங்களைக்␢ கைவிட்டு விட்டீர் அன்றோ?␢ கடவுளே! நீர் எங்கள் படைகளோடு␢ புறப்படவில்லை அன்றோ?⁾ 12⁽எதிரியை மேற்கொள்ள␢ எங்களுக்கு உதவும்;␢ மனிதர் தரும் உதவியோ வீண்;⁾ 13⁽கடவுளின் துணையால்␢ வீரத்துடன் போரிடுவோம்;␢ அவரே நம் எதிரிகளை மிதித்துவிடுவார்.⁾