திருப்பாடல்கள் 3

முந்திய அடுத்த
1⁽ஆண்டவரே, என் எதிரிகள்␢ எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்!␢ என்னை எதிர்த்து எழுவோர்␢ எத்தனை மிகுந்து விட்டனர்!⁾ 2⁽‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’␢ என்று என்னைக் குறித்துச்␢ சொல்வோர் பலர். (சேலா)⁾ 3⁽ஆயினும், ஆண்டவரே,␢ நீரே எனைக் காக்கும் கேடயம்;␢ நீரே என் மாட்சி; என்னைத்␢ தலைநிமிரச் செய்பவரும் நீரே.⁾ 4⁽நான் உரத்த குரலில்␢ ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;␢ அவர் தமது திருமலையிலிருந்து␢ எனக்குப் பதிலளிப்பார். (சேலா)⁾ 5⁽நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;␢ ஏனெனில்,␢ ஆண்டவரே எனக்கு ஆதரவு.⁾ 6⁽என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்␢ பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.⁾ 7⁽ஆண்டவரே, எழுந்தருளும்;␢ என் கடவுளே, என்னை மீட்டருளும்;␢ என் எதிரிகள் அனைவரையும்␢ கன்னத்தில் அறையும்!␢ பொல்லாரின் பல்லை உடையும்!⁾ 8⁽விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;␢ அவர்தம் மக்களுக்கு␢ ஆசி வழங்குவாராக! (சேலா)⁾