1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽ஆண்டவரே, உமது வல்லமையில்␢ அரசர் பூரிப்படைகின்றார்;␢ நீர் அளித்த வெற்றியில் § எத்துணையோ அவர் அக்களிக்கின்றார்!⁾
2⁽அவர் உள்ளம் விரும்பியதை␢ நீர் அவருக்குத் தந்தருளினீர்;␢ அவர் வாய்விட்டுக் கேட்டதை␢ நீர் மறுக்கவில்லை. (சேலா)⁾
3⁽உண்மையில் நலமிகு கொடைகள் ஏந்தி␢ நீர் அவரை எதிர்கொண்டீர்; § அவர் தலையில்␢ பசும்பொன்முடி சூட்டினீர்.⁾
4⁽அவர் உம்மிடம் வாழ்வு வேண்டி நின்றார்;␢ நீரும் முடிவில்லா நீண்ட ஆயுளை § அவருக்கு அளித்தீர்.⁾
5⁽நீர் அவருக்கு வெற்றியளித்ததால்␢ அவரது மாட்சிமை பெரிதாயிற்று;␢ மேன்மையையும் மாண்பையும்␢ அவருக்கு அருளினீர்,⁾
6⁽உண்மையாகவே,␢ எந்நாளும் நிலைத்திருக்கும்␢ ஆசிகளை அவர் பெற்றுள்ளார்;␢ உமது முகத்தை அவர் மகிழ்ச்சியுடன்␢ கண்டு களிக்கச் செய்தீர்.⁾
7⁽ஏனெனில், அரசர் ஆண்டவரில்␢ நம்பிக்கை வைக்கின்றார்;␢ உன்னதரின் பேரன்பினால்␢ அவர் அசைவுறாதிருப்பார்.⁾
8⁽உமது கை உம் எதிரிகளையெல்லாம்␢ தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை␢ உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.⁾
9⁽நீர் காட்சியளிக்கும்பொழுது,␢ அவர்களை நெருப்புச்சூளை ஆக்குவீர்;␢ ஆண்டவர் சினங்கொண்டு␢ அவர்களை அழிப்பார்;␢ நெருப்பு அவர்களை விழுங்கிவிடும்.⁾
10⁽அவர்கள் தலைமுறையைப்␢ பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;␢ அவர்கள் வழிமரபை␢ மனு மக்களிடமிருந்து எடுத்து விடுவீர்.⁾
11⁽உமக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தாலும்,␢ சதித்திட்டம் தீட்டினாலும்,␢ அவர்களால் வெற்றி பெற இயலாது.⁾
12⁽நீரோ அம்புகளை நாணேற்றி␢ அவர்களது முகத்தில் எய்வீர்;␢ அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்வீர்.⁾
13⁽ஆண்டவரே, உமது வலிமையோடு␢ எழுந்து வாரும்;␢ நாங்கள் உமது வல்லமையைப்␢ புகழ்ந்து பாடுவோம்.⁾