1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
147
148
149
150
1⁽வானங்கள் இறைவனின்␢ மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;␢ வான்வெளி அவர்தம் கைகளின்␢ வேலைப்பாட்டை விவரிக்கின்றது.⁾
2⁽ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு␢ அச்செய்தியை அறிவிக்கின்றது;␢ ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு␢ அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.⁾
3⁽அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை;␢ அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.⁾
4⁽ஆயினும், அவற்றின் அறிக்கை␢ உலகெங்கும் சென்றடைகின்றது; § அவை கூறும் செய்தி␢ உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது,␢ இறைவன் அங்கே கதிரவனுக்கு␢ ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.⁾
5⁽மணவறையிலிருந்து புறப்படும்␢ மணமகளைப் போல அது வருகின்றது;␢ பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல மகிழ்வோடு␢ அது தன் பாதையில் ஓடுகின்றது.⁾
6⁽அது வானத்தின் ஒரு முனையிலிருந்து␢ புறப்படுகின்றது; அதன் பாதை␢ மறுமுனைவரையிலும் செல்கின்றது;␢ அதன் வெப்பத்திற்கு␢ மறைவானது ஒன்றுமில்லை.⁾
7⁽ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;␢ அது புத்துயிர் அளிக்கின்றது.␢ ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;␢ எளியவருக்கு அது § ஞானம் அளிக்கின்றது.⁾
8⁽ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;␢ அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.␢ ஆண்டவரின் கட்டளைகள்␢ ஒளிமயமானவை;␢ அவை கண்களை ஒளிர்விக்கின்றன.⁾
9⁽ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;␢ அது எந்நாளும் நிலைத்திருக்கும்.␢ ஆண்டவரின் நீதிநெறிகள்␢ உண்மையானவை; § அவை முற்றிலும் நீதியானவை.⁾
10⁽அவை பொன்னினும்,␢ பசும் பொன்னினும் மேலாக␢ விலைமிக்கவை; தேனினும்,␢ தேனடையினின்று சிந்தும்␢ தெளி தேனினும் இனிமையானவை.⁾
11⁽அவற்றால் அடியேன்␢ எச்சரிக்கப்படுகின்றேன்;␢ அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு␢ மிகுந்த பரிசுண்டு.⁾
12⁽தம் தவறுகளை␢ உணர்ந்து கொள்பவர் யார்தாம்?␢ என் அறியாப் பிழைக்காக␢ என்னை மன்னியும்.⁾
13⁽மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து␢ உம் அடியானைக் காத்தருளும்.␢ அவர்கள் என்னை␢ ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்;␢ அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்;␢ பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.⁾
14⁽என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!␢ என் வாயின் சொற்கள்␢ உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;␢ என் உள்ளத்தின் எண்ணங்கள்␢ உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.⁾